இலங்கையின் பாலுற்பத்திக் குறைவில், கால்நடைகளில் ஏற்படும் குடற்புழுக்களின் தாக்கம் முக்கிய பங்கை வகிக்கிறது. குடற்புழுக்கள் கால்நடைகளின் குடல், இரப்பை போன்ற உறுப்புகளில் இருந்துகொண்டு ஊட்டச்சத்துகளையும் இரத்தத்தையும் உறிஞ்சுவதுடன் ஏராளமான நோய்கள் ஏற்படுவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துகின்றன. இவற்றைத் அழிக்கும் முறையான நீக்க மருந்துகளை எமது பண்ணையாளர்கள் வழங்குவதில்லை. குடற்புழு நீக்கம் என்னும் மிக முக்கியமான முகாமைத்துவ நடவடிக்கையை புறக்கணிப்பதால் பல கால்நடைகள் உற்பத்தி மட்டத்தில் குறைவடைவதுடன் கணிசமான அளவில் இறந்தும் […]
கடந்த சில வருடங்களாக கால்நடைகள் மற்றும் மேய்ச்சல் தரை தொடர்பான பல செய்திகளை ஊடகங்கள் வழியாக அவதானிக்க முடிகிறது. செய்தி 1 – மட்டக்களப்பின் எல்லைப் பகுதியில் கால்நடைகளின் மேய்ச்சல் தரைகள் அபகரிக்கப்படுவதாக அங்குள்ள கால்நடை வளர்ப்பாளர்களும் அரசியல்வாதிகளும் அரசுடன் போராடுவதை காண முடிகிறது. செய்தி 2 – கிளிநொச்சி மாடுகள் முறிகண்டிப் பகுதியில் கூட்டம் கூட்டமாக மேய்க்கப்படுவதாகவும் அவை முறிகண்டிப் பகுதி விவசாய நிலங்களில் மேய்ந்து நாசமாக்குவதாகவும் முறைப்பாடு […]
மாடு ஆடு போன்ற கால்நடைகள் இயற்கையில் கிடைக்கும் புற்களை செரிமானம் செய்யத் தக்க உணவுக் கால்வாய் தொகுதியை கொண்டவை. குறிப்பாக அவற்றின் அசையூன் இரப்பையில் உள்ள நுண்ணுயிர்கள் [Rumen microbes] புற்களில் உள்ள நார்ச்சத்தையும் [fiber] ஏனைய உயிர்ச்சத்துகளையும் சமிபாடடையச் செய்வதன் மூலம் தேவையான சத்துக்களை பெற்றுக் கொள்கின்றன. ஆரம்ப காலத்தில் மாடுகள் முற்று முழுதாக புற்களையும் மர இலைகளையும் செடிகளையும் நம்பியே வாழ்ந்தன. மனிதனின் பயன்பாட்டுக்கு கால்நடைகள் வந்த […]
இலங்கையிலுள்ள பசு மாடுகளும் எருமை மாடுகளும் அதிகளவு உள்ளூர் வகையை சேர்ந்தவை. அவற்றின் சாராசரி உற்பத்தி ஒரு லீட்டருக்கும் குறைவாகும். இந்த மாடுகளைக் கொண்டு எதிர்பார்த்த பாலுற்பத்தியை பெற்று தன்னிறைவு காண முடியாது. [இலங்கையைப் பொறுத்த வரையில் வருடாந்தம் 1250 மில்லியன் லீட்டர் பால் தேவைப்படுகின்ற போதும் உள்ளூரில் 500 மில்லியன் லீட்டர் அளவிலேயே பால் உற்பத்தி செய்யப் படுகிறது. மிகுதி 750 மில்லியன் லீட்டர் பால் வெளிநாடுகளில் இருந்தே […]
[இலங்கையின் பாலுற்பத்தி தொடர்பான இந்த கட்டுரைத் தொடர் தற்போது இலங்கையில் நிலவும் பொருளாதாரப் பின்னடைவுக்கு முந்தைய விடயங்களையே அதாவது சாதாரண நிலையில் உள்ள விடயங்களையே ஆராய்கிறது. அண்மைய பொருளாதார நெருக்கடி பாலுற்பத்திக் கட்டமைப்பை எந்த வகையில் பாதிக்கின்றது என்பதை இந்தத் தொடரின் பிறிதொரு கட்டுரையில் தனியாக ஆராய்வோம். இங்கு தரப்படும் புள்ளி விபரங்கள் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முந்தியவை] இலங்கையில் 1977 ஆண்டில் திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட முன்னர் […]
இலங்கையில் இறக்குமதியாகும் பால்மாவின் விலை அதிகரித்துள்ளது. சில மாதங்களுக்கு முதல் 380 /= ரூபாவாக இருந்த 400 கிராம் பால்மா இன்று 1160/= வரை அதிகரித்துள்ளது. [ஏறக்குறைய மூன்று மடங்கு அதிகரிப்பு]. இது சாதாரண மக்கள் நுகரமுடியாத அதிகரிப்பாகும். அத்துடன் வழமையாக கிராமத்தின் பெட்டிக் கடைகளிலும் இலகுவாகக் கிடைக்கக் கூடிய பால் மாவை நகரங்களின் பிரதான பல்பொருள் அங்காடிகளிலும் பெறமுடியாது மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். கடந்த பல மாதங்களாகவே […]
கால்நடை வளர்ப்பு கிராமியப் பொருளாதாரத்தில் மிக முக்கியமான கூறாகும். இலங்கையின் கால்நடை வளர்ப்பின் மிக முக்கியமான கூறுகளான மாடு வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பைப் பற்றிய தொடராக இது அமையப்போகிறது. கால்நடை வளர்ப்புப் பொருளாதாரத்தின் அடிப்படைகள், சவால்கள், தீர்வுகள் ஏனைய நாடுகளின் நிலைமைகளை ஒப்பீடு செய்தல் என இது அமையப்போகிறது. மக்களின் மிக முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்கும் கோழி வளர்ப்பு இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதையும் […]