ஆளும் வர்க்கத்தினரால் அல்லது வசதியுள்ள வர்க்கத்தினரால் சாதாரண மக்கள் காலங்காலமாக சுரண்டப்படுவதும் அதற்கு எதிராக போராட்டங்கள் வெடிப்பதும் இயல்பே. உலகில் இதைப் போன்ற சுரண்டல்களுக்கு எதிராக பல போராட்டங்கள் மற்றும் புரட்சிகள் வெடித்திருக்கின்றன என்பது வரலாறு. இலங்கையில் பல்லின மக்கள் வாழ்ந்தாலும் இன்னும் அந்நியர்கள் போலவே நடத்தப்படுகின்ற ஒரு சமூகம் மலையகச் சமூகம். அவர்கள் இந்த நாட்டின் குடிகள் இல்லை என்று முன்னைய அரசுகளினால் நாடு கடத்தப்பட்ட துயர்மிகு வரலாறுகளை […]
மலையகப் பகுதிகளில் வாழ்க்கைக்காக பல போராட்டங்கள் இடம்பெறுகின்றன. ஆனால் அதற்கும் அப்பாற்பட்டு, மலையகப் பெண்களின் நாளாந்த வாழ்க்கைப் போராட்டம் சவால்கள் நிறைந்தவையாக உள்ளது. தேசிய, சர்வதேச ரீதியில் அரசியல் அரங்கில் பெண்களின் அங்கத்துவம் பற்றி பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இக்காலத்தில் அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் வாழும் மலையகப் பெண்களைப் பற்றி பேச வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகின்றது. மலையகப் பெண்களுக்கான சவால்கள் அவர்களின் சிறுவயது முதலே தொடங்கிவிடுகிறது. […]
மலையகம் இலங்கை தீவின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. புவியின் சார்பாக சப்ரகமுவ குன்றுகளைத் தவிர்த்து கடல் மட்டத்திலிருந்து முன்னூறு மீட்டருக்கு மேல் அமைந்துள்ள பகுதி ‘மலையகம்’ என வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் சமூகஞ்சார் வரைவிலக்கணங்கள் படி இலங்கையின் மலையகம் இவ்வெல்லைக்கு அப்பாலுள்ள பகுதிகளையும் இணைத்துக் கொள்கிறது. அதனடிப்படையில் மாத்தளை, கண்டி, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களும் மலையகத்தின் சமூகஞ்சார் வரைவிலக்கணத்தி்ல் உள்ளடங்குவதோடு சிலவேளைகளி்ல் கொழும்பு மற்றும் காலி மாவட்டங்களும் உள்ளடக்கப்படுகின்றன. அதற்கமைய […]