கடந்த சில பத்தாண்டுகள், மரபுரிமைகளை இனங்காணல், அது தொடர்பான கருத்தாடல்கள், செயற்பாடுகளில் பல முக்கிய திருப்பங்கள் நிகழ்ந்துள்ளதை எடுத்துக்காட்டியுள்ளன. குறிப்பாக அனைத்து வகைப்பட்ட போர்கள், இனவழிப்புக்கள், சர்வாதிகாரம், காலனியங்கள் முதலியவற்றைப் பிரதிபலிக்கும் வெளிப்பாடுகளை மரபுரிமையின் பகுதியாகக் கொள்ளும் போக்கு முக்கியமானதாகும். இவற்றை இன்று ‘வன்செயல் மரபுரிமை’ (violence heritage) என்ற பெயரால் இப்புதிய பார்வைகள் சுட்டுகின்றன. இவை இருண்ட, எதிர்மறையான, வலிமிகுந்த, அதிருப்தி நிறைந்த, கடினமான நிலைமைகளது வாழும் சாட்சியங்களாகப் […]