இலங்கையில் உயரடுக்கின் உருவாக்கமானது பிரித்தானியக் காலனிய ஆட்சி காலத்தில் ஆங்கிலம் கற்ற உயர் வகுப்பினரின் தோற்றத்தோடு உருவானது என்ற தவறான கருத்து சிலரிடையே நிலவுகிறது. உண்மையில் முன்பே குறிப்பிட்டதைப் போல இந்தியாவைப் போலல்லாமல், இலங்கையில் காலனித்துவத்திற்கு முந்தைய ஆளும் வர்க்கத்தின் மேல்தட்டு அழிக்கப்பட்டு, இரண்டாம் நிலைப் பிரிவு தகவமைக்கப்பட்டு காலனித்துவக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டது. காலனித்துவ ஆட்சியின் உருவாக்கத்தின் போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான மற்றொரு குறிப்பிடத்தக்க வேறுபாடு என்னவென்றால், இந்தியா […]
இலங்கை அரசியலிலும் சமூக வாழ்க்கையிலும் புராதன காலம் தொட்டே சாதியம் பெரும் செல்வாக்குச் செலுத்தியது. இதற்கு இந்து மதத்தின் தெய்வீக வடிவம் வழங்கிய தாக்கமே காரணமானது. பெளத்த மதம் சாதியத்துக்கு எதிரான ஒரு சித்தாந்தமாகத்தான் உருவானது. இந்தியாவில் அம்பேத்கார் தலைமையில் சாதியத்துக்கு எதிரான வலுவான இயக்கமாக பெளத்த மதம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இலங்கையில் அரசர்களும் பின்னர் காலனியவாதிகளும் – தங்கள் வர்க்க நலனையும் அதிகாரத்தையும் தக்கவைத்துக் கொள்வதற்கு சாதியம் வலுவான ஆயுதம் […]
முதலாளித்துவ யுகத்தில் ஐரோப்பியர்களின் எழுச்சிக்கும் தெற்குலகின் வீழ்ச்சிக்குமான காரணங்களை பின்வருமாறு சுருக்கலாம்: 1) விஞ்ஞானம், மனித குல, பொருளாதார, நாகரிக வளர்ச்சி என்பன ஒரு நாட்டுக்கோ ஒரு கண்டத்துக்கோ ஓர் இனத்துக்கோ சொந்தமானதல்ல. அவை மனித குலம் தோன்றிய காலம் முதல், ஆதிக்குடிகளாகவும், பின்னர் கோத்திரங்களாகவும், அரசுகளாகவும், தேசங்களாகவும் அது பரிணாமம் அடைந்து காலங்காலமாக, சிறுகச்சிறுக, ஒரு தலைமுறையிடமிருந்து அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டு படிப்படியாக வளர்க்கப்பட்ட திரட்சியேயாகும். இவ் வளர்ச்சியில் […]
கடந்த தொடரிலே, வரலாற்றில் நீண்டகாலம் அபிவிருத்தியில் முன்னிலை வகித்த ஆசியாவையும், அதற்கடுத்த ஆபிரிக்காவையும் முந்திக்கொண்டு பிற்காலத்தில் ஐரோப்பா முன்னேறியதற்கு அங்கு ஏற்பட்ட முதலாளித்துவ வளர்ச்சியும் கைத்தொழில் புரட்சியும் காரணமானது என்பதைப் பார்த்தோம். இதற்கு ஆதாரமான விஞ்ஞான வளர்ச்சிக்கு, ஏனைய கண்டங்களை விட ஐரோப்பாவில் வளங்கள் குறைவாக இருந்ததும், அவற்றைத் தேடிப் பிறகண்டங்களுக்குச் செல்லவேண்டிய தேவையின் நிர்ப்பந்தமும் ஒரு பிரதான காரணமானது என்பதனையும் பார்த்தோம். அதைவிட இன்னும் இரண்டு காரணங்கள் […]
இலங்கையில் வெளிக்காரணிகளின் தாக்கங்கள் அந்நியர் ஆட்சியும் வெளிநாடுகளின் செல்வாக்கும் இலங்கைக்கு புதிய விடயங்கள் அல்ல. இலங்கை சிலசமயங்களில் தென்னிந்திய மன்னர்களின் படையெடுப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இத்தகைய நிலப்பிரபுத்துவத்தால் யுத்தங்கள் இனவாத ரீதியில் திரித்து விளக்கப்படுகின்றன. அது மாத்திரமல்ல 1411 இல் ஒருதடவை சீனக் கடற்படையின் தாக்குதலுக்கும் இலங்கை உள்ளானது. அப்போது நீராவிக் கப்பல் இன்னும் புழக்கத்துக்குக்கு வராத சமயத்தில் ஒப்பரும் மிக்காரும் இல்லாதபடி பெரிய கடற்படையை மிங் வம்ச (Ming) […]
1867 இல் பத்து ஏக்கரில் தொடங்கப்பட்ட தேயிலை உற்பத்தி 1887 ஆம் ஆண்டில் – இருபது வருடங்களுக்குள் – சுமார் 350,000 ஏக்கராக விரிவடைந்தது. இவ்வளவு விரைவாக தேயிலை வளர்ச்சியடைவதற்கு அழிந்த கோப்பிப் பெருந்தோட்டம் உருவாக்கிவிட்டுச்சென்ற பெருந்தோட்ட நிலங்களையும் கட்டமைப்பையும் அது எளிதாக நிரப்பக்கூடியதாக இருந்தமை தான் காரணம். தேயிலை விளைந்த நிலப்பரப்பு கோப்பி பெருந்தோட்டங்கள் இருந்த நிலப்பரப்பை விடவும் விரிவடைந்து சென்றது. 1890 களில் பெரும்பாலான தேயிலைத்தோட்டங்கள் திம்புள்ள, டிக்கோயா, […]
இலங்கைத் தேயிலையை உலக அரங்கில் பிரபல்யமடையச் செய்த முதலாவது நிகழ்வு 1888இல் ஸ்கொட்லாந்தில் நடைப்பெற்றது. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற 4 சர்வதேச கண்காட்சிகளில் முதலாவது அறிவியல், கலை மற்றும் தொழில்துறை சர்வதேச கண்காட்சி 1888 மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரை கெல்விங்ரோவ் பூங்காவில் (Kelvingrove Park) நடந்தது. அங்கு இலங்கை தேயிலையும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இன்னும் வானொலியோ தொலைக்காட்சியோ […]
கோப்பியின் பரிதாப வீழ்ச்சியும் மாற்று முயற்சிகளும் கோப்பி நோய் சுனாமி போல் ஓரிரவுக்குள் கோப்பிப் பெருந்தோட்டத்தை அழித்துவிடவில்லை. அதன் பரவல் மெதுவாக ஆனால் நிச்சயமானதாக நடைபெற்றது. கோப்பிப் பெருந்தோட்ட உற்பத்தி முற்றாக அழிவதற்கு சுமார் 20 வருடம் பிடித்தது. பலரும்அறியாத ஒரு விடயம் என்னவென்றால் இந்நோய் 1861 ஆம் ஆண்டு கென்யாவில் வளர்ந்த காட்டுக் கோப்பியில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆயினும், ஸ்டூவர்ட் மெக்கூக் மற்றும் ஜான் வாண்டர்மீர் ஆகிய இருவரின் […]
இதுவரை உலகம் கண்டிராத தார்ப் பாதைகள், புகையிரத வண்டிகள், நீராவிக் கப்பல்கள், தொலைத்தொடர்புச் சாதனங்கள் அனைத்துமே இக்காலத்துக்குரியவை. 1760 ஆம் ஆண்டு முதல் 1820 – 1840 வரை – அதற்குப்பின்னரும் – பிரித்தானியாவில் தொடர்ந்த இயந்திரக் கைத்தொழில் புரட்சியே உலகத்தை நவீன யுகத்துக்குக் கொண்டுவந்தது. 1820 இல் தான் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஜோன் லவுடன் மக்அடம் (Johon Loudon MacAdam) என்பவரால் முதற்தடவையாக பாதைகள் கற்களால் சமப்படுத்தப்பட்டு கற்தூள்களால் […]
பிரித்தானியர் இலங்கையின் மன்னராட்சி முறைமையினை ஒழித்து, ழுழு நாட்டையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்ததுடன், அவர்களின் ஏகபோக நலனுக்காக பல்வேறு மாற்றங்களை செய்திருந்தமையினை முன்னைய கட்டுரையில் அவதானித்திருந்தோம். அதன்தொடர்ச்சியினை இனி பார்க்கலாம். 1830 களின் முற்பகுதியில், பிரித்தானியர்கள் இலங்கையில் தங்கள் நிலையை உறுதிப்படுத்துவதை கிட்டத்தட்ட பூர்த்திசெய்துவிட்டனர். ஐரோப்பாவிலும் உலக அரங்கிலும் அவர்களுக்கு பெரிய சவால்கள் இருக்கவில்லை. எனவே தீவின் அரசியல் ஸ்திரத்தன்மையிலும் பொருளாதார இலாபத்தைப் பாதுகாப்பதிலும் அவர்கள் அதிக ஆர்வம் […]