உளுந்து, சிறுபயறு, பயறு, கடலை, காராமணி (கௌபி), துவரை, கொள்ளு, எள் என்பன பொதுவாக எமது பாரம்பரிய உணவுகளில் பாவிக்கப்படும் பருப்பு வகைகளாகும். இவற்றைவிட மொச்சை, பட்டாணி, பொட்டுக்கடலை போன்று வேறுவகை பருப்புவகைகளும் பாவனையில் இருந்துவருகின்றன. மேற்படி பருப்பு வகைகள் புரதச்சத்து நிறைந்தனவாகவும், பெரும்பாலும் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களையும் கொண்டவையாகக் காணப்படுகின்றன. காலை, இரவு உணவுகளாக, சிற்றுண்டி வகைகளில், மதிய உணவுடன் கறிகளாக அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. புரதச்சத்து அதிகம் கொண்டிருக்கின்றமையால் […]