பௌத்தசமயத்தின் செல்வாக்கினைப் பொறுத்தவரையில் இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையிலே சில குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உண்டு. இலங்கையில் கிமு. மூன்றாம் நூற்றாண்டில் மோரிய அரசனாகிய அசோகனின் காலத்திலே பௌத்தம் பரவத் தொடங்கியது. அதனைப் பற்றியவொரு வரலாறு இலங்கையில் உற்பத்தியான தீபவம்சம், மகாவம்சம் முதலான நூல்களிற் சொல்லப்படுகின்றது. மோரியரின் தலைநகரான பாடலிபுரத்திலே மொக்கலிபுத்த தீஸரின் தலைமையிற் கூடிய மூன்றாம் பௌத்த மாநாட்டிலே பௌத்த சமயத்தைப் பரதகண்டத்திலும் அதற்கப்பாலுள்ள தேசங்களிலும் பரப்புவதற்கெனக் குழுக்களை அனுப்புவதற்குத் தீர்மானித்தார்கள். […]
சிங்கள மூலம் : பேராசிரியர் சுனில் ஆரியரத்ன குறிப்பு : பேராசிரியர் சுனில் ஆரியரத்ன அவர்களின் ‘தமிழ் பெளத்தன்’ எனும் நூல் தமிழ் பவுத்தம் பற்றி மிக விரிவாகப் பேசுகிறது. இந்தியாவில் தமிழ் பவுத்தத்தின் தொடக்க நிகழ்ச்சிகளிலிருந்து இலங்கையில் தமிழ் பவுத்தம் வரை விரிவான தகவல்களோடு எழுதப்பட்டிருக்கிறது. சமகால அரசியலின் தேவை கருதியும், தமிழ் பவுத்தம் பற்றிய கருத்தாக்கத்தை தமிழ் வாசகர்கள் அறியச் செய்யவும் இந்நூலின் இலங்கை தமிழ் பவுத்தம் […]