கொழும்பிலும் மற்றும் நகர்ப்புறங்களிலும் இருந்ததை விட பன்மடங்கு விசாலமான தொழிலாளர் படையணி பெருந்தோட்டங்களிலேயே காணப்பட்டது. நகர்ப்புற தொழிலாளர் மத்தியில் குறைந்தபட்ச கல்வியறிவேனும் காணப்பட்டது. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் சிறிதுகூட கல்வி அறிவு இருக்கவில்லை. 1893 ஆம் ஆண்டு முதல் 1923 ஆம் ஆண்டு வரை சுமார் எட்டு பெரிய வேலை நிறுத்தப் போராட்டங்கள் (1893 அச்சுத் தொழிலாளர், 1896 சலவைத் தொழிலாளர், 1906 கருத்தை ஓட்டுபவர்கள், 1912 புகையிரத தொழிலாளர்கள், […]