‘நீதிக்காக நீண்ட காத்திருப்பு’ ஆவணப்படம் இலங்கையில் மூன்று தசாப்த யுத்தத்தின் போதும், அதன் பின்னும் வலிந்து காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் கதைகளை ஆராய்கிறது.
அவர்களது உறவுகளது வலிமிகுந்த போராட்டங்களும் கண்ணீரும் கோபமும் ஏக்கமும் இதன் மூலம் உலகிற்கு எடுத்துரைக்கப்படுகின்றன. நடந்த அநீதிகளுக்கான பொறுப்புக்கூறலை இது வலியுறுத்துகின்றது, பொறுப்புக்கூற மறுக்கும் அதிகாரசக்திகளின் இயல்பாகிவிட்ட அலட்சியத்தை கேள்விக்குட்படுத்துகிறது.
இந்த ஆணவப்படதின் தயாரிப்பாளர் அமரர் அ. சேகுவேராவால் (இசைப்பிரியன்) அவர்களது மறைவால் காலதாமதமாக வெளிவந்தாலும் அதன் கனதி மாறாமல் காலப்பொருத்தத்துடன் அமைகின்றது. இதை அவருக்கே எழுநா சமர்ப்பிக்கின்றது.