ஒரு கால்நடை வைத்தியராக இலங்கையின் கறவை மாடுகளின் நலன் தொடர்பாக அவதானித்தவை மற்றும் நடைமுறைகளை இந்தக் கட்டுரையில் ஆராயப் போகிறேன். உலகளாவிய ரீதியில் கறவை மாடுகள் மற்றும் ஏனைய விலங்குகளின் நலன் தொடர்பாக நவீன எண்ணக்கருக்களுடன் கூடிய சட்டங்கள் உள்ளதுடன் அந்தச் சட்டங்கள் மிக மிக இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. இலங்கையில் 1907 இல் பிரித்தானியர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட சட்டமான ‘Prevention of cruelty to animals ordinance’ (1907) நடைமுறையில் […]
இலங்கையில் மொத்தமாக உள்ள 1.6 மில்லியன் கறவை மாடுகளில் 405,001 மாடுகள் வடக்கிலும்; 542,805 மாடுகள் கிழக்கிலும் உள்ளன. நாட்டில் மொத்தமாக உள்ள 476,050 எருமை மாடுகளில் 24,164 எருமைகள் வடக்கிலும்; 234,782 எருமைகள் கிழக்கிலும் உள்ளன (கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள புள்ளிவிபரம் – 2022). பெரும்பான்மையான மாடுகள் வடக்கு – கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற போதும் அவற்றின் உற்பத்தித் திறன் குறைவாகவே காணப்படுகிறது (நாட்டில் மொத்தமாக வருடம் […]
இன்றைய நாட்களில் சமூக ஊடகங்களின் வகிபாகம் மிக முக்கியமானது. சகல துறைகளிலும் அதன் செல்வாக்கை் தவிர்க்க முடியாதுள்ளது. நல்லதோ கெட்டதோ சமூக ஊடகம் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. கால்நடை வளர்ப்புச் செயன்முறையும் இதற்கு விதிவிலக்கல்ல. இன்றைய நவீன கால்நடை வளர்பில் கணிசமான விடயங்களை சமூக ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்த முடிகிறது. இனிவருங் காலங்களின் அதன் பங்களிப்பு இன்னுமின்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தக் கட்டுரை கால்நடை வளர்ப்பு விரிவாக்கத்தில் சமூக ஊடகத்தின் பங்களிப்பை ஆராய்கிறது. […]
இன்றைய நவீன உலகில் செயற்கை நுண்ணறிவு நுழையாத இடமே இல்லை எனலாம். செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் முன்னைய காலத்தில் மனிதனால் செய்யவே முடியாது எனக் கருதப்பட்ட பல காரியங்களைச் செய்ய முடிகிறது. அதீத உழைப்புடன் செய்யப்பட்ட பல காரியங்களையும் இலகுவாகச் செய்ய முடிகிறது. இந்தக் கட்டுரை கறவை மாடு வளர்ப்பில் செயற்கை நுண்ணறிவின் (Artificial intelligence – AI) இன்றைய பயன்பாட்டையும், நாளைய எதிர்பார்ப்பையும் ஆராய்கிறது. அதிகரித்துவரும் மனிதச் சனத்தொகை […]
இனப் பிரச்சினையும் அதனோடு இணைந்த யுத்தமும் எமது தமிழர் தாயகப் பகுதியின் பொருளாதார வளர்ச்சியை பல தசாப்தங்களுக்கு பின்தள்ளி விட்டது. குறிப்பாக விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி போன்றவற்றை சூனிய நிலைக்கு இறக்கியிருந்தது எனலாம். இந்தப் பின்னடைவு இலங்கையின் மொத்தத் தேசிய உற்பத்தியில் (GDP) வடக்கு, கிழக்கின் பங்களிப்பை புறக்கணிக்கும் அளவுக்கு மாற்றி இருந்தது. கொடிய யுத்தம் மரணங்களை ஏற்படுத்தியதோடு ஏராளமான அங்கவீனர்களையும் உருவாக்கியுள்ளது. அத்துடன் பல ஆயிரம் பெண் […]
இலங்கையின் கறவை மாடுகளை பல தொற்று நோய்கள் பாதிக்கின்றன. அவற்றுள் கால்வாய் நோய் (foot and mouth disease), தொண்டையடைப்பான் நோய் (Hemorrhagic septicemia), கருங்காலி நோய் (Black quarter), லம்பி தோல் கழலை நோய் (lumpy skin disease), புருசெல்லா கருச்சிதைவு நோய் (Brucellosis), மடியழற்சி நோய்கள் (Mastitis), குடற்புழு நோய்கள் (gastro intestinal worms) என்பன குறிப்பிடத்தக்கன. இந்த நோய்கள் கறவை மாடுகளைப் பாதித்து அவற்றின் உற்பத்தியைப் […]
கடந்த கட்டுரையில் கறவை மாடு வளர்ப்பின் போது தோன்றும் இனப்பெருக்கம் சார்ந்த பல பிரச்சனைகளை ஆராய்ந்திருந்தேன். இந்தக் கட்டுரையும் அதன் நீட்சியே. எனினும் தீர்வுகளை மையப்படுத்திய கட்டுரையாக அமைகிறது. கறவை மாடுகள் சினை பிடிக்காமைக்கும் ஏனைய இனப்பெருக்கம் சார்ந்த பல பிரச்சினைகளுக்கும் வெப்ப அயர்ச்சி (Heat stress) மிக முக்கியமான ஒரு காரணியாகும். அண்மைக் காலங்களில் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் முன்பு இருந்ததை விட அதிக வெப்பநிலை நிலவுகிறது. உலக […]
கறவை மாடு வளர்ப்பில் இனப்பெருக்க முகாமைத்துவம் மிக முக்கியமானது. ஒரு மாடு சினைப்பட்டு கன்றை ஈனும் போதுதான் பால் கிடைக்கும். வளர்ப்பதற்கு கன்றுகள் கிடைக்கும். எனவே கறவை மாடு வளர்ப்பின் முக்கிய அடிப்படையே மாடுகள் சினைப்படுவது தான். இயற்கையில் மாடுகள் சினைப்படுதல் அவ்வளவு இலகுவானது கிடையாது. பல காரணிகளால் அச் செயற்பாடு தடைப்படுகின்றது; தாமதமடைகிறது. முன்னைய காலத்தில் இயற்கையில் பசுமாடுகளும் காளைகளும் ஒருங்கே காணப்பட்டு ஒரு விகிதத்தில் கன்றுகள் பிறந்தன. […]
கோடை காலத்தில் கறவை மாடுகள் பல்வேறு அசெளகரியங்களைச் சந்திக்கின்றன. இந்த நாட்களில் ஏற்படும் அதிகரித்த வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக ஏற்படும் நீர் மற்றும் தீவனத்தின் பற்றாக்குறை கால்நடைகளின் வழமையான உடலியல் தொழிற்பாடுகளை கடுமையாகப் பாதிக்கின்றன. இவற்றின் காரணமாக பால் உற்பத்தி குறைதல், இனப்பெருக்க ஆற்றல் குறைதல், உடல் எடை குறைதல் போன்ற துர் விளைவுகள் ஏற்படுகின்றன. இதனால் இவற்றை நம்பி வாழும் பண்ணையாளர்கள் பொருளாதார ரீதியாக பின்னடைவைச் சந்திக்கின்றனர். […]
அண்மையில் ஒரு பண்ணையாளர் தனது 2 மாத பசுக்கன்று சுவாசிக்க கஷ்டப்படுவதாகவும் மூச்செடுக்கும் போது மூக்கில் இருந்து கடும் சத்தத்துடன் மஞ்சள் நிறச் சளி போன்ற திரவம் வருவதாகவும் என்னிடம் வந்திருந்தார். அவரது கன்று செயற்கை சினைப்படுத்தல் மூலம் பிறப்பிக்கப்பட்ட ஜெசி இனத்தைச் சார்ந்தது. சில நிமிட விசாரணையின் பின் அவரது கன்றின் நிலையையும் அதற்குரிய காரணத்தையும் உணரமுடிந்தது. கன்று பிறந்ததும் தாயிலிருந்து சுரக்கும் கடும்புப் பால் எனப்படும் colostrum […]