மாத்தளை மாவட்டத்தில் மொத்தமாக 62 முற்கால பிராமிக் கல்வெட்டுகளும், 6 பிற்கால பிராமிக் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. இவற்றில் 3 கல்வெட்டுகளில் மட்டுமே நாகர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை பற்றிய விபரங்களைப் பார்க்கலாம். கரடித காமத்தில் வாழ்ந்த வீம நாகன் பற்றிய பிதுரங்கல கல்வெட்டு மாத்தளை மாவட்டத்தின் வடபகுதியில் பிரசித்தி பெற்ற சிகிரியா மலைக்குன்று அமைந்துள்ளது. இம்மலைக்குன்று பண்டைய காலத்தில் சிவகிரி, சிம்மகிரி ஆகிய பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தது. தற்போது இது […]
இலங்கையின் தென்பகுதியில் உள்ள அம்பாந்தோட்டை மாவட்டத்தில் திஸ்ஸமகாராமை அமைந்துள்ளது. இவ்விடம் பண்டைய மாகம இராச்சியத்தின் முக்கிய நகரமாகும். இது பண்டைய காலத்தில் அக்குறு கொட என அழைக்கப்பட்டது. பண்டைய ருகுணு இராச்சியத்தின் முக்கிய பகுதியாக இந்நகரமும், இதனை அண்டிய பகுதியும் விளங்கியது. இந்த இராச்சியத்தின் எச்சங்களாக பல பெளத்த தூபிகளும், கல்வெட்டுகளும், கட்டிட இடிபாடுகளும், தொல்பொருள் சின்னங்களும் இங்கு அதிகளவில் காணப்படுகின்றன. இங்குள்ள திஸ்ஸவாவி குளத்தின் கிழக்குப் பகுதியில் அக்குறு […]
அனுராதபுரம் மாவட்டத்தில் மொத்தமாக 431 பிராமிக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 347 கல்வெட்டுகள் ஆங்கிலேயர் காலத்திலும், 84 கல்வெட்டுகள் அண்மையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் தமிழர் வழிபாட்டுப் பாரம்பரியம் மற்றும் இந்துத் தெய்வங்கள் தொடர்பான 116 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் நாகர் பற்றி 31 கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனுராதபுரம் நகரில் இருந்து திருகோணமலைக்குச் செல்லும் வீதியில் 15 கி.மீ தொலைவில் மிகுந்தலை என்னுமிடம் அமைந்துள்ளது. இங்கு மலைப் பாறைகள் நிறைந்த பிரதேசத்தில் […]
இலங்கையின் வடபகுதியில் பண்டைய காலத்தில் நாகர் வாழ்ந்தமை மற்றும் நாக வழிபாடு செய்தமை தொடர்பான சான்றுகள் பரவலாகக் காணப்படுகின்றன. சுமார் 2400 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு ஒரு நாக இராச்சியம் சிறப்புற்று விளங்கியதாக பண்டைய நூல்கள் கூறுகின்றன. இங்கு நாகதீபம் எனும் நாக இராச்சியம் இருந்ததாகவும், இங்கிருந்த மகோதரன், சூளோதரன் எனும் இரு நாக மன்னர்களின் மணிமுடி தொடர்பான பிணக்கைத் தீர்ப்பதற்காக புத்த பகவான் இலங்கைக்கு வந்ததாகவும் மகாவம்சம் கூறுகிறது. […]
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நாகர் தென்னிலங்கையில் பொ.ஆ.மு 3 ஆம் நூற்றாண்டில் மகாகம எனும் ஓர் இராச்சியத்தை அமைத்தவன் தேவநம்பிய தீசனின் சகோதரனான மகாநாகன் என்பவனே. இவன் ஓர் நாக மன்னனாவான். இவன் அமைத்த மகாகம இராச்சியத்தில் முதன் முதலாக நாகமகா விகாரை எனும் வழிபாட்டுத் தலத்தை இவன் அமைத்தான். தேவநம்பிய தீசனின் பின் அரசனாக வேண்டியவன் என்பதால் இவன் ‘உப ராஜா மகா நாகன்’ என அழைக்கப்பட்டான். தென்னிலங்கையில் கிரிந்த, […]
இலங்கைத் தமிழருக்கும், அவர்களின் வழிபாட்டுப் பாரம்பரியத்திற்கும் குறைந்தது 2500 வருட கால வரலாறு உள்ளது. இலங்கையின் பூர்வீகக் குடிகளான நாகர் நாகத்தையும், வேடர் முருகனையும், தமிழர் சிவனையும் வழிபட்டனர். இவ்வழிபாடுகள் இலங்கை வரலாற்றுக்கு முற்பட்ட பெருங்கற்கால மையங்களில் கிடைக்கப்பற்ற நாக, லிங்க, வேல் சின்னங்கள் ஆகியவற்றின் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது. மேலும் பண்டுகாபய மன்னன் காலத்தில் நாக, சிவ வழிபாடுகள் இருந்தமை பற்றிய விபரங்கள் பண்டைய பாளி நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வரலாற்றுக்கு […]