Events from November 12 – October 19 – Ezhuna | எழுநா

கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்களுக்கு “யாழ்ப்பாணத்திற்கு விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்”  ஆவணப்படம் திரையிடல்

K/Shanthapuram kalamahal tamil mahavidyalayam Killinochchi, killinochchi

கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் தமிழ் மகாவித்தியாலயத்தில்  எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட “யாழ்ப்பாணத்திற்கு விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்“  என்ற தலைப்பிலான ஆவணப்படம் 12.11.2024  அன்று திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் குறித்த பாடசாலை மாணவர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆவணப்படத்தை பார்வையிட்ட பாடசாலை மாணவி,  “குடிநீர் வியாபாரமாகியிருப்பது குறித்தும், நீர் மாசடைதலுக்கான காரணங்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது” எனக் கருத்துத் தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், குடிநீரை நிலத்தினுள் புகவிடாது, மக்கள் அதனை மேற்பரப்பில் வீண்விரயம் […]

முல்லைத்தீவில் ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’ திரையிடப்பட்டது.

District Agriculture Training Center) - Mullaitivu Oddusuddan, Mullaitevu, Mullaitevu

வவுனியாவிலுள்ள அரசசார்பற்ற நிறுவனமான றகமாவின் ஒழுங்கமைப்பில், ஒட்டுசுட்டான் முல்லைத்தீவிலுள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில், மனிதக் கடத்தல் தொடர்பில் இடம்பெற்ற இளைஞர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கின்போது, எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட “யாழ்ப்பாணத்திற்கு விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்" என்ற தலைப்பிலான ஆவணப்படம் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் இளைஞர்கள் பலர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. திரையிடலில் பங்குபற்றியிருந்த றகமா நிறுவனத்தினுடைய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு ஒருங்கிணைப்பாளரான கலாநிதி இந்திரமூர்த்தி சுதன் அவர்கள், “சுத்திகரிக்கப்பட்ட நீர் தொடர்பில் இருந்த […]

வவுனியாவிலுள்ள றகமா நிறுவனத்தின் ஏற்பாட்டில் ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’ திரையிடப்பட்டது.

RAHAMA, Vavuniya No. 60/15, FORUT Building, Sinthamany Pillaiyar Kovil View, Vavuniya., Vavuniya

யாழ்ப்பாணத்தின் குடிநீர்ப் பிரச்சினையை பேசுபொருளாகக் கொண்டு எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’  எனும் தலைப்பிலான ஆவணப்படம்  கடந்த சனிக்கிழமை, 19.10.2024 அன்று  பிற்பகல் 12.30 மணிக்கு,   வவுனியாவிலுள்ள அரசசார்பற்ற நிறுவனமான றகமாவில்  திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் குறித்த நிறுவனத்தில் பணியாற்றுகின்ற ஊழியர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. உள்ளூர் நீர் மூலங்களின் முக்கியத்துவம், அவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், அவற்றைப் பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள கடப்பாடு முதலியவற்றை குறித்த […]