யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வரலாற்றுத் தகவல் மூலங்களாக நிலப்படங்கள் Archives - Ezhuna | எழுநா

யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வரலாற்றுத் தகவல் மூலங்களாக நிலப்படங்கள்

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் – கோப்பாய்

11 நிமிட வாசிப்பு | 2405 பார்வைகள்

சென்ற கட்டுரையில் நல்லூர்க் கோவிற்பற்றுத் தொடர்பாக நிலப்படம் தரும் தகவல்களைப் பார்த்தோம். இனி வலிகாமப் பிரிவின் இன்னொரு கோவிற்பற்றான கோப்பாயைப் பற்றி ஆராயலாம். இக் கோவிற்பற்றில் கோப்பாய், இருபாலை, உரும்பிராய், ஊரெழு, நீர்வேலி ஆகிய ஐந்து துணைப் பிரிவுகள் உள்ளதாக நிலப்படத்திலுள்ள விளக்கக் குறிப்பில் தகவல் இருந்தாலும், நிலப்படம் இருபாலையைத் தனியான பிரிவாக எல்லை குறித்துக் காட்டவில்லை (படம்-1). கோப்பாய், இருபாலை ஆகிய இரண்டு துணைப் பிரிவுகளையும் கோப்பாய்த் துணைப் […]

மேலும் பார்க்க

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் – நல்லூர்

11 நிமிட வாசிப்பு | 3120 பார்வைகள்

சென்ற கட்டுரையில் சுண்டிக்குழிக் கோவிற்பற்றுத் தொடர்பாக நிலப்படத்தில் உள்ள விவரங்களைப் பற்றிப் பார்த்தோம். இனிப் போர்த்துக்கேயருக்கு முன் தலைநகரமாக இருந்த நல்லூரை உள்ளடக்கிய நல்லூர்க் கோவிற்பற்றைப் பற்றி ஆராயலாம். இக் கோவிற்பற்றில் நல்லூர், தின்னவேலி (திருநெல்வேலி), கொக்குவில், கோண்டாவில் ஆகிய நான்கு துணைப் பிரிவுகள் உள்ளன.  லெயுசிக்காமின் நிலப்படத்திலுள்ள நல்லூர்க் கோவிற்பற்றின் எல்லைகளைப் பார்க்கும்போது அது முழுவதும் இன்றைய நல்லூர் பிரதேசச் செயலர் பிரிவுக்குள் அடங்கியிருப்பதைக் காணமுடிகிறது. உள்ளூராட்சிப் பிரிவுகளைப் […]

மேலும் பார்க்க

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் – சுண்டிக்குழி

10 நிமிட வாசிப்பு | 3419 பார்வைகள்

சென்ற கட்டுரையில் வண்ணார்பண்ணைக் கோவிற்பற்றுத் தொடர்பாக நிலப்படத்தில் உள்ள விவரங்களைப் பற்றிப் பார்த்தோம். இனி யாழ்ப்பாண நகரத்தோடு எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் இன்னொரு கோவிற்பற்றான சுண்டிக்குழிக் கோவிற்பற்றைக் குறித்துப் பார்க்கலாம். இக் கோவிற்பற்றில் சுண்டிக்குழி, கரையூர், கொழும்புத்துறை, சிவியாதெரு, நளவபரவு, கடையகுடியிருப்பு என்னும் ஆறு துணைப் பிரிவுகள் இருந்ததாக நிலப்படம் காட்டுகிறது. (படம்-1) இவற்றுள் கரையூர் தற்காலத்தில் குருநகர் எனவும், சிவியாதெரு இப்போது அரியாலை எனவும் அழைக்கப்படுகின்றன. நளவபரவு, கடையகுடியிருப்பு என்னும் […]

மேலும் பார்க்க

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் – வண்ணார்பண்ணை

16 நிமிட வாசிப்பு | 4446 பார்வைகள்

சென்ற கட்டுரையில் லெயுசிக்காமின் வலிகாமப் பிரிவின் நிலப்படம் காட்டும் யாழ்ப்பாண நகரப் பகுதி பற்றிய தகவல்களைப் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் நகரப் பகுதிக்கு அண்மையில் உள்ள வண்ணார்பண்ணைக் கோவிற்பற்றுப் பிரிவைப் பற்றி மேற்படி நிலப்படம் தரும் தகவல்களைப் பற்றியும் அவற்றின் வரலாற்றுத் தொடர்புகளைப் பற்றியும் ஆராயலாம். வலிகாமத்திலுள்ள கோவிற்பற்றுகளுள் துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்படாத ஒரே கோவிற்பற்று வண்ணார்பண்ணையே. எல்லைகள் வண்ணார்பண்ணைக் கோவிற்பற்றின் தெற்கில் கடலேரியும் யாழ்ப்பாண நகரப் பகுதியும் எல்லைகளாக […]

மேலும் பார்க்க

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் – 2

14 நிமிட வாசிப்பு | 5356 பார்வைகள்

சென்ற கட்டுரையில் லெயுசிக்காம் தொகுப்பிலுள்ள, வலிகாமத்தைத் தனியாகக் காட்டும் நிலப்படத்தில் முழு வலிகாமத்துக்கும் தொடர்பான விடயங்களைப் பற்றிப் பார்த்தோம். தொடர்ந்து இனி வரும் கட்டுரைகளில் வலிகாமப் பிரிவுக்குள் அடங்கிய யாழ்ப்பாண நகரத்தையும் ஏனைய கோவிற்பற்றுப் பிரிவுகளையும் பற்றி ஆராயலாம். இந்தக் கட்டுரை யாழ்ப்பாண நகரப் பகுதியை எடுத்துக்கொண்டு, அப்பகுதி தொடர்பாக நிலப்படம் காட்டும் விடயங்களைக் குறித்தும், அவற்றோடு தொடர்புடைய சில வரலாற்றுத் தகவல்களைப் பற்றியும் விளக்குகிறது. யாழ்ப்பாண நகரப்பகுதி எல்லைகள் […]

மேலும் பார்க்க

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் – 1

17 நிமிட வாசிப்பு | 6188 பார்வைகள்

இந்தத் தொடரின் சென்ற கட்டுரையில் லெயுசிக்காம் நிலப்படத் தொகுப்பிலுள்ள யாழ்ப்பாணப் பட்டினத்தின் நான்கு பெரும்பிரிவுகளையும் தீவுகள் சிலவற்றையும் காட்டும் நிலப்படத்தின் சில அம்சங்கள் குறித்து ஆராய்ந்தோம். இனி யாழ்ப்பாணப் பட்டினத்தின் வலிகாமப் பிரிவைத் தனியாகக் காட்டும் நிலப்படம் (படம்-1) தரும் விவரங்களை ஆராயலாம். நெதர்லாந்தின் தேசிய ஆவணக் காப்பகத்தில் உள்ள லெயுசிக்காம் நிலப்படத் தொகுப்பின் ஒரு பகுதியான இந்த நிலப்படம் ‘4. VELH 328.14’ என்னும் இலக்கத்தைக் கொண்டது. “வலிகாமப் […]

மேலும் பார்க்க

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் யாழ்ப்பாணத்தின் நான்கு பிரிவுகளும் தீவுகளும்

14 நிமிட வாசிப்பு | 7306 பார்வைகள்

இந்தத் தொடரின் சென்ற இரண்டு கட்டுரைகளில் லெயுசிக்காம் நிலப்படத் தொகுப்பிலுள்ள யாழ்ப்பாணக் கட்டளையகத்தை முழுமையாகக் காட்டும் நிலப்படத்தின் சில அம்சங்கள் குறித்து ஆராய்ந்தோம். இனி யாழ்ப்பாணக் கட்டளையகத்தின் பல்வேறு பிரிவுகளை விவரமாகக் காட்டும் நிலப்படங்கள் தரும் தகவல்கள் குறித்துப் பார்க்கலாம்.  லெயுசிக்காமின் தொகுப்பில் யாழ்ப்பாணக் கட்டளையகத்தை முழுமையாகக் காட்டும் நிலப்படத்துக்கு அடுத்ததாக யாழ்ப்பாணப் பட்டினத்தின் நான்கு பிரிவுகளையும் அதற்கு அயலிலுள்ள தீவுகளையும் ஒருங்கே காட்டும் நிலப்படம் உள்ளது (படம்-1). ஒல்லாந்தின் […]

மேலும் பார்க்க

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் யாழ்ப்பாணக் கட்டளையகம் – 3

15 நிமிட வாசிப்பு | 5395 பார்வைகள்

இந்தத் தொடரின் சென்ற இரண்டு கட்டுரைகளில் லெயுசிக்காம் நிலப்படத் தொகுப்பிலுள்ள யாழ்ப்பாணக் கட்டளையகத்தை முழுமையாகக் காட்டும் நிலப்படத்தின் சில அம்சங்கள் குறித்து ஆராய்ந்தோம். அதன் தொடர்ச்சியாக, இந்தக் கட்டுரையிலும் மேற்படி நிலப்படத்தில் உள்ள வேறு சில அம்சங்களைப் பற்றிப் பார்க்கலாம். போக்குவரத்தும் வீதிகளும் ஏற்கெனவே யாழ்ப்பாணக் கட்டளையகத்தைக் காட்டும் தூர்சியின் நிலப்படம் தொடர்பாக எழுதியபோது, அக்காலத்தில் கட்டளையகத்தில் இருந்த வீதிகளைப் பற்றியும் விளக்கினோம். உண்மையில் தூர்சியின் நிலப்படம் வரைந்த காலத்துக்கும் […]

மேலும் பார்க்க

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் யாழ்ப்பாணக் கட்டளையகம் – 2

16 நிமிட வாசிப்பு | 7670 பார்வைகள்

இந்தத் தொடரின் சென்ற கட்டுரையில் லெயுசிக்காம் நிலப்படத் தொகுப்பிலுள்ள யாழ்ப்பாணக் கட்டளையகத்தை முழுமையாகக் காட்டும் நிலப்படத்தின் சில அம்சங்கள் குறித்து ஆராய்ந்தோம். அதன் தொடர்ச்சியாக, இந்தக் கட்டுரையில் மேற்படி நிலப்படத்தில் வேறு சில அம்சங்களைப் பற்றிப் பார்க்கலாம். கோட்டைகளும் நகரங்களும் இந்த நிலப்படத்திலும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் யாழ்ப்பாணக் கோட்டை, ஆனையிறவுக் கோட்டை, பெஸ்ச்சூட்டர் கோட்டை, பைல் கோட்டை என்பவற்றையும்; தீவுப் பகுதியில் ஊர்காவற்றுறைக் கடற் கோட்டையையும்; தலை நிலத்தில் பூநகரிக் […]

மேலும் பார்க்க

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் யாழ்ப்பாணக் கட்டளையகம் – 1

11 நிமிட வாசிப்பு | 7332 பார்வைகள்

இந்தத் தொடரின் சென்ற இரண்டு கட்டுரைகளிலும் 1698 ஆம் ஆண்டில் கிறிஸ்டியானோ தூர்சி என்பவர் வரைந்த, யாழ்ப்பாணக் கட்டளையகத்தைக் காட்டும் நிலப்படத்தில் காணப்படும் பல்வேறு தகவல்களைப்பற்றியும் அவற்றின் வரலாற்றுத் தொடர்புகள் பற்றியும் ஆராய்ந்தோம். அடுத்த சில கட்டுரைகளில் 1719 ஆம் ஆண்டில் மார்ட்டினஸ் லெயுசிக்காம் (Martinus Leusecam) என்பவர் தொகுத்த யாழ்ப்பாணக் கட்டளையகம் தொடர்பான ஒரு தொகுப்பில் அடங்கிய நிலப்படங்கள் தரும் தகவல்கள் பற்றிப் பார்க்கலாம்.     நெதர்லாந்தின் தேசிய ஆவணக் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (15)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)