இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம் Archives - Page 2 of 3 - Ezhuna | எழுநா

இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம்

கால்நடைப் பண்ணைகள் தோல்வியடையும் வழிகள்

12 நிமிட வாசிப்பு | 11505 பார்வைகள்

அண்மையில் இணையவழி ஊடகமொன்றில் சாவகச்சேரி பகுதியில்  உள்ள கறவை மாட்டுப் பண்ணை தொடர்பான காணொளியை காணமுடிந்தது. 34 கலப்பின மாடுகளைக் கொண்ட அந்தப் பண்ணையில் பணியாற்றும் ஊழியர்களை ஊடகவியலாளர்கள் கலந்துரையாடல் செய்திருந்தார்கள். அங்குள்ள மாடுகள் உணவின்றி மெலிந்து போயிருந்தன. சிலது இறந்துமிருப்பதாக அந்தப் பண்ணையின் ஊழியர்கள் தெரிவித்திருந்தனர். இந்தக் கட்டுரை இது தொடர்பானதே. ஒரு நாணயத்தின் இரு பக்கமாக உரிமையாளரின் ஊதாசீனத்தையும் ஊழியர்களின் நிலையையும் ஆராயப் போகிறேன். எங்களது தொடருக்கு […]

மேலும் பார்க்க

பால் மா உற்பத்தியும் மனித நுகர்வும்

17 நிமிட வாசிப்பு | 12805 பார்வைகள்

இலங்கை மக்களில் பெரும்பாலானவர்களின் காலைத் தேநீரில் பால் சேர்க்கப்படுகிறது. எனினும் அதிகளவில் பொதி செய்யப்பட்ட பால் மா வடிவிலேயே சேர்க்கப்படுகிறது. திரவப் பால் வடிவில் அது சேர்க்கப்படுவது மிக மிகக் குறைவு. அதற்கு பல காரணங்கள் உள்ளன.  இலங்கையில் நுகரப்படும் பால் மா நியூசிலாந்து, அவுஸ்ரேலியா, டென்மார்க் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டே உள்ளூர் சந்தைக்கு விநியோகிக்கப்படுகிறது. பால் மா இறக்குமதிக்கே பல பில்லியன் டொலரை வெளிநாடுகளுக்கு வழங்க வேண்டியிருக்கிறது. இது  […]

மேலும் பார்க்க

சுத்தமான பாலுற்பத்தி

19 நிமிட வாசிப்பு | 8736 பார்வைகள்

இந்தக் கட்டுரை சுத்தமான பாலுற்பத்திச் செயற்பாட்டின் முக்கியத்துவத்தைப் பற்றி ஆராய்கிறது. பால் அதிகளவான ஊட்டச் சத்துக்களைக் கொண்ட உயிர்த் திரவமாகும். கறந்த பால் மிக விரைவாக பழுதடையக் கூடியது. பல நுண்ணங்கிகளின் செயற்பாட்டுக்கு மிகச் சிறந்த ஊடகமாக தொழிற்படக் கூடியது. இந்த நுண்ணங்கிகள் பல்கிப் பெருகி பாலின் கட்டமைப்பை பாதிக்க, பால் அதன் உறுதித் தன்மையில் இருந்து சிதையத் தொடங்குகிறது. இதன் காரணமாக பாலை சாதாரண சூழ்நிலையில் அறை வெப்பநிலையில் […]

மேலும் பார்க்க

எருமை வளர்ப்பு – ஒரு குறுக்கு வெட்டுப் பார்வை

23 நிமிட வாசிப்பு | 12090 பார்வைகள்

இந்த கட்டுரையில் எருமை வளர்ப்புத் தொடர்பான பல விடயங்களை ஆராயப் போகிறேன். இதற்கு இலங்கை, இந்தியா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளின் பல ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியீடுகளையும் பயன்படுத்தியுள்ளேன். பசு மாடுகளைப் போல எருமை மாடுகளிலிருந்தும்  மனித தேவைகளுக்கு கணிசமான அளவில் பால் மற்றும் இறைச்சி பெறப்படுகிறது. இன்று உலகில் அதிக பால் உற்பத்தியாகும் நாடான இந்தியாவில் பசுப் பாலை விட எருமைப் பாலே அதிகம் பெறப்படுகிறது. இந்தியாவைத் தவிர பாக்கிஸ்தான், […]

மேலும் பார்க்க

அமுல் எனும் வெண்மைப்புரட்சியின் தாரக மந்திரம்

10 நிமிட வாசிப்பு | 7527 பார்வைகள்

கூட்டுறவு மூலம் பாலுற்பத்தியில் தன்னிறைவு கண்ட ஒரு மக்கள் அமைப்பின் பெயர்தான் அமுல். இந்தியாவில் அமுல் என்ற பெயரும் அதன் விளம்பரச் சுட்டியான ஒரு குழந்தையும் மிகவும் பிரபலமானவை. அமுல் என்ற பெயரைக் கேட்டவுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  வாயில் எச்சில் ஊறும். அமுல் என்றால் இந்தியாவின் பாற் பொருட்கள் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கேடா மாவட்டத்தின் ஆனந்த் நகரினை தலைமை இடமாக கொண்டு செயற்படும் […]

மேலும் பார்க்க

இஸ்ரேல் நாட்டின் பாலுற்பத்தி துறை சொல்லும் செய்தி

13 நிமிட வாசிப்பு | 10153 பார்வைகள்

இஸ்ரேல் எனும்போது  எமக்கு உடனடியாக பல அரசியல் விடயங்கள் நினைவுக்கு வரும். நீண்டகால பலஸ்தீன – இஸ்ரேல் மோதல், ஹிட்லரின்  யூத இனச் சுத்திகரிப்பின் பின் உருவாகிய நாடு, பலம்மிக்க இஸ்ரேலிய இராணுவம் என பல விடயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இவற்றைவிட விவசாயத்தில், குறிப்பாக விலங்கு வேளாண்மையில் இஸ்ரேலியர் அடைந்திருக்கும் சாதனையை  எம்மில் பலர் அறிந்திருக்க மாட்டார்கள். இன்றைய நிலையில் ஒரு இஸ்ரேலியப் பசு, 305 நாட்களைக் கொண்ட […]

மேலும் பார்க்க

நுண்ணுயிர்க் கொல்லிகளின் எதிர்ப்பு நிலை – கால்நடை மருத்துவத்தின் நிலைப்பாடு

11 நிமிட வாசிப்பு | 6708 பார்வைகள்

அறிமுகம் மனிதர்களிலும் விலங்குகளிலும் நோய் சிகிச்சைக்கும் நோய்கள் வராமல் தடுப்பதற்கும் நுண்ணுயிர்க் கொல்லிகள் [Antibiotics] பயன்படுத்தப்படுகின்றன. பல வருடங்களாக ஆபத்தான நுண்ணுயிர்களால் [Bacteria] ஏற்பட்ட மிகக் கொடிய  நோய்களில் இருந்து மனிதர்களையும் விலங்குகளையும் பாதுகாத்த மேற்படி நுண்ணுயிர்க் கொல்லிகள் அண்மை நாட்களில் பயனற்றவையாக மாற்றமடைந்து  வருகின்றன. குறிப்பாக, நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்பு நிலை [Antibiotic resistant] பெரும்பாலான நுண்ணுயிர்க்  கொல்லி மருந்துகளுக்கு தோன்றியுள்ளது. நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்பான நுண்ணுயிர்களின் அதிகரிப்பு […]

மேலும் பார்க்க

இலங்கையில் மாடறுப்புத் தடை – பொருளாதாரத் தாக்கங்கள், சவால்கள், தீர்வுகள்

10 நிமிட வாசிப்பு | 10205 பார்வைகள்

சில வருடங்களுக்கு முன் மகிந்த ராஜபக்ச பிரதமராக இருந்தபோது  நடைமுறையிலுள்ள ஐந்து சட்டங்களைத் திருத்தம் செய்வதன்  [Amendment] மூலம் சட்ட ரீதியாக மாடறுப்பைத் தடை செய்ய முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். ஒரு  அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்குரிய அனுமதியையும் அவர்  பெற்றதோடு சட்ட திருத்த நடவடிக்கைகளும் முழு வீச்சில் இடம்பெற்று, நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில்  ஆட்சி மாற்றம் இடம்பெற்ற காரணத்தால் அந்தத்திட்டம் சற்று கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஒரு பொதுத் தேர்தலில் ஆளும் பொதுஜன […]

மேலும் பார்க்க

கால்நடைகளைக் கொல்லும் சட்ட விரோத சிகிச்சையாளர்கள்

15 நிமிட வாசிப்பு | 7813 பார்வைகள்

அண்மைக் காலமாக மனித மருத்துவம் சார்ந்த போலி மருத்துவர்கள், போலி சிகிச்சை நிலையங்கள் தொடர்பாகக் கரிசனை வெளியிடப்படுகிறது. ஊடகங்கள் அது தொடர்பான செய்திகளை முன்னுரிமைப்படுத்துகின்றன. மனித மருத்துவத்தைப் போல விலங்கு மருத்துவத்தில் ஏராளமான போலி மருத்துவர்கள், போலி சிகிச்சை நிலையங்கள் உள்ளமையும் அதனால் ஏற்படும் மனித மற்றும் விலங்குகளில் ஆரோக்கியத்தில் ஏற்படும் சவால்களையும் இந்தக் கட்டுரையில் சுட்டிக் காட்டுகின்றேன். இலங்கையைப் பொறுத்தவரை விலங்கு மருத்துவ விஞ்ஞானக் கற்கைநெறி பேராதனைப் பல்கலைக்கழகத்தின் […]

மேலும் பார்க்க

மாடுகளைப் பாதிக்கும் லம்பி தோல் நோய்

11 நிமிட வாசிப்பு | 10361 பார்வைகள்

2020-21 களில் நாடு முழுவதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்திய லம்பி தோல் நோய் [Lumpy skin disease]  எனும் ஒரு வகை பெரியம்மை நோய் மீளவும் இந்த வருடம் (2023 இல்) வளர்ப்பு மாடுகளைப் பாதித்திருக்கிறது. மாடுகளின் உடல் முழுதும் சிறியது முதல் பெரியது வரையான வீக்கங்களை உருவாக்கும்  இந்த நோய் கடந்த முறையை விட மாறுபட்ட விதத்தில் சற்று வீரியத்துடன்  மாடுகளைப் பாதிக்கத் தொடங்கியுள்ளது. மாடு வளர்ப்பாளர்களின் பொருளாதாரத்தைக் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)