யாழ்ப்பாணத்தின் குடிநீர்ப் பிரச்சினையை பேசுபொருளாகக் கொண்டு எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’ எனும் தலைப்பிலான ஆவணப்படம் கடந்த புதன்கிழமை, 16.10.2024 அன்று பிற்பகல் 12.00 மணிக்கு, முல்லைத்தீவிலுள்ள சமூக சேவைகள் திணைக்களத்தில் திரையிடப்பட்டது.
உள்ளூர் நீர் மூலங்களின் முக்கியத்துவம், அவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், அவற்றைப் பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள கடப்பாடு முதலியவற்றை குறித்த ஆவணப்படத்தினூடாக சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் இத் திரையிடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.