இலங்கையில் பிராமி மற்றும் சிங்கள கல்வெட்டுக்களில் தமிழர் Archives - Ezhuna | எழுநா

இலங்கையில் பிராமி மற்றும் சிங்கள கல்வெட்டுக்களில் தமிழர்

தமிழரின் பெளத்தப் பள்ளி பற்றிக் கூறும் வெஸ்ஸகிரி கற்பலகைக் கல்வெட்டு

10 நிமிட வாசிப்பு | 14196 பார்வைகள்

அநுராதபுரம் பண்டைய நகரில் அமைந்துள்ள வெஸ்ஸகிரிய பகுதியில் ஓடும் மல்வத்து ஓயா ஆற்றின் மேற்குக் கரையில் இந்தக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இது பொ. ஆ. 946-954 வரை இலங்கையை ஆட்சி செய்த 4 ஆம் உதயன் காலத்தில் எழுதப்பட்டுள்ளது. மூன்று துண்டுகளாக உடைந்திருந்த கற்பலகை ஒன்றில் கல்வெட்டு பொறிக்கப்பட்டிருந்தது. ஆனால் கல்வெட்டின் இரண்டு துண்டுகள் மட்டுமே கிடைக்கப்பெற்றன. இவற்றில் பெரிய துண்டாகக் காணப்படுவது கல்வெட்டின் மேற்பகுதிக்குரிய துண்டாகும். இது 2 […]

மேலும் பார்க்க

பிரித்தெடுக்கப்பட்ட தமிழரின் நிலம் பற்றிக் கூறும் ரன்கொத் விகாரை கல்வெட்டு

10 நிமிட வாசிப்பு | 14547 பார்வைகள்

பொலநறுவை பண்டைய நகரில் உள்ள ரங்கொத் விகாரையின் அருகில் 1905 ஆம் ஆண்டு இந்தக்கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. அப்போது இதன் அடியில் உள்ள பீடப்பகுதி உடைந்த நிலையில் இரண்டு தூண்டுகளாகக் காணப்பட்டது. பின்பு இக்கல்வெட்டு பொருத்தப்பட்டு, அனுராதபுரம் தொல்பொருள் காட்சிச்சாலையில் வைக்கப் பட்டுள்ளது. இக்கல்வெட்டு பொ.ஆ. 914-923 வரையான காலப்பகுதியில் ஆட்சி செய்த 5 ஆம் காசியப்பன் காலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு பிதர்வட்டு குழிய எனும் கிராமத்திற்கு கொடுப்பனவுகள் வழங்கப்படுவது மற்றும் […]

மேலும் பார்க்க

தமிழர் கிராமங்கள் மற்றும் காணிகள் பற்றிக் கூறும் அநுராதபுரம் கல் தோணிக் கல்வெட்டு

9 நிமிட வாசிப்பு | 13637 பார்வைகள்

அநுராதபுரம் பண்டைய நகரில் உள்ள தூபராம தூபியின் கிழக்கில் உள்ள கல் தோணி (Stone-Canoe) என்றழைக்கப்படும் இடத்தில் இந்தக்கல்வெட்டு காணப்படுகிறது. அழகாகச் செதுக்கப்பட்ட கற்பலகை ஒன்றில் கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தக்கல்வெட்டு பொ. ஆ. 956 முதல் 972 வரை இலங்கையை ஆட்சி செய்த 4 ஆம் மகிந்தன் காலத்தில் எழுதப்பட்டுள்ளது.   கற்பலகையில் 6 அடி 5 அங்குல நீளமும், 2 அடி 8 அங்குல அகலமும் கொண்ட மேற்பரப்பில் […]

மேலும் பார்க்க

தமிழர்களுக்கு மாகாண தலைப்பட்டினத்தைக் கொடுக்கக் கூடாது எனக் குறிப்பிடும் பதுளைக் கல்வெட்டு

7 நிமிட வாசிப்பு | 18083 பார்வைகள்

பதுளை பொதுநூலகத்தின் முன்பக்கம் ஒரு உயரமான தூண் நடப்பட்டுள்ளது. இது நான்கு பக்கங்களும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டாகும். இதன் மேல்பகுதியில் சிறிய கூரை போடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்தத்தூண் கல்வெட்டு ’சொரபொர வெவ’ எனும் குளக்கட்டின் அருகில் கண்டெடுக்கப்பட்டு, பதுளை கச்சேரிக்கு கொண்டு வந்து வைக்கப்பட்டு, பின்பு அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, தற்போது பதுளை பொதுநூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தில் உள்ள மகியங்கனையின் வடக்குப் பக்கமாக 4 கி. […]

மேலும் பார்க்க

தமிழ் அதிகாரி மகாசாத்தான் பற்றி குறிப்பிடும் தாமரவெவ தூண் கல்வெட்டு

7 நிமிட வாசிப்பு | 12506 பார்வைகள்

அநுராதபுரம் மாவட்டத்தில் தமிழர் பற்றிக் குறிப்பிடும் இன்னுமோர் கல்வெட்டு துடுவ துலான என்னுமிடத்தில் அமைந்துள்ள தாமரவெவ எனும் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டது. தாமரவெவ கல்வெட்டும் இலங்கையை ஆட்சி செய்த 2ஆம் சேனன் காலத்தில் (பொ.ஆ. 853 முதல் 887 வரை) பொறிக்கப்பட்டுள்ளது. மன்னனின் (2ஆம் சேனன்) 31ஆவது ஆட்சி ஆண்டில் இக்கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது.   35 ஆண்டுகள் இலங்கையின் மன்னனாக 2ஆம் சேனன் ஆட்சி செய்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக்கல்வெட்டு 7 […]

மேலும் பார்க்க

தமிழர் பற்றிக் குறிப்பிடும் பிற்காலக் கல்வெட்டுக்கள் (சோழர் காலத்திற்கு முன்பு)

8 நிமிட வாசிப்பு | 15860 பார்வைகள்

இலங்கையில் பொ. ஆ. மு. 3ஆம் நூற்றாண்டு முதல் பொ. ஆ. 5 ஆம் நூற்றாண்டு வரை பிராமிக் கல்வெட்டுக்கள் எழுதப்பட்டன. அதன் பின்பு அதாவது 6 ஆம், 7 ஆம் நூற்றாண்டுகளில் கல்வெட்டுக்கள் எதுவும் பொறிக்கப்படவில்லை என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதன் பின்பு 8 ஆம், 9 ஆம், 10 ஆம் நூற்றாண்டுகளிலே சில கல்வெட்டுக்கள் மட்டுமே பொறிக்கப்பட்டன. இவை தமிழ், சிங்களம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டன. […]

மேலும் பார்க்க

தீகவாபியின் குடிமகனான தமிழ் வணிகன் பற்றிய குடிவில் கல்வெட்டு

5 நிமிட வாசிப்பு | 15080 பார்வைகள்

அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை நகரின் தெற்கில் 13 கி.மீ. தூரத்தில் இறக்காமம் குளம் அமைந்துள்ளது. இந்தக் குளத்தின் வடக்குப் பக்கத்தில் மாயக்கல் எனும் சந்நியாசி மலை காணப்படுகிறது. இதை அடுத்து மாணிக்கமடு எனும் சிறிய கிராமமும், ஓட்டுத் தொழிற்சாலையும் அமைந்துள்ளன. இவற்றைக் கடந்தவுடன் குடிவில் எனும் கிராமம் காணப்படுகிறது. இக்கிராமத்தின் வடகிழக்கில் குடிவில் குளம் அமைந்துள்ளது. குளத்திற்கு சற்று தூரத்தில் கல்லோயா எனும் பட்டிப்பளை ஆறு ஓடுகிறது. கிராமத்தின் இடது […]

மேலும் பார்க்க

தமிழ் குடும்பத் தலைவன் குட்டன் பற்றிய சேருவில கல்வெட்டு

4 நிமிட வாசிப்பு | 14235 பார்வைகள்

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் நகரின் தெற்கில் 16 கி. மீ. தொலைவில் அமைந்துள்ள சேருவில என்னுமிடத்தில் இக் கல்வெட்டு காணப்படுகிறது. சேறுவில்லு எனும் பெயரே சேருவில என திரிபடைந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. இவ்விடத்தைச் சுற்றி சேறு நிறைந்த பல வில்லுக் குளங்கள் இருந்ததாகவும், இதன் காரணமாக இப்பெயர் உருவானதாகவும் தெரிகிறது. பண்டைய காலத்தில் இது “சேறுநகரம்” எனப் பெயர் பெற்று விளங்கியது. சிங்கள மொழியில் இது “சேருநுவர ராஜதானிய” என […]

மேலும் பார்க்க

தமிழ் வணிகன் பற்றிக் கூறும் பெரிய புளியங்குளம் கல்வெட்டுக்கள்

3 நிமிட வாசிப்பு | 19617 பார்வைகள்

வவுனியா நகரின் வடகிழக்கில் 13 கி.மீ தொலைவில் உள்ள பெரிய புளியங்குளம் எனும் இடத்தில் உள்ள குளத்தின் அருகில் ஒரு உயரமான கற்பாறைத் தொகுதி காணப்படுகிறது. சுமார் 100 அடி உயரமான ஒரு நீண்ட பாறையின் மீது மூன்று பெரிய கற்பாறைகளும், ஐந்துக்கும் மேற்பட்ட சிறிய கற்பாறைகளும் தூக்கி வைத்தாற்போல் இயற்கையாகவே அமைந்துள்ளன. குடும்பத் தலைவன் விசாகன் பற்றிய இரண்டாவது கல்வெட்டு பெரிய புளியங்குளத்தில் காணப்படும் இரண்டாவது கல்வெட்டில் “தமெத […]

மேலும் பார்க்க

தமிழர் தொடர்பாக பலரும் அறிந்திருந்த 5 பிராமிக் கல்வெட்டுக்கள்

10 நிமிட வாசிப்பு | 18213 பார்வைகள்

“தமெத”எனும் சொல் பொறிக்கப்பட்டுள்ள ஐந்து கல்வெட்டுக்களும் வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரம், வடமாகாணத்தில் வவுனியா மாவட்டத்தில் பெரிய புளியங்குளம், கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் குடுவில், மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் சேருவில ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுக்கள் பொ. ஆ. மு. 3ஆம் நூற்றாண்டு முதல் பொ. ஆ. 5ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் பொறிக்கப்பட்டவையாகும்.  தமிழர் எனும் சொல் பொறிக்கப்பட்டுள்ள இவ் ஐந்து கல்வெட்டுக்கள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்