சமய அபிவிருத்திகள் தேரவாத பௌத்தம் தமிழ்நாட்டில் தேரவாத பௌத்தம் எழுச்சி பெற்றதன் விளைவாக அங்கு பாளி இலக்கியம் சிறப்புற்று வளர்ந்தது. இந்த வரலாறு இன்று மறக்கப்பட்ட ஒரு வரலாறாகி விட்டது. நான்காம் நூற்றாண்டு தொடக்கம் ஆறாம் நூற்றாண்டின் இறுதிவரை, தமிழ்நாட்டில் இருந்த தேரவாத பௌத்த மையங்களில், சிறப்பாகக் காஞ்சி, மதுரை, காவிரிப்பட்டினம் மற்றும் உறையூர் ஆகிய நகரங்களில் அமைந்திருந்த பௌத்தப் பெரும் பள்ளிகளில் தலைசிறந்த பௌத்த அறிஞர்கள் பாளி மொழியில் […]
ஆதி வரலாற்றுக் காலத்துக்குப் பின் அடுத்து வந்த நூற்றாண்டுகளில் தொடர்ந்து இரு பிரதான இனக் குழுக்களின் ஆக்கம் நடைபெற்றது. பொ.ஆ. 300க்கும், 900க்கும் இடையில் மிகவும் தெளிவாகத் தனித்துவப் பண்புகளுடன் இவை பரிணாம வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்தன எனலாம். முதல் தடவையாக இக் காலத்துக் கல்வெட்டுகளில் சிங்கள மொழியின் பழைய வடிவமாகிய ஹௌ (எளு) மொழியில் சிங்கள இனக் குழுவுக்கு ஹௌ என்ற பெயரும் தமிழ் இனக் குழுவுக்கு […]
கிறிஸ்துவுக்கு முற்பட்ட முதலாம் நூற்றாண்டின் மூன்றாம் காலின் ஆரம்பத்திலிருந்து கிறிஸ்துவுக்குப் பிற்பட்ட ஐந்தாம் நூற்றாண்டின் இரண்டாம் கால் வரையுள்ள ஏறக்குறைய ஐந்து நூற்றாண்டு காலமாக இலங்கையிலே தமிழ் மன்னன் எவரும் ஆட்சி புரியவில்லை. எனினும் இக் காலப்பகுதியிலே தமிழ் மக்கள் முன்போலத் தொடர்புகளை ஏற்படுத்தி இந்நாட்டுக்கு வந்திருக்க வேண்டும். மன்னரைப் பற்றியும் பௌத்த சங்கத்தைப் பற்றியும் எழுதி வைத்த பழைய வரலாற்றாசிரியர்களுக்கு மக்கள் வரலாற்றிலே அக்கறை இருக்கவில்லை. இதனால் தமிழ் […]