மரபுரிமைகளைப் பறைதல் Archives - Page 3 of 3 - Ezhuna | எழுநா

மரபுரிமைகளைப் பறைதல்

கீரிமலை பாசுபத – கபாலிகச் சைவ மரபுகளின் மூத்த மையங்களில் ஒன்றா?

7 நிமிட வாசிப்பு

கீரிமலை யாழ்ப்பாணத்தின் பழம்பெரும் ஊர்களில் ஒன்று. இலங்கைத் தீவில் காணப்படும் புராதனமான பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான நகுலேஸ்வரம் இங்குதான் காணப்படுகிறது. அத்துடன் யாழ்ப்பாணத்தின் பிரதான பிதிரர்களுக்கான கடமைகளை ஆற்றும் நீர்பெருக்கும் இங்குதான் உள்ளது. கீரிமலை பற்றிய கர்ண பரம்பரைக் கதைகளின் புராணிக அடிப்படைகளை வரலாற்று அறிவியற் கண்டுக்கொண்டு திறக்க முற்படுகையில் நீண்ட நெடிய சைவ மரபுகளின் ஆதிவேர்களை கண்டுக்கொள்ள முடிகிறது. இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் சிவராத்திரி இரவில் இருளிற் கசியும் […]

மேலும் பார்க்க

வடக்கின் பண்பாட்டுச் சுற்றுலாவும் காலனிய கட்டட மரபுரிமையும்

7 நிமிட வாசிப்பு

பண்பாட்டுச் சுற்றுலா (cultural tourism) என்பது  குறித்த ஒரு பிராந்தியத்தின் பண்பாட்டுச் சொத்துக்கள் மீது கவனத்தைக் குவித்துள்ள சுற்றுலா ஆகும். அது குறிப்பிட்ட பிராந்தியம் அல்லது குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தின் பௌதீகச் சொத்துக்கள், வழக்காறுகள், பயில்வுகள், நம்பிக்கைகள் என்பனவற்றின் மீது கவனத்தைக் கோருகின்ற பண்பாட்டு மேம்பாட்டு முறையாகும். அது பல்வேறுபட்ட உப களங்களைக் கொண்ட ஒரு பரந்த பரப்பாகும். இன்று இலங்கைச் சுற்றுலாத்துறையின் புதிய அல்லது மீள் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு […]

மேலும் பார்க்க

உள்ளூரை இரண்டும் கெட்டதாக்கல்: அபிவிருத்தித் திட்டங்களும் மரபுரிமையும்

7 நிமிட வாசிப்பு

‘ஒரே நாடு ஒரே தேசம்’ என்ற சொற்றொடரைக் கேட்டால் எம்மிற் பலர் வெகுண்டு எழுந்துவிடுகிறோம். அதனை ஒரு ஜனநாயக விரோத அறைகூவலாகவும் பன்மைத் தன்மைகள் பண்பாட்டு வேறுபாடுகளை மறுதலிக்கும், அதேநேரம் அதனை ஒற்றைப்படையாக்கஞ் செய்யும் மேலாதிக்கச் செயற்பாடாகவும் கருதி பெருங்குரல் எடுத்து அதனை எதிர்க்கும் குரல்களை பதிவிடுகிறோம். “அந்நியன்  கரங்கள் எம் குரல்வளை நெரிப்பினும், பாடுவோம் உயர்த்திய குரல்களில்”  என்று எண்பதுகளில் தமிழ்ப் பகுதிகளில் ஒலித்தடங்கிய இளைஞர் குரல்கள் இக்கட்டுரையை […]

மேலும் பார்க்க

வன்னி : இயற்கை மரபுரிமைகளும் பண்பாட்டு நிலவுருக்களும் சூழற் சுற்றுலாவும்

8 நிமிட வாசிப்பு

வன்னிப் பெருநிலம் என்பது இலங்கைத் தீவின் வடபுலத்தில் இயற்கை மரபுரிமைகளைச் செறிவாகக் கொண்டதொரு பிராந்தியமாகும். நீர் – நிலஞ்சார்ந்த மிகப் பரந்த இயற்கை அமைவுகளையும் அதுசார்ந்த பிற உயிரியற் சூழலையும் பண்பாட்டு நிலவுருக்களையும் உடைய வன்னி, இலங்கையின் இனத்துவ அரசியலின் ஆயுத மோதல் முடித்து வைக்கப்பட்ட பின்னருங்கூட மிகப் பெரிய அரசியற் சூதாட்ட களமாகக் காணப்படுகிறது. அந்தக் களத்தைக் கருத்து ரீதியாகவும் – பௌதிக ரீதியாகவும் கைப்பற்றுவதற்காக அண்மைக் காலத்தில் […]

மேலும் பார்க்க

சிவ வேடதாரி

8 நிமிட வாசிப்பு

சைவக் கோயில்களில் பூவரசம் இலை அமர்ந்த விபூதி, சந்தனம், குங்குமத்தின் இன்றைய நிலை!  “சிவ சின்னங்கள் யாவை?” என நாவலர் அவரது சைவ வினாவிடையின் அங்கமாகிய விபூதியியலிலே கேட்டு, சிறுவர்களுக்கு சிவ சின்னங்களில் முதன்மையான ‘விபூதி’  பற்றிப் போதித்தார். அவரது போதனை முறையை அடியொற்றி சைவ சமயப் பாடப் புத்தகங்களும் இடைவிடாது அதேகேள்வியையும் விடையையும் திரும்பத் திரும்பக் கேட்டுப் பதிலும் சொல்கின்றன. சிவ சின்னத்தில் முதன்மையான விபூதி ‘புனிதமான சாம்பல்’ […]

மேலும் பார்க்க

தமிழ் பௌத்த மரபுரிமையை உரிமை கோரல்

8 நிமிட வாசிப்பு

தமிழர்கள் மதப்பன்மை அடையாளம் உடையோர். சைவ – வைணவ மதங்கள் உட்பட ஏராளமான தாய் தெய்வங்கள் – இயற்கைச் சக்திகள்  முதல் ஆசிவகம், சமணம், பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம், சித்தர் மரபுகள், சூபிசம் வள்ளலார் மரபு, உலகாயதம் போன்றவற்றையும் அனுட்டிப்பதுடன், கடவுள் மறுப்பு வரை அவர்கள் பல்வகை அடையாளம் கொண்டவர்கள். இவையே அவர்களது தனித்துவமும்  சிறப்படையாளமுமாகும். அவ்வகையில் இலங்கைத் தீவில் சிங்கள பௌத்தம் போல தமிழ் பௌத்தமும் ஒரு வரலாற்று […]

மேலும் பார்க்க

புதிதாகச் சிந்தித்தல்: தமிழர்களும் நினைவுச் சின்னங்களும்

7 நிமிட வாசிப்பு

எம் இதயங்களில்  அச்சொல் புனிதமாய் இருக்கட்டும் சாம்பலைப் போல காற்று அதனையும் அள்ளிச் செல்ல விட வேண்டாம் சுகப்படுத்த முடியாத காயமாக… –      மஹமூட் தர்வீஷ் (பலஸ்தீனக் கவிதைகள். (மொ+ர்) எம்.ஏ. நுஃமான், இ. முருகையன்)  பண்பாட்டு மரபுரிமையின் மிக முக்கியமான பகுதியாக நினைவுச் சின்னங்கள் காணப்படுகின்றன. நினைவுச் சின்னம் (monuments)    என்பது ‘உலகளாவிய ரீதியில் பெறுமதிமிக்கதும் வரலாறு, அழகியல், இனவியல் அல்லது மானுடவியல் ரீதியாக முதன்மை […]

மேலும் பார்க்க

இலங்கையில் அகழ்வாய்வு ஒரு அறிவியல் ஒழுக்கமா?

8 நிமிட வாசிப்பு

நேற்றோ இன்றோ அல்ல, ஐரோப்பிய காலனிய ஆட்சியின் கீழிருந்து விடுதலை பெற்ற காலத்திலிருந்தே தென்கிழக்காசிய நாடுகள் பலவற்றிலும் அகழ்வாய்வு என்பது திட்டவட்டமான ஓர் அரசியற் கருவியாக மாறியுள்ளது.  அத்துடன் இரத்த ஆறுகளைத் தேசங்கள்தோறும் திறந்துவிடும், கண்ணுக்குத் தெரியாத படைக்கலமும் ஆகும்.   தேசத்தை நிர்மாணஞ் செய்யும் அதிகாரப் பொறிமுறைக்கான பெருங்கதையாடல்களைக் கட்டமைப்பதற்கான அறிவியலாடை தரித்த தந்திரோபாயமாகவே அகழ்வாராய்ச்சி நடைமுறைகள் பெருமளவிற் பயன்படுத்தப்படுகின்றன.   இந்தப் பின்னணியில், பெரும்பாலும் இலங்கை போன்ற நாடுகளில் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்