இலங்கை பிராமிக் கல்வெட்டுக்களில் நாகர் Archives - Ezhuna | எழுநா

இலங்கை பிராமிக் கல்வெட்டுக்களில் நாகர்

நாக குலத்தவர் பற்றிக் கூறும் ஹிபவுவ கல்வெட்டு

8 நிமிட வாசிப்பு

குருநாகல் நகரில் இருந்து தம்புள்ளைக்குச் செல்லும் வீதியில் இப்பாகமுவ சந்தி அமைந்துள்ளது. இச்சந்தியில் இருந்து வடக்குப் பக்கமாக புல்னாவைக்குச் செல்லும் வீதியில் சுமார் 10 கி.மீ சென்றதும் பாதையின் இடது பக்கம் அதாவது மேற்குப் பக்கத்தில் ஒரு பெரிய மலைத்தொடரைக் காணலாம். இதுவே தொழுகந்த எனும் மலையாகும். இம்மலையின் கிழக்குப்பக்க அடிவாரத்தில் ஹிபவுவ எனும் காட்டுப்பகுதி அமைந்துள்ளது. மலைப்பறைகள் நிறைந்த இக்காட்டுப்பகுதி நாகலேன என அழைக்கப்படுகிறது. இங்குள்ள ஓர் இயற்கையான […]

மேலும் பார்க்க

2000 ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்கள் வாழ்ந்த ஆண்டியாகல மலைக் கல்வெட்டு

10 நிமிட வாசிப்பு

ஆண்டியாகல எனும் பெயரில் இலங்கையில் பல இடங்கள் அமைந்துள்ளன. குருநாகல் நகரின் மேற்குப் பக்கத்திலும், தம்புள்ளை நகரத்தின் வடமேற்குப் பக்கத்திலும், பியகம நகரின் வடக்குப் பக்கத்திலும், அனுராதபுரத்தின் வடமேற்குப் பக்கத்திலும் இப்பெயரில் ஊர்கள் காணப்படுகின்றன. இவற்றில் இங்கே குறிப்பிட்டுள்ள ஆண்டியாகல என்னுமிடம் அனுராதபுரம் நகரில் இருந்து வடமேற்கு நோக்கி அரிப்புக்குச் செல்லும் வீதியில் 30 ஆவது கி.மீ கல்லில் இருந்து வடக்குப் பக்கத்தில் 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. ஆண்டியாகல […]

மேலும் பார்க்க

ரிதி விகாரை மலையில் நாக மகாராஜன் பற்றிய கல்வெட்டு 

9 நிமிட வாசிப்பு

குருநாகலில் இருந்து கிழக்கு நோக்கி ரம்பொடகல என்னுமிடத்திற்குச் செல்லும் வீதியில் சுமார் 15 கி.மீ. தூரம் சென்றதும் காணப்படும் சிறிய வீதியினூடாக மேலும் 2 கி.மீ தூரம் பயணம் செய்தால் ரிதிகம என்னுமிடத்தை அடையலாம். இங்கு செல்வதற்கு இன்னுமோர் வழியும் உண்டு. குருநாகல் – கண்டி வீதியில் 19 கி.மீ தூரத்தில் உள்ள மாவத்தகம சந்தியின் வடக்கில் 14 கி.மீ தூரம் சென்றும் ரிதிகமவை அடையலாம். இங்குள்ள சிறிய மலைப்பாறையின் […]

மேலும் பார்க்க

அரிட்ட பர்வத மலை எனும் ரிட்டிகல மலையில் காணப்படும் நாகர் பற்றிய கல்வெட்டுகள்

10 நிமிட வாசிப்பு

ஹபரண சந்தியிலிருந்து வடமேற்கு நோக்கி மரதன் கடவல ஊடாக அனுராதபுரத்திற்குச் செல்லும் வீதியில், 11 கி.மீ. தூரத்தில், பாதையின் வலது பக்கத்தில் ரிட்டிகல மலை அமைந்துள்ளது. வடஇலங்கைப் பகுதியில் அமைந்துள்ள மிக உயரமான மலை எனக் கருதப்படும் ரிட்டிகல மலை தரை மட்டத்தில் இருந்து 600 மீற்றர் உயரமுடையதாகும்.  இம் மலை வடக்கு தெற்காக 6.5 கி.மீ நீளமும், கிழக்கு மேற்காக 4 கி.மீ அகலமும் கொண்ட நீண்ட, பெரிய […]

மேலும் பார்க்க

பிராமணன் திவக்கனின் தங்கத் திருமலையில் நாகர் பற்றிய கல்வெட்டு

13 நிமிட வாசிப்பு

அனுராதபுரத்தின் வடக்கில், மல்வத்து ஓயாவின் மேற்குப் புறத்தில் தந்திரிமலை எனும் பண்டைய கிராமம் அமைந்துள்ளது. அனுராதபுரத்திலிருந்து வடமேற்கு நோக்கி அரிப்புக்குச் செல்லும் வீதியில் 18 கி.மீ தூரத்தில் உள்ள ஒயாமடு சந்தியிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் வீதியில் மேலும் 14 கி.மீ தூரம் சென்றால் தந்திரிமலையை அடையலாம். இங்கு மலைப்பாறைகள் நிறைந்த சிறிய காட்டுப் பகுதியில் பழமை வாய்ந்த போதிமரமும், கட்டடங்களும், குடைவரை சிலைகளும், இயற்கையான கற்குகைகளும் காணப்படுகின்றன. இப்பகுதி […]

மேலும் பார்க்க

ஒச்சாப்பு கல்லு எனும் பண்டைய நாகர் குடியிருப்பு

12 நிமிட வாசிப்பு

அனுராதபுரம் மாவட்டத்தில் ஒச்சாப்பு கல்லு எனும் இடம் அமைந்துள்ளது. வில்பத்து எனும் அடர்ந்த காட்டின் மத்தியில் ஒச்சாப்பு கல்லு அமைந்துள்ளது. வில்பத்து காட்டின் மத்தியில் ஓடும் மோதரகம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பிலாமடு தேக்கம் எனும் சிறிய அணைக் கட்டின் தெற்குப்பக்கத்தில் சுமார் 3 கி.மீ தூரத்தில் இவ்விடம் காணப்படுகிறது. வில்பத்து இலங்கையின் முதலாவது மிகப்பெரிய வனவிலங்குகள் சரணாலயமாகும். இது 1317 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்ட அடர்ந்த வனமாகும். […]

மேலும் பார்க்க

நாகர் பற்றிக் குறிப்பிடும் ஹந்தகல பிராமிக் கல்வெட்டுகள் 

10 நிமிட வாசிப்பு

அனுராதபுரம் மாவட்டத்தில் ஹந்தகல மலைக் குகைகள் அமைந்துள்ளன. மதவாச்சியில் இருந்து ஹொரவப்பொத்தானைக்குச் செல்லும் வீதியில் 16 கி.மீ தூரத்தில் பிஹிம்பியாகொல்ல நீர்த்தாங்கி கோபுரம் அமைந்துள்ளது. இதை அடுத்து காணப்படும் சந்தியில் இருந்து வட கிழக்குப் பக்கமாக செல்லும் கிறவல் பாதையில் சிறிது தூரத்தில் காணப்படும் உரபிணுவெவ சந்தியைக் கடந்து 4 கி.மீ தூரத்தில் ஒரு முச்சந்தி அமைந்துள்ளது. இச்சந்தியில் இருந்து வலது பக்கமாகச் செல்லும் வீதியில் சுமார் 400 மீட்டர் […]

மேலும் பார்க்க

கிழக்கிலங்கையின் துணை அரசன் சோணையன், அவனின் மகன் அமைச்சர் தேவநாகன் ஆகியோர் பற்றிய காயங்குடா – கூமாச்சோலை கல்வெட்டு

10 நிமிட வாசிப்பு

மட்டக்களப்பு நகரில் இருந்து வாழைச்சேனைக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் செங்கலடி சந்தி அமைந்துள்ளது. இச்சந்தியில் இருந்து மகாஓயாவுக்குச் செல்லும் வீதியில் 3 1/2 கி.மீ தூரத்தில் காயங்குடா சந்தி அமைந்துள்ளது. இச்சந்தியின் வலது பக்கம் செல்லும் பாதையில் காயங்குடா எனும் பழமை வாய்ந்த ஊர் அமைந்துள்ளது. இவ்வூர் அமைந்துள்ள பகுதி முன்பு காசிமோட்டை எனவும், இவ்வூர் காயங்குடா மலை எனவும் அழைக்கப்பட்டது. மட்டக்களப்புத் தமிழகத்தில் ஆதித் தமிழர்கள் வாழ்ந்த இடங்களில் காயங்குடாவும் […]

மேலும் பார்க்க

நாகர் பற்றிக் குறிப்பிடும் முத்துக்கல் மலைக் கல்வெட்டுகள்

10 நிமிட வாசிப்பு

பொலநறுவை மாவட்டத்தில் மொத்தமாக 80 பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவை 17 இடங்களில் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 52 முற்கால பிராமிக் கல்வெட்டுகளும், 18 பிற்கால பிராமிக் கல்வெட்டுகளும் அடங்குகின்றன. இக்கல்வெட்டுகளில் தமிழரின் சிவ வழிபாடு, நாக வழிபாடு தொடர்பான கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. இவற்றில் நாகர் தொடர்பான 15 பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவை பற்றிய விவரங்களைப் பார்க்கலாம்.  பொலநறுவை நகரில் இருந்து மட்டக்களப்புக்குச் செல்லும் வீதியில் உள்ள மன்னம்பிட்டி சந்திக்கு […]

மேலும் பார்க்க

கிராம அதிகாரி நாகன் பற்றிக் குறிப்பிடும் குடும்பிகல மலைக் கல்வெட்டு  

7 நிமிட வாசிப்பு

அம்பாறை மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் பொத்துவில் நகரம் அமைந்துள்ளது. இங்கிருந்து 18 கி.மீ தூரத்தில் பானமை என்னும் ஊர் காணப்படுகிறது. அம்பாறை மாவட்டத்தில் மக்கள் வாழும் கடைசி ஊர் எனும் பெருமை பெற்ற ஊர் பானமையாகும். வட மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவில் ஆரம்பமாகும் கிழக்குக் கரையோர கடற்பாதை கொக்கிளாய், புல்மோட்டை, திருகோணமலை, மூதூர், வாகரை, மட்டக்களப்பு, கல்முனை, திருக்கோயில், பொத்துவில் ஊடாக  380 கி.மீ தூரத்தில் உள்ள பானமையுடன் முடிவடைகிறது. […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்