யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம் Archives - Ezhuna | எழுநா

யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம்

இரசவர்க்கம்: தாவரநெய்கள்

10 நிமிட வாசிப்பு

வேப்பெண்ணெய் வாதம்போம் பித்தமிகும் மாறாக்கிரந்திபோமோதுங்கரப்பன் சிரங்கோடிப்போம்-போதவேவேப்பெண்ணெய் கொண்டால் விசம்மீழும் சன்னிபோம்காப்புடைய கையாளே காண் இதன் பொருள்: காப்பு அணிந்த கைகளை உடையவளே காண்பாயாக. வேப்பெண்ணெயால் வாதம் போகும். பித்தம் கூடும். மாறாத கிரந்தி மாறும். கரப்பனும் சிரங்கும் மாறும். கடிவிஷம் இறங்கும். சன்னிநோய் குணமாகும். மேலதிக விபரம்: வேப்பிலைத்தூளை வேப்பெண்ணெயுடன் கலந்து பெறப்பட்ட தைலத்தை, வலிப்பு, சன்னி  என்பவற்றால் பாதிக்கப்பட்ட பாகங்களுக்குப் பூசிவர நிவாரணம் கிடைக்கும். வெற்றிலையில் வேப்பெண்ணெய் தடவி, […]

மேலும் பார்க்க

இரசவர்க்கம்: பழவகைகள்

10 நிமிட வாசிப்பு

பலாப்பழம் தித்திக்கும் வாதபித்த சேட்டுமங்கள் உண்டாக்கும்மெத்தக்கரப்பன் விளைவிக்கும்-சத்தியமேசேராப் பிணியெல்லாம் சேரும்மானிடர்க்குப்பாராய் பலாவின் பழம் இதன் பொருள்: பலாப்பழம் இனிப்பான சுவையை உடையது. வாதம் பித்தம் சிலேத்துமம் என்பவற்றின் சமநிலை கெடுவதால் ஏற்படக்கூடிய வியாதிகளைத் தோற்றுவிக்கும். பலாப்பழத்தால் எல்லாவிதமான வியாதிகளும் வந்துசேரும். மேலதிகவிபரம்: முக்கனிகளுள் ஒன்றாகக் கூறப்படினும் தமிழ் மருத்துவர்களைப் பொறுத்தவரையில் இதன்மேல் நல்ல அபிப்பிராயம் கிடையாது. காரணம் தெரியவில்லை. பதினேழாம் நூற்றாண்டில் தனது பதினான்காவது வயதில் கண்டி மன்னன் இரண்டாம் […]

மேலும் பார்க்க

இரசவர்க்கம் – மூலிகை மருந்துகள் – பகுதி 3

7 நிமிட வாசிப்பு

கடுகுரோகிணி போகாச் சுரமும் போகும் திரிதோஷம்வாகாய் வயிறுவலி வாங்கிடுமே- வேகாக்கடுகுரோகிணியைக் கண்டாலும் மந்தம்போம்பொடுகு சிரங்கும் போம் பொருந்து இதன் பொருள்: கடுகுரோகிணி தொடர்ந்து நீடிக்கும் காய்ச்சல் மாற்றும். வாதம், பித்தம், கபம் என்னும் முத்தோஷங்களைச் சமநிலையில் பேணும். வயிற்றுவலி, மாந்தம் பொடுகு சிரங்கு என்பனவற்றுக்குக் கடுகுரோகிணி மருந்தாகும். மேலதிக விபரம்: ஆயுள்வேதமருத்துவத்தில் பயன்படுத்தப்படும் முக்கியமான மூலிகைகளுள் கடுகுரோகிணியும் ஒன்று. ஈரல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு இது மருந்தாகப் பயன்படுகிறது. மஞ்சட்காமாலை (செங்கமாரி) […]

மேலும் பார்க்க

இரசவர்க்கம் – மூலிகை மருந்துகள் – பகுதி 2

10 நிமிட வாசிப்பு

வாய்விளங்கம் போய்விளங்கும் வாயுவையே போக்கும்புகல ரியவாய்விளங்கம் தனையே வகையாக்கேள்-நீவிளங்கஎண்பது வாதம் போம் ஏந்திழையீர்கேளீர்உண்பதற்கு நல்லதென்றே யோது இதன் பொருள்: வாய்விளங்கம் வாய்வைப்போக்கும். எண்பது வகையான வாதங்களையும் போக்கும். உண்பதற்கும் நல்லது. வாய்விளங்கத்தின் மிக முக்கியமான மருத்துவப்பயன் ஒன்றை இரசவர்க்கம் குறிப்பிடத்தவறிவிட்டது. நாடாப்புழு (tapeworm), கொக்கிப்புழு போன்ற குடற்புழுக்களுக்கு வாய்விளங்கம் சிறந்த மருந்தாகக் கூறப்படுகிறது. உலகப்பிரசித்திபெற்ற மருத்துவ ஆய்விதழான ‘தி லான்செற்’ (The Lancet) 1887 ஆம் ஆண்டிலேயே நாடாப்புழுவுக்கு வாய்விளங்கம் […]

மேலும் பார்க்க

இரசவர்க்கம் – மூலிகை மருந்துகள்

12 நிமிட வாசிப்பு

கருஞ்சீரகம் கருஞ்சீரகத்தாற் கரப்பனும்புண்ணும்வரும்சீராய்ப் பீனிசமும் மாறுமே – அருந்தினால்காய்ச்சல்தலைவலியும் கண்வலியும்போமுலகில்வாய்ச்ச மருந்தெனவே வை இதன் பொருள்: கருஞ்சீரகத்தால் கரப்பனும் புண்ணும் மாறும். பீனிசமும் மாறும். காய்ச்சல், தலைவலி, கண்வலி என்பவற்றையும் கருஞ்சீரகம் துரிதமாகத் தீர்த்துவைக்கும். உலகத்தில் நமக்கு அருமையாகக் கிடைத்த மருந்து இது என்று அறிந்து கொள்வாயாக. மேலதிகவிபரம்: அரபு நாட்டவர்களால் அருமருந்தாக எண்ணப்படுவது கருஞ்சீரகம். சாவு ஒன்றைத்தவிர மீதி எல்லா நோய்களையும் தீர்த்துவைக்கும் ஆற்றல் கருஞ்சீரகத்துக்கு உண்டு என […]

மேலும் பார்க்க

இரசவர்க்கம் – மருந்தாகும் மசாலாப் பொருள்கள் – பகுதி 2

10 நிமிட வாசிப்பு

பெருங்காயம் அட்டகுன்மம் தானும் அணுகாது ஆகமதில் ஒட்டியவாய்வுத் திரட்சி ஓடுமே-முட்டவே வருங்காயம் புட்டியாம் மாரிழையீர் கேளீர் பெருங்காயம் என்று குணம் பேசு இதன் பொருள்: எட்டுவகையான குன்மங்களும் சேராது. வாய்வுப் பிரச்சனைகளை ஓட்டிவிடும். உடலுக்கு வலுவைக்கொடுக்கும். பெண்ணே பெருங்காயத்தின் குணம் இதுவாகும். மேலதிக விபரம்: பெருங்காயம் என்பது பெருஞ்சீரகக்குடும்பத்துக்குரிய ஒரு தாவரத்தின் வேர்க்கிழங்கிலிருந்தும் தண்டில் இருந்தும் பெறப்படும் ஒரு பிசின் ஆகும். ஈரான் தேசத்துக்குரியது இந்தத்தாவரம். இந்த மூலிகைப் பொருளைக் […]

மேலும் பார்க்க

இரசவர்க்கம் – மருந்தாகும் மசாலாப் பொருள்கள் – பகுதி 1

7 நிமிட வாசிப்பு

கடுகு படுகின்ற ரத்தம்போம் பாலார் முலை சுரக்கும் அடுகின்ற மூலம் அணுகாது-தொடுகின்ற தாளிதத்துக்காகும் தழலாகும் கண்டீர் வாளித்த வல்ல கடுகு                                         கடுகு, பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் ஏற்படக்கூடிய கூடுதலான உதிரப்போக்கைக் கட்டுப்படுத்தும். பாலூட்டும் தாய்மாருக்குப் பாற்சுரப்பை ஊக்குவிக்கும். மூல வியாதியைத் தவிர்க்கும். […]

மேலும் பார்க்க

இரசவர்க்கம் – திரிபலை

6 நிமிட வாசிப்பு

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் என்னும் மூன்று மூலிகைகளையும் கூட்டாக ‘திரிபலை’ என்று ஆயுள்வேத மருத்துவர்கள் குறிப்பிடுவார்கள். இம் மூலிகைகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே விசேடகுணங்கள் உண்டு.   திரிபலை சூரணம் கடுக்காய்த்தூள், தான்றிக்காய்த்தூள், நெல்லிக்காய்த்தூள் மூன்றையும் சம அளவில் கலந்து தயாரிக்கப்படும் திரிபலை சூரணம் (Triphala churna) ஆயுள்வேத மருத்துவர்களின் கைகண்டமருந்தாகும். உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க இம்மருந்து பயன்படுத்தப்படுகின்றது. திரிபலைச் சூரணத்தைத் தொடர்ந்து எடுத்துவந்தால் இரத்தத்தில் உள்ள கொலெஸ்றோலைக் குறைக்கமுடியும். திரிபலை […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம் – திரிகடுகம்

8 நிமிட வாசிப்பு

அறிமுகம் சிங்கைச் செகராஜசேகரன் என்ற பெயருடன் நல்லூரைத் தலைநகராகக் கொண்டு யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட மன்னன் ஒருவன் தனது குடிமக்களுள் பெரும்பாலான தமிழ்மக்களின் நலன் கருதி வைத்தியம் மற்றும் சோதிடம் தொடர்பான நூல்களைத் தமிழ்மொழியில் ஆக்கும்படி இந்தியாவில் இருந்து தான் வரவழைத்த பண்டிதர்களைக் கேட்டுக் கொண்டான். இப்பொழுது எமக்குக் கிடைக்கும் செகராசசேகரமாலை என்னும் சோதிடநூலும் செகராசசேகரம் என்னும் வைத்தியநூலும் இம்மன்னன் காலத்தில் ஆக்கப்பெற்றனவே. கி. பி.15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்