“கடவுளின் வடிவம் (திருப்பாச்சிலாராமத்தில் உறையும் சிவபெருமான்) இங்கு தாயாக, இறுதியாகக் கைவிடும் தாயாக, நோக்கப்படுகிறது. இது பக்தி உணர்வுக்கு மையமானது. அதுவும் , சுந்தரர் இந்தக் கடவுளைக் கைவிட்டு விடுவேன் என்று பயமுறுத்தவேறு செய்கிறார். தெய்வீக அன்புக்கு எதிர் வினை புரியும் சமயத்திலேயே தெய்வீகக் கருணையின்மையை சொல்லுகிறார். (வெண்டி டோனிகர், ‘இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு)” தமிழாக்கம் : க.பூரணச் சந்திரன், எதிர் வெளியீடு.2016). வெண்டி டோனிகரின் மேற்படி கருத்துக்கு […]
தமிழ்ப் பண்பாட்டுத் தொடக்கம் வேறெந்தச் சமூகத்தினதையும் விட தனித்துவம்மிக்கது. வரலாற்றுத் தொடக்கத்துக்குரிய கி.மு. 7 ஆம் நூற்றாண்டில் வணிகச் செழிப்புடன் நகர்ப் பண்பாட்டு விருத்தியைப் பெற்றிருந்த அதேவேளை அதற்கான வர்த்தகப் பரிமாற்றத்தை ஏற்றத்தாழ்வற்ற வகையில் சமூகங்கள் இடையே மேற்கொள்ள இயலுமாக இருந்தது. ஏனைய சமூகங்களில் நகர்ப் பண்பாட்டு எழுச்சி ஏற்பட முன்னர் ஏற்றத்தாழ்வான வாழ்முறை உருவாகி ஒடுக்கப்பட்டு சுரண்டப்படுகிற உழைப்பாளர்களது கடின வாழ்வுக்குரிய அடிமைத்தனம் ஏற்பட்டிருந்தது. அவ்வாறன்றித் தமிழக நகர்ப் […]
வீரயுக முடிவில் மூன்று பேரரசுகளையும் தகர்த்துப் பலநூறு ஆள்புலங்களாகத் தமிழகத்தை ஆக்கியவாறு களப்பிரர்களது ஆட்சி ஏற்பட்ட சூழலில் தோற்றம்பெற்ற நூல் “திருக்குறள்”. இது மிகப் பெரும் சமூக மாற்றக் காலகட்டம்; பல தசாப்தங்களாக மேலாதிக்கத்துடன் திகழ்ந்த விவசாயச் சமூக சக்தியான கிழார்களின் திணையானது தனக்குரியதான அரச அதிகாரத்தை இழந்து வரும் அதேவேளை வணிகச் சமூக சக்தியின் மேலாதிக்கத்துக்கு அனுசரணை வழங்கும் ஆட்சி முறையைச் சாத்தியப்படுத்துகிற மாற்றம் நடந்தேறி வரத் தொடங்கி […]
மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக (கி.மு 7 தொடக்கம் கி.மு 3ஆம் நூற்றாண்டுகள் வரை) குறிஞ்சி, முல்லை, நெய்தல் ஆகிய திணைகளின் இயற்கை விளைபொருட்களது வணிகமும் – வணிக எழுச்சியுடன் கைகோர்த்தவாறு கைத்தொழில் விருத்தியும் ஏற்படுத்தித் தந்த வாழ்வியல் செழிப்பு தமிழகத்தில் வீறுமிக்க பண்பாட்டு எழுச்சி ஏற்பட வழிகோலியது. தமது ஆள்புலத்தை விரிவாக்கும் ஆக்கிரமிப்பு யுத்தங்களை எவராலும் மேற்கொள்ள இயலாத வாழ்நிலை காரணமாக திணைகள் ஒவ்வொன்றுக்கும் இடையே சமத்துவமான பரிமாற்றங்கள் நிலவின; […]
தமிழர் வரலாற்றுத் தொடக்கத்தை ‘சங்க கால இலக்கியத் தொகுப்புகளின்’ அடிப்படையில் வைத்து ஆய்வுக்குட்படுத்தும் மரபு இருந்து வந்தது; கல்வெட்டுப் படிகள், பண்டைக்கால நாணயங்கள், அதுவரை கண்டறியப்பட்ட தொல்பொருட் சின்னங்கள் ஆகியன அதற்கு உதவியாக அமைந்திருந்தன. இலக்கியங்கள் வெளிப்படுத்திய பண்டைக்கால நகரங்கள் எனப் பேசப்படுவன புலவர்களது கற்பனைகள் என கருதப்படும் நிலை இருந்தது. விஞ்ஞானபூர்வமற்ற அதீதப் புனைவுகளைத் தமிழ் ஆர்வலர்கள் ‘வரலாற்று’ முன்வைப்புகளாக வெளிப்படுத்திய நிலையில் அன்றைய நகரங்களும் அத்தகையன என […]
“தமிழ்ப் பண்பாடு: ஊற்றுக்களும் ஓட்டங்களும்” எனும் பேசுபொருளின் முதல் தளமாக “திணை வாழ்வியலைத் தகர்த்து உருவாகிய அரசு” பற்றிப் பேசி வருகிறோம். இதுவரை பேசப்பட்டு வரும் ‘வர்க்கங்கள் உருவாகிய போது ஏற்பட்ட அவசியம் காரணமாக அரசு தோற்றம் பெற்றது’ என்பதற்கு மாறுபட்ட விடயமாக இங்குள்ள பேசு பொருள் அமைந்துள்ளது. இவ்வகையிலான புதிய தொடக்கம் ஒன்றையும் அதன் தொடர்ச்சியாக மாற்று வடிவிலான இயக்கப் போக்கையும் தமிழ்ப் பண்பாடு வெளிப்படுத்த ஏற்றதான அடித்தளம் […]
மகத்தான ஒக்ரோபர் புரட்சி (1917) ருஷ்யாவை “சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம்” என மாற்றிப் புனைந்து முழு உலக நாடுகளது மக்களுக்கும் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தது. எழுபதாம் ஆண்டுகள் வரை விடுதலை நாடும் மக்களுக்குச் ‘சோசலிசம்’ என்ற கருத்தியல் உத்வேகமூட்டும் நிவாரணியாக இருந்தது. அநேகமான நாடுகள் ‘ஜனநாய சோசலிச’, ‘சோசலிச ஜனநாயக’ என்பதான அடைமொழிகளை ஒட்டி தம்மை அழகுபடுத்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆட்பட்டிருந்தன. சோவியத் யூனியன் 1991 இல் தகர்ந்து […]
நுழைபுலம் இதுவரை இருந்தவாறு தொடர இயலாத நெருக்கடியான கட்டம் இன்று ஏற்பட்டுள்ளது. அனைத்து நாடுகளிலும் மக்களின் வாழ்வாதாரங்கள் தகர்க்கப்படும் வகையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றங்கள் பன்மடங்காக அதிகரித்தபடி உள்ளன. இத்தகைய பொருளாதார நெருக்கடிக்கான அடிப்படைக் காரணி ரஷ்ய – உக்ரேன் போர் என்பதாக ஊடகப் பரப்புரைகள் அமைந்துள்ளன. அமெரிக்காவும், ஐரோப்பாவும், நேட்டோ வாயிலாக ரஷ்யா மீது தாக்குதலை மேற்கொள்வதற்காக உக்ரேனைத் தளமாகப் பயன்படுத்தும் எத்தனங்களில் முனைந்திருந்த சூழலில் தற்காப்பு யுத்தம் […]