பீலிவளை புதல்வன் தொண்டைமான் இளந்திரையன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் நாகநாட்டை ஆண்ட அரசர்கள் பௌத்தமதத்தைத் தழுவியிருந்தார்கள். இம்மன்னர்களின் மாண்புகளை மணிமேகலை எடுத்துரைக்கிறது. நாகநாட்டை ஆட்சிபுரியும் மன்னன் ‘வளைவாணன்’ (வளை எறிவதில் வல்லவன்) என்ற பெயரைக் கொண்டவன். அவனது மனைவியான அரசியின் பெயர், வாசமயிலை. அவர்களுக்குப் பிறந்த பெண், பீலிவளை. “நாக நாடு நடுக்கின் றாள்பவன் வாகை வேலோன் வளைவணன் தேவி வாச மயிலை வயிற்றுட் தோன்றிய பீலிவளை என்போள் பிறந்த […]
“நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடுபோகம், நீள்புகழ் மன்னும் புகார்நகர்!” -சிலப்பதிகாரம் I:21-22. நாகநாடு வரலாற்றுப் பதிவுகளில் நாகநாடு அன்றைய உலகின் செல்வச்செழிப்பும் சிறந்த வாழ்வும்கொண்ட ஒரு நாடாகக் கூறப்படுகிறது. அதனால்தான் சிலப்பதிகாரக் காவியத்தில் பூம்புகார் நகரின் பெருமையை விளக்கவந்த இளங்கோ அடிகள் “நாகர்களின் நெடிய நகரோடு விளங்கும் நாகநாட்டினோடு ஒப்பாக, போக வாழ்வு பரவிக் கிடக்கும் நீண்ட புகழ் நிறைந்த புகார்” எனக் கூறிச்சென்றிருக்கிறார். பண்டைய நாட்களில் இலங்கையின் வடபகுதி, […]
நிலவியல் பண்டைய யாழ்ப்பாணம் நாகநாடு (மணிமேகலை), நாகதீவு (வல்லிபுரப் பொற்சாசனம்), நாகதீப (மகாவம்சம்), நாகதீபோய் (தொலமி) ஆகிய பெயர்களால் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. பண்டைய யாழ்ப்பாணத்தில் நாகர்கள் வாழ்ந்தமையால் இப்பெயர்கள் யாவும் ‘நாக’ என ஆரம்பிக்கின்றன. அன்றைய நாகநாடு யாழ்ப்பாணக் குடாநாடு, அதற்கு மேற்கேயுள்ள சிறுதீவுகள், வடக்கிலுள்ள இலங்கையின் தாய் நிலத்தின் மூன்றில் ஒரு பகுதி ஆகிய நிலங்களைக் கொண்டிருந்தது. மகாவில்லாச்சியின் (மதவாச்சி) மேற்குக் கரையிலிருந்த அரிப்பிலிருந்து மகாவில்லாச்சியூடாக நாகபொக்கணைவரையும் ஒரு […]
அறிமுகம் இலங்கையில் பதின்மூன்றாம் நூற்றாண்டில் யாழ்ப்பாண அரசு தோன்றுவதற்கு முற்பட்டகால யாழ்ப்பாண வரலாற்றிற்கான சரித்திரச் சான்றுகள் மிக அருகியே காணப்படுகின்றன. புராணக் கதைகள், ஐதீகங்கள், ஆதாரமற்ற பழங்கதைகள் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண வரலாற்றைக் கூறும் ‘யாழ்ப்பாண வைபவமாலை’யின் ஆரம்பப் பகுதிகள் வரலாற்று ஆய்வாளர்களுக்கு பண்டையகால யாழ்ப்பாணம் தொடர்பான மிகவும் குறைவான செய்திகளையே தருகின்றன. வையா பாடல், கைலாய மாலை ஆகிய ஏடுகளும் யாழ்ப்பாணத்தின் தொடக்க காலத்தைப் பற்றிப் போதுமான […]