யாழ்ப்பாணத்தின் குடிநீர் பிரச்சினையை பேசுபொருளாகக் கொண்டு எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’ என்னும் தலைப்பிலான ஆவணப்படம் கடந்த திங்கட்கிழமை (15.07.2024) பிற்பகல் 02.30 மணிக்கு சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் திரையிடப்பட்டது.
உள்ளூர் நீர் மூலங்களின் முக்கியத்துவம், அவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் அவற்றை பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள கடப்பாடு என்பவற்றை ஆவணப்படத்தினூடாக சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் இந்தத் திரையிடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.