அதிகாரத்தின் முன் உண்மைகளைப் பேசுதல் பற்றி எட்வேர்ட் ஸயீட் ‘Representations of the Intellectual’ என்கின்ற நூலில், ஒரு அத்தியாயம் முழுவதும் விரிவாகப் பேசுகின்றார். விமர்சனங்களை வெளிப்படுத்தவும் அதைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளவும் தயங்கும் எந்தவொரு சமூகமும் தனக்கான வீழ்ச்சியை நோக்கியே செல்லும். தம்மைத் தாமே சுயவிமர்சனம் செய்து நகராதவிடத்து எந்த ஏற்றமும் எவருக்கும் ஏற்படப்போவதில்லை. ‘மாற்றம் என்பதே மாறாதது’ என்று வாளா சொல்லிக்கொண்டிருக்காது, எந்தத் திசையில் செல்லவேண்டுமென்பதைத் தீர்மானிக்கும் […]
1 1983 இல் சாவகச்சேரி சங்கத்தானையில், இலங்கை இராணுவத்தின் சுற்றிவளைப்பில் இருந்து தப்பியோடும் ஒருவர் இறுதியில் கனடாவை வந்து சேரும்வரை அலைந்துழலும் வாழ்க்கையை ‘The Sadness of Geography’ நூல் கூறுகின்றது. 80 களில், தனது பதின்மங்களில் யாழ் சென். ஜோன்ஸ் கல்லூரி விடுதியில் கல்வி கற்கின்ற லோகதாசனின் சுயசரிதை நூல் இதுவாகும். அநேக ஈழத்தமிழரைப் போல, 81 இல் யாழ் நூலக எரிப்பும், 83 ஆடி இனக் கொலைகளும் […]
மனவடுக்களின் காலம் ‘Prisoner #1056’ என்கின்ற இந்தச் சுயசரிதை நூலை இரண்டு பகுதிகளாகப் பிரித்துப் பார்க்கலாம். முதலாவது பகுதி, ரோய் ரத்தினவேல் என்பவர் இலங்கையில் பெற்ற போர்க்கால வடுக்கள் பற்றியது. இரண்டாவது பகுதி கனடாவில் அவர் பெறுகின்ற அனுபவங்கள் குறித்தது. இலங்கையில் பிறந்த ரோய் ரத்தினவேல் போரின் நிமித்தம் அனுபவித்தவை மிகுந்த துயரமானவை. ரோய் கொழும்பில் பிறந்தாலும், நாட்டு நிலைமைகளால் அவரது தாயாரோடும், தமையனோடும் பருத்தித்துறைக்கு அனுப்பப்படுகின்றார். தகப்பன் மட்டும் […]
‘படகு மக்கள்’ (The Boat People), கனடாவில் கப்பலில் வந்து இறங்கிய ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேசும் ஒரு புதினமாகும். ஐநூறுக்கு அதிகமான ஈழத் தமிழர்கள் மூன்று மாதங்களுக்கு மேலாக கடலில் பயணித்து கனடாவின் கிழக்குப் பகுதியில் வந்து சேர்ந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாவல் இதுவாகும். இந்நாவலில் மகிந்தன் என்பவனும், அவனது பத்து வயது மகனான செழியனும் முக்கிய பாத்திரங்களாகின்றனர். அவர்கள் கனடா வந்திறங்கியபின், அவர்களுக்காக […]
’பசித்த பேய்கள்’ நாவல் 1983 இனக்கலவரத்தின் பின்னர் கனடாவிற்கு வந்து சேரும் சிவனின் கதையாகும். சிவன் தனது 19 ஆவது வயதில் இலங்கையில் உயர்தரப் பரீட்சை எடுத்த கையோடு கனடாவுக்குப் புலம்பெயர்கின்றார். அது 1984 இல் நிகழ்கின்றது. சிங்களத் தாய்க்கும், தமிழ்த் தந்தைக்கும் பிறந்த சிவன், ‘83’ கலவரத்தால் அச்சுறுத்தப்பட்டாலும், அவர்களைச் சிங்களக் கலப்பின அடையாளம் காப்பாற்றுகின்றது. இக்கலவரம் நிகழ்வதற்கு முன், சிவன் அவரது தமிழ்த் தந்தையை இழந்துவிடுகின்றார். சிவனின் […]
1 நெடும் வருடங்கள் நடந்த ஒரு யுத்தத்தில் ஒரு நாளைப் பிரித்தெடுத்து நிதானமாய்ப் பார்த்தால் என்னவாகும்? உயிர் தப்பியதே அதிசயமாய்த் தோன்றுவது ஒருபுறமிருக்க, அந்த நாளொன்றில் இந்தளவு சம்பவங்கள் நிகழ்ந்ததா என்ற ஆச்சரியம் இன்னொருவகையில் ஒருவரைத் திகைக்க வைக்கக்கூடும். அனுக் அருட்பிரகாசம் எழுதிய ‘The Story of a Brief Marriage’ நாவல், எறிகணைத் தாக்குதலில் காயமடையும் ஆறுவயதுச் சிறுவனை, இளைஞனான தினேஷ் வைத்தியசாலைக்குள் தூக்கிக்கொண்டு வருவதோடு தொடங்குகின்றது. அதேபோல […]
ஒருவர் ஈழத்தில் இயக்கமொன்றில் இணைந்து போராடியதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்திருக்கலாம். முக்கியமாய் போர் உக்கிரமாய் நடைபெறும் பிரதேசங்களில் – போராட்டத்தில் இணைந்துகொள்ள – புறக்காரணிகள் இன்னும் அதிக நெருக்கடிகளைக் கொடுக்குமென்பதை நாமனைவரும் அறிவோம். எமது இயக்கங்களில் பலர் பெருந்தொகையாய்ச் சேர 1974 உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுச் சம்பவமும், 1981 இல் யாழ். நூலக எரிப்பும், 1983 இல் ஜூலைக் கலவரமும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய காரணங்களாய் அமைந்தன. ஆனால் யாழ். […]
இலங்கை, பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து ஒரு பதற்றமான சூழ்நிலையிலேயே இருந்து வந்திருக்கின்றது. 1956 தனிச் சிங்களச் சட்டம், இன்னொரு இனத்தின், மொழியின் மீதான வெறுப்பிற்கான மிகச் சிறந்த உதாரணமாகும். அதன் நீட்சியாக 1956, 1958 இல் தமிழர் மீதான படுகொலைகள் நடந்திருக்கின்றன. ஒரு சிறிய தீவு நாட்டின் அனைத்து இனங்களையும், அவர்களின் மொழி, கலாசாரங்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டுமென்பது அரச அதிகாரத்தை எடுத்துக் கொண்டவர்களுக்குத் தெரியவில்லை. அதனால்தான், பின்னரான […]
எல்லாக் கதைகளும் எழுதப்பட்டுவிட்டதெனின், எந்தக் கதையைப் புதிதாகச் சொல்வது என்பது எழுதுபவர்க்கு எப்போதும் குழப்பமாக இருக்கும் ஓர் விடயமாகும். பரவலாகத் தெரிந்த கதையை, அதிலும் சமகாலத்தில் நிகழ்ந்ததை யாரேனும் எழுதப் போகின்றார்களென்றால் அது இன்னும் கடினமாகிவிடும். ஆனால் தெரிந்த கதையாக இருந்தாலும், புதிதாய்ச் சொல்லமுடியும் என்று நம்பியதன் விளைவாகவே அனுக் அருட்பிரகாசத்தின் ‘வடக்கிற்கான பயணம்’ (A Passage North) நமக்குக் கிடைத்திருக்கின்றது. அது இதுவரை இலங்கையில் இருக்கும் எந்தத் தமிழ் […]