கூட்டுறவு இயக்கத்தின் வகிபாகம் : போரின் பின்னரான மீள் கட்டுமானமும் அபிவிருத்தியும் Archives - Ezhuna | எழுநா

கூட்டுறவு இயக்கத்தின் வகிபாகம் : போரின் பின்னரான மீள் கட்டுமானமும் அபிவிருத்தியும்

கூட்டுறவுக்குள் கூட்டுறவு : பிலிப்பைன்ஸ் அனுபவம்

16 நிமிட வாசிப்பு | 4147 பார்வைகள்

கூட்டுறவின் குறிக்கோள் என்ன என்பது தொடர்பாக கூட்டுறவாளர்களிடையே பல கருத்துகள் உள்ளன. உண்மையில், கூட்டுறவின் நோக்கம் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள சமூகத்தின் பொருளாதார, கலாசார மற்றும் சமூகத் தேவைகளை உணர்ந்து கொள்வதாகும். கூட்டுறவுகள் தங்கள் சமூகத்தின் மீது வலுவான அர்ப்பணிப்போடு சமூகத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவது மிக முக்கியமானதாகும். கூட்டுறவுகள், மக்கள் தங்கள் பொருளாதார எதிர்காலத்தைக் கட்டுப்படுத்த அனுமதிக்கின்றன. அவை பங்குதாரர்களுக்குச் சொந்தமானவை அல்ல என்பதால், கூட்டுறவுச் […]

மேலும் பார்க்க

உள்ளிருந்து உணர்தலும் சமகால நெருக்கடிகளும்: மட்டக்களப்பு மாவட்டத்தின் கூட்டுறவுக் கால்நடைப் பண்ணையாளர்களின் அனுபவங்கள்

10 நிமிட வாசிப்பு | 4069 பார்வைகள்

1977 இல் திறந்த பொருளாதாரம் அறிமுகமான போது பலர் ‘சந்தைப் பொருளாதாரம்’ தான் இலங்கையின் பிரகாசமான எதிர்காலத்திற்கான வழி எனக் கருதியதுண்டு. அப்போதைய நெருக்கடியில் அதற்கான ஒரு தேவை இருந்தது. திறந்த பொருளாதாரம் நன்மைகளைக் கொண்டு வந்தாலும் அது பல அதிர்வுகளையும் தந்தது. கூட்டுறவுத் துறை அதனால் மிகவும் நசுக்கப்பட்டது. அரசு கூட்டுறவுத் துறையை ஒரு விளிம்பு நிலைக்கு கொண்டுவந்தது. திறந்த பொருளாதார சுனாமி கூட்டுறவின் கட்டமைப்புகளை சிதைத்தது. ஆனால், இந்தியாவில், […]

மேலும் பார்க்க

ஈழத்தில் கூட்டுறவுச் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பு 

17 நிமிட வாசிப்பு | 5590 பார்வைகள்

கூட்டுறவு, ஒரு பலமான சமூக – பொருளாதார அடித்தளத்தையும் சமூக மூலதனத்தையும் சம அளவில் உள்வாங்கி, பல மட்டங்களில் (கிராம, பிரதேச, மாவட்ட மற்றும் மாகாணச் சம்மேளனங்களாக) கிளைவிட்டுத் தழைக்கும் ஒரு அமைப்பு ஆகும். இலங்கையில், மிகவும் குறிப்பாக, வடக்கு – கிழக்கு மற்றும் மலையக நிர்வாக நிலப்பரப்பில் கூட்டுறவின் அசைவியக்கம் ஒரு தேங்கு நிலைக்குச் சென்றுள்ளது. அண்மையில் கூட, இது பற்றிய கரிசனை பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. தற்போதைய கூட்டுறவின் […]

மேலும் பார்க்க

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை : தென்கிழக்கு ஆசியாவின் முதல் இலாப நோக்கற்ற கூட்டுறவு மருத்துவமனை

16 நிமிட வாசிப்பு | 14027 பார்வைகள்

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை எம் தேசத்திற்கே முன்னோடி. இதன் அனுபவங்கள், பல கூட்டுறவு வைத்தியசாலைகளை உருவாக்க உதவக்கூடியன. சமூக நலன் சார் அணுகுமுறை, சுகாதாரப் பாதுகாப்பின் தரத்தை மேம்படுத்தல், நோயாளிகளின் கவனிப்பு, மருத்துவத் தொழில்முறை மீதான அர்ப்பணிப்பு மற்றும் பரந்த சமூக அணுகுமுறை போன்றன தற்போதைய காலகட்டத்தில் அரிதாகவே காணப்படுகின்றன. தற்போதைய, மருத்துவச் சேவை பலவிதமான விமர்சனங்களுக்கு உள்ளாகிறது. ஆனால் எமது முன்னோர்களின் மருத்துவச் சேவை, முழுச் சமூகத்திற்கும் பயன்படக்கூடிய […]

மேலும் பார்க்க

ஐந்து இலட்சம் கால்நடைப் பண்ணையாளர்கள் ஒன்றிணைந்து தயாரித்த ‘மந்தன்’ திரைப்படம் : கூட்டுறவின் முன்னுதாரணம்

16 நிமிட வாசிப்பு | 6084 பார்வைகள்

1 1949 இல் குரியன், குஜராத்தில் உள்ள ஆனந் நகருக்கு வந்தபோது அவருக்கு வயது 28. அப்போது அவர் அங்குள்ள விவசாயிகளை நம்பவைத்தார்; அவர்கள் உற்பத்தி செய்யும் பால் அவர்களுக்கு மட்டுமே சொந்தமானது, அவர்களைத் தவிர வேறு யாருக்கும் அவர்களின் பாலில் உரிமை கோர அதிகாரம் இல்லை என கால்நடைப் பண்ணையாளர்களுக்கு வழிகாட்டினார். வியாபாரிகள் மற்றும் முகவர்களால் உள்ளூர்ப் பால் பண்ணையாளர்கள் சுரண்டப்படுவதற்கு பதிலாக, அமுல் டிசம்பர் 19, 1946 […]

மேலும் பார்க்க

ஓர் அரசியற் கருவியாக கூட்டுறவு ஏன் வலுவிழந்தது? : கூட்டுறவின் அடையாளம் மற்றும் அரசியல்

17 நிமிட வாசிப்பு | 11713 பார்வைகள்

கூட்டுறவின் தனித்துவ அடையாளம், அதன் அரசியல் மொழி தொடர்பான கருத்துரைகள் மிக அவசியமானவை. ஏனெனில், கூட்டுறவின் இன்றைய தேக்க நிலையைப் படம் பிடிக்கவும் அதன் தொடரும் நெருக்கடிகளை ஆராய்ந்து நாடி பிடிக்கவும் இவைகளைப் பற்றிய தெளிவு மிக அவசியம். கூட்டுறவின் ஆரம்ப நிலை, அதன் அடையாளம், சிறப்புத் தன்மைகள் மற்றும் இன்றைய செல்நெறி வழி நோக்கின், ஓர் அரசியற் கருவியாக கூட்டுறவு ஏன் வலுவிழந்தது? என்பதைத் தெளிவுறக் காணலாம்.   […]

மேலும் பார்க்க

போரின் பின்னரான மீள்கட்டுமானத் திட்டங்களுக்கும் நிலையான அபிவிருத்திக்குமான கூட்டுறவு இயக்கத்தின் வகிபாகம் : எங்கிருந்து தொடங்குவது?

11 நிமிட வாசிப்பு | 9217 பார்வைகள்

மே 2009  என்பது மிக முக்கியமான ஒரு காலப்புள்ளி; தமிழர்கள் எல்லோருக்கும். ஒரு யுத்த காலத்தின் முடிவையும், பல சகாப்தங்களாக யுத்தம் விதைத்த அளவிட முடியாத மொத்த அழிவுகளையும் கணக்கில் எடுக்கும் காலம்; பலருக்கு கனவுகளில் இருந்து விழித்தெழும் காலம். சிலருக்கு, எதிர்பார்க்காத ஒரு தோல்வியின் முழு வீச்சையும் ஆரத்தழுவி கால அசைவின் போக்கில் கரைந்து போகும் காலம்; அது முழு நம்பிக்கையும் புதைக்கப்பட்ட அசைவற்ற மனநிலை. ஆனால், கடந்த […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (15)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)