டெனிஸ் மெக்கில்ரே ஆய்வுகளில் இலங்கைத் தமிழரும் முஸ்லிம்களும் : பண்பாட்டு மானிடவியல் நோக்கு. Archives - Ezhuna | எழுநா

டெனிஸ் மெக்கில்ரே ஆய்வுகளில் இலங்கைத் தமிழரும் முஸ்லிம்களும் : பண்பாட்டு மானிடவியல் நோக்கு.

அரபுக்கள், சோனகர், முஸ்லிம்கள் : இலங்கை முஸ்லிம் இனத்துவ அடையாளத்தின் பரிணாமம் – பகுதி 11

7 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : டெனிஸ் மெக்கில்ரே மட்டக்களப்பு பிரதேசத்தில் இனக்குழப்பங்கள் 20 ஆம் நூற்றாண்டிலும் அதற்கு முன்னரும் கிழக்குக் கரையோரப் பகுதியில் இன உறவுகளைப் பாதித்த பல உள்ளூர் தமிழ் – சோனகக் கலவரங்கள் மற்றும் இடையூறுகள் ஆகியவற்றை பிரபலமான குறிப்புகள் விவரிக்கின்றன. உள்ளூர் தமிழ் – சோனக மோதல்களை நான் நேரடியாகக் காணவில்லை. என்றாலும், இதுபோன்ற மோதல்கள் பற்றிய வாய்வழிப் பதிவுகளை நான் சேகரித்தேன். இதற்கு உதாரணமான ஒரு […]

மேலும் பார்க்க

அரபுக்கள், சோனகர், முஸ்லிம்கள்: இலங்கை முஸ்லிம் இனத்துவ அடையாளத்தின் பரிணாமம் – பகுதி 10

16 நிமிட வாசிப்பு

தமிழ்/சோனக பண்பாட்டு வேறுபாடுகள் குறித்து பல்வேறு கருத்துகள் அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. ஆனால் ஒவ்வொரு குழு உறுப்பினர்களிடமிருந்தும் கிடைத்த கருத்துகளில் சில அடிப்படைக் கருத்துகள் வெளிப்பட்டன. சோனகர்கள் மிகவும் ஆற்றலும், கடின உழைப்பும் கொண்டவர்கள் என்று தமிழர்கள் பொதுவாக ஒப்புக்கொள்கிறார்கள். அவர்களின் மேம்படுத்தப்பட்ட வீடுகள் மற்றும் வளர்ந்து வரும் செல்வம் போன்றவை இந்த உண்மையைத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. உண்மையில், சோனகர்களின் பெருகிவரும் செழிப்பு பல தமிழ் உயர்சாதியினருக்கு கடுமையான கவலையை ஏற்படுத்துகிறது. […]

மேலும் பார்க்க

அரபுக்கள், சோனகர், முஸ்லிம்கள் : இலங்கை முஸ்லிம் இனத்துவ அடையாளத்தின் பரிணாமம் – பகுதி 09

13 நிமிட வாசிப்பு

தமிழர் – சோனகர் நேரடி சமூகத் தொடர்புக்கான மீதமுள்ள வாய்ப்புகள் பெரும்பாலும் தொழில் மற்றும் பொருளாதாரம் ஆகிய தளங்களில் காணப்படுகின்றன. 1970 களில், ஈழப் போராட்டம் தீவிரமடைவதற்கு முன்பு, தமிழர்களும் சோனகர்களும் அண்டை நிலங்களில் நெல் பயிரிட்டனர். நீர்ப்பாசனக் குழுக்களிலும் ஒன்றாகப் பங்கேற்றனர். தமிழ் மற்றும் சோனக நில உரிமையாளர்கள் ஒருவர் அடுத்த சமூகத்தைச் சேர்ந்த குத்தகைதாரர்களையும், வயற் தொழிலாளர்களையும் தொழிலில் சேர்த்துக் கொள்கிறார்கள். 1980 களில் தொடங்கிய வன்முறையின் […]

மேலும் பார்க்க

அரபுக்கள், சோனகர், முஸ்லிம்கள்: இலங்கை முஸ்லிம் இனத்துவ அடையாளத்தின் பரிணாமம் – பகுதி 08

11 நிமிட வாசிப்பு

தமிழரும் சோனகரும் : ஒற்றுமைகளும் வேறுபாடுகளும் தமிழர்களதும், சோனகரதும் குடியிருப்புப் பகுதிகள் பெரும்பாலும் ஒரே தன்மையானதாகவே இருக்கும். அவை மணல் பாதைகளில் ஒரு தளத்தில் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டுப் பகுதியும் சுற்றுச்சுவர்களால் அல்லது வலிமையான கம்பி வேலிகளால் பாதுகாக்கப்பட்டு, செம்பருத்திச் செடிகள், தென்னை, பாக்கு மற்றும் மா போன்ற மரங்கள் செழிப்பாக நடப்படுகிறது. சாதாரணத் தமிழ் வீடுகள், கிழக்கே கவனமாகப் பெருக்கப்பட்ட மணல் முற்றத்தை நோக்கிய பாரம்பரியத் தரைத் திட்டத்தைப் […]

மேலும் பார்க்க

அரபுக்கள், சோனகர், முஸ்லிம்கள் : இலங்கை முஸ்லிம் இனத்துவ அடையாளத்தின் பரிணாமம் – பகுதி 07

11 நிமிட வாசிப்பு

கிழக்குப் பிராந்தியத்தில் தமிழரும் சோனகரும் : ஒரு முக்கியமான சோதனை இன்று, தமிழ் அரசியல் தலைமையின் புறக்கணிப்பு மற்றும் அவமரியாதைச் செயல்கள் காரணமாகவும், தங்களின் அரசியல் தலைவர்களின் வழிகாட்டல்களுக்கு பதிலளிக்கும் விதமாகவும், இலங்கைச் சோனகர்கள் தங்களை ஒரு தனித்துவமான இனம் மற்றும் மதக்குழுவினர் என்ற தெளிவான பிம்பத்தைப் பெற்றுள்ளனர். 1980 களின் முற்பகுதியில் ஈழப் போர் வெடித்ததில் இருந்து, இனவாத நலன்களைப் பிரிதிநிதித்துவப்படுத்திய சிங்கள பெரும்பான்மைக் கட்சிகள், தமிழ் பேசும் […]

மேலும் பார்க்க

அரபுக்கள், சோனகர், முஸ்லிம்கள் : இலங்கை முஸ்லிம் இனத்துவ அடையாளத்தின் பரிணாமம் – பகுதி 06

10 நிமிட வாசிப்பு

1920 கள் மற்றும் 1930 களில் இலங்கைச் சோனகர்கள் அகில இலங்கை முஸ்லிம் லீக் மற்றும் அகில இலங்கைச் சோனகர் சங்கம் என இரண்டு போட்டி அரசியல் வம்சமாகப் பிளவுபட்டனர். இவ்விரு அரசியற் சங்கங்களின் தலைமைகளான T.B. ஜாயா மற்றும் சேர் ராசிக் ஃபரீட் ஆகிய இருவருமே புதிய அரசியல் சீர்திருத்தச் சட்டசபையில், சிறுபான்மைப் பிரதிநிதித்துவம் ‘50 : 50’ அமைய வேண்டும் என்ற வீணான கோரிக்கையை முன்வைத்த இலங்கைத் […]

மேலும் பார்க்க

அரபுக்கள், சோனகர், முஸ்லிம்கள் : இலங்கை முஸ்லிம் இனத்துவ அடையாளத்தின் பரிணாமம் – பகுதி 05

11 நிமிட வாசிப்பு

இலங்கைச் சோனகத் தலைமையானது, ஒரு தனித்துவமான இலங்கை-அரபு அடையாளத்தை (Ceylonese – Arab identity) வளர்ப்பதற்கான நோக்கில், இலங்கைச் சோனகர் மத்தியில் வளர்ந்துவந்த பொது விசுவாசத்தை புறக்கணித்தது. அமீர் அலி குறிப்பிட்டுள்ளபடி, இந்த நூற்றாண்டின் (இருபதாம்) தொடக்கப் பகுதியில், இலங்கைச் சோனக உயர் குழாத்தினர், எகிப்துக்குத் திரும்புவதற்கு ஏங்கிக் கொண்டிருந்த, நாடுகடத்தப்பட்ட அதிருப்தியாளரான அரபி பாஷாவின் மீது ஒருவித நாடக விசுவாசத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இருந்தனர் (அசாத் 1993: 42-43). […]

மேலும் பார்க்க

அரபுக்கள், சோனகர், முஸ்லிம்கள் : இலங்கை முஸ்லிம் இனத்துவ அடையாளத்தின் பரிணாமம் – பகுதி 4

13 நிமிட வாசிப்பு

இருபதாம் நூற்றாண்டில் சோனக இனத்துவ அரசியல்  நவீன காலத்தில், கேரளா மற்றும் தமிழக முஸ்லிம்கள் – அவர்களுக்கிடையில் கலாச்சார பன்முகத்தன்மை, உள்ளக சமூகப் பிரிவுகள் இருந்தபோதிலும் – தாங்கள் ‘யார்’ என்பதில் ஒரு நியாயமான பாதுகாப்பு சார்ந்த அச்சத்தை உணர்ந்தனர். இதற்கு மாறாக, இலங்கைச் சோனகரின் முன்னணி சமூகத் தலைமைகள், 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து, அவர்களின் உயிரியல் – கலாசாரத் தோற்றம் மற்றும் வளர்ந்து வரும் இனக்குழும […]

மேலும் பார்க்க

அரபுக்கள், சோனகர், முஸ்லிம்கள்: இலங்கை முஸ்லிம் இனத்துவ அடையாளத்தின் பரிணாமம் – பகுதி 3

10 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : டெனிஸ் மெக்கில்ரே இலங்கையில், மரைக்காயர் எனும் சொல் பெரும்பாலும் மரைக்கார் (மரிக்கார், மார்க்கார், முதலியன) என வழங்கப்படுகிறது. இது முன்னணி சோனகக் குடும்பப் பெயர்களிலும், பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையின் தலைவருக்கு (அதாவது உள்ளூர் சோனக சமூகத்தின் தலைவர்) வழக்கமாக வழங்கப்படும் பெயராகவும் விளங்குகிறது (அலி 1981a; மஹ்ரூஃப் 1986a; மெக்கில்ரே 1974). தென் தமிழ்நாட்டின் மரக்காயர் நகரங்களுக்கும் இலங்கைச் சோனக குடியேற்றங்களுக்கும் இடையிலான வணிக, கலாச்சார […]

மேலும் பார்க்க

அரபுக்கள், சோனகர், முஸ்லிம்கள் : இலங்கை முஸ்லிம் இனத்துவ அடையாளத்தின் பரிணாமம் – பகுதி 2

21 நிமிட வாசிப்பு

ஆங்கில மூலம் : டெனிஸ் மெக்கில்ரே கேரளா, தமிழ்நாடு, இலங்கை முஸ்லிம்களின் வித்தியாசமான இனத்துவ வளர்ச்சி இலங்கையிலும் சரி, தமிழகத்திலும் சரி, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட கிறிஸ்தவர்கள் பொதுவாகத் தங்களை தமிழ்க் கிறிஸ்தவர்கள் என்று நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் இலங்கை முஸ்லிம்களிடையே அப்படியொரு எண்ணம் இல்லை. தம்மை இஸ்லாமிய நம்பிக்கையைப் பின்பற்றுகின்ற தமிழர்களாக அடையாளப்படுத்திக்கொள்வதில் விருப்பமற்றுள்ளனர். இஸ்லாமிய இறையியல் தவிர, தமிழ் இலக்கியம், பண்பாட்டு மரபு போன்றவற்றுக்கு முழுமையான பங்களிப்புச் செய்வதாக […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்