கி.மு.3 ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் இலங்கையில் அறிமுகமாவதற்கு முன்னர் இங்கு நிலவிய பெருங்கற்காலப் பண்பாட்டுடன் பொதுவானதொரு பண்பாடு இலங்கை முழுவதிலும் காணப்பட்டது. இப்பண்பாட்டின் பரவல், செறிவு, வளர்ச்சி, அவற்றின் வளங்கள் என்பன இடத்திற்கு இடம் வேறுபட்டு காணப்பட்டமைக்கு அவ்வவ்விடங்களில் காணப்பட்ட பௌதீக வளங்கள் காரணமாக இருப்பினும் அவை பெருங்கற்காலப் பண்பாட்டுடன் ஏற்பட்ட அபிவிருத்திகளாகும். இப்பண்பாடு அறிமுகமாவதற்கு முன்னர் இலங்கையில் மலைநாடு தொட்டு தாழ்நிலம் வரை ஏறத்தாழ 75 இற்கு […]
யாழ்ப்பாணத்தில் வல்லிபுரத்திலிருக்கும் விஷ்ணு கோயிலுக்குச் சமீபமாக இருந்த பௌத்த கோயில்களின் அழிபாடுகளைப் பற்றி அப்பகுதி மக்கள் பல தலைமுறைகளாக அறிந்திருந்தார்கள். 1916 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் அரசாங்க அதிபராக இருந்த லூயிஸ், வல்லிபுரத்தைப் பார்வையிடச் சென்ற சமயம் விஷ்ணு கோயிலின் பூசகர் அப்பகுதியிலிருந்த பௌத்த கோயில்களின் அழிபாடுகளை அரசாங்க அதிபரைக் கூட்டிச் சென்று காண்பித்தார். இதைத் தொடர்ந்து வல்லிபுரத்திலிருந்த பௌத்த கோயில்களின் அழிபாடுகள் இருந்த இடத்தில் 1936 இல் அகழ்வுகள் […]
கடந்த காலங்களில் நிலவிய உள்நாட்டுப் போர் இலங்கையை பொருளாதார அடிப்படையிலும் பின்தங்கச் செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுக் குண்டு வெடிப்பு இலங்கைக்கு வருகிற சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பாதித்தது. மீண்டும், கொரோனா கொள்ளைநோய் நாட்டை மேலும் சீர்குலைத்தது. ஆட்சியாளர்களின் தவறான பொருளாதாரத் திட்டங்களினாலும் இலங்கை கடுமையான பொருளாதாரச் சரிவைச் சந்தித்தது. இப்போது அயல் நாடுகளிடம் கையேந்தும் நிலையில், நாடு ஏராளமான கடனில் மூழ்கியிருக்கிறது. உக்ரேன் – இரஷ்யப் […]
இவ் ஆண்டுடன், மலையக மக்கள் இலங்கையில் காலடி வைத்து கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் மலையத்தின் கட்சிகள் அல்லது தொழிற்சங்கங்கள் ஏதாவதொன்றுக்கு நூறு வருட வரலாறாவது இருக்குமா என்றால் நிச்சயமாக இல்லை என்றே பதில் கிடைக்கும். இதனை அரசியல் ரீதியான நோக்கோடு ஆராய்வது அவசியமாகிறது. 19 ஆம் நூற்றாண்டில், இந்தியாவில் சுதந்திரதாகம் பேரெழுச்சி பெற்று காந்தியடிகளின் சத்தியாக்கிரகப் போராட்டங்கள் வெள்ளையர்களின் அதிகாரத்தை உலுக்கிக்கொண்டிருந்தது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், […]
திருநெல்வேலி, திருச்சி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, முசிறி, துறையூர், நாமக்கல், மதுரை, அறந்தாங்கி போன்ற தமிழக மாவட்டங்களில் காணப்பட்ட பொருளாதார-சமூக ஏற்றத்தாழ்வுகள், நில உரிமையாளர்களின் ஆதிக்கம், சாதிய ஒடுக்கு முறைகள், வறுமை போன்றவை வாட்டி வதைத்த காலப் பகுதியில், ஏறக்குறைய 200 வருடங்களுக்கு முன்னர், அவற்றிலிருந்து விடுபட வழி தேடி இலங்கை, மலையகம் நோக்கிப் பயணித்தவர்கள் இன்று வரை வலியோடு வாழ்வுக்காக போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் கடந்து வந்த […]
இனவாதமும் தொழிலாளர் போராட்டங்களும் மலையக மக்களை பேரினவாத அடிப்படையில் நோக்குதலும் அதற்கேற்ற வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளலும் ஆரம்ப காலத்திலிருந்தே இனவாத தலைவர்களாலும் அரசாங்கங்களினாலும் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளமையைக் காணலாம். 1948 இல் மலையக மக்களது குடியுரிமையைப் பறித்ததும் இனவாதத்தின் அடிப்படையிலே ஆகும். இதை விட 1958, 1977, 1983 ஆகிய ஆண்டுகளில் நாடு முழுவதும் இடம்பெற்ற இனக்கலவரங்களால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதை விட இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, காலி, […]
ஆங்கிலம் மூலம் : குமாரி ஜெயவர்த்தன (சேர்.பொன். அருணாசலத்தின் குடும்பப் பின்னணியையும், அவரது மாமன் சேர். முத்துக்குமார சுவாமி, அவரது தமையன் சேர்.பொன். இராமநாதன் என்போர் பற்றியும், இலங்கையின் சிவில் சேவை உத்தியோகத்தராகவும் பின்னர் தமிழர்களின் அரசியல் தலைவர்களில் ஒருவராகவும் விளங்கிய சேர்.பொன் அருணாசலம் பற்றியும் விமர்சன நோக்கில் எழுதப்பட்ட இக்கட்டுரையை இத்தொடரின் முதலாவது கட்டுரையாக தருகின்றோம். குமாரி ஜெயவர்த்தன அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய நூல் ‘அநாமதேயங்களாக இருந்தோர் அறியப்பட்டவர்களானமை […]
“சிலோன் நாட்டில் முன்னேற்றமடைந்து வரும் கோப்பிப் பயிர்ச் செய்கையானது உண்மையிலேயே மிகவும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தோற்றப்பாடாக உள்ளது. இந்தத் தீவில் இத்தகைய நிலமைகளை முன்னர் கண்டிருக்க முடியாது. சிங்கள மக்களின் நம்பிக்கையின் படி பூதங்களே மனித குலத்துக்காக இவற்றை உருவாக்கி இருக்கக்கூடும்” -Ceylon Miscellany 1866- “தேயிலை வளருகின்ற இடங்கள்; அது மலைகளாக இருக்கலாம் அல்லது பள்ளத்தாக்குகளாக இருக்கலாம். அவை புனிதமானவையாகும்.” -Drinking of Tea : Rules of […]
ஆளும் வர்க்கத்தினரால் அல்லது வசதியுள்ள வர்க்கத்தினரால் சாதாரண மக்கள் காலங்காலமாக சுரண்டப்படுவதும் அதற்கு எதிராக போராட்டங்கள் வெடிப்பதும் இயல்பே. உலகில் இதைப் போன்ற சுரண்டல்களுக்கு எதிராக பல போராட்டங்கள் மற்றும் புரட்சிகள் வெடித்திருக்கின்றன என்பது வரலாறு. இலங்கையில் பல்லின மக்கள் வாழ்ந்தாலும் இன்னும் அந்நியர்கள் போலவே நடத்தப்படுகின்ற ஒரு சமூகம் மலையகச் சமூகம். அவர்கள் இந்த நாட்டின் குடிகள் இல்லை என்று முன்னைய அரசுகளினால் நாடு கடத்தப்பட்ட துயர்மிகு வரலாறுகளை […]
மலையகப் பகுதிகளில் வாழ்க்கைக்காக பல போராட்டங்கள் இடம்பெறுகின்றன. ஆனால் அதற்கும் அப்பாற்பட்டு, மலையகப் பெண்களின் நாளாந்த வாழ்க்கைப் போராட்டம் சவால்கள் நிறைந்தவையாக உள்ளது. தேசிய, சர்வதேச ரீதியில் அரசியல் அரங்கில் பெண்களின் அங்கத்துவம் பற்றி பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இக்காலத்தில் அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் வாழும் மலையகப் பெண்களைப் பற்றி பேச வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகின்றது. மலையகப் பெண்களுக்கான சவால்கள் அவர்களின் சிறுவயது முதலே தொடங்கிவிடுகிறது. […]