Events from March 15 – January 4 – Ezhuna | எழுநா

‘இரசவர்க்கம்’ நூல் அறிமுக நிகழ்வு

Chunnakam Public Library Uduvil, Jaffna

எழுநா மற்றும் சுன்னாகம் பொது நூலகத்தின் ஏற்பாட்டில் முனைவர் பால. சிவகடாட்சம் அவர்களின் 'யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம்' என்ற நூலின் அறிமுக நிகழ்வானது கடந்த 15.03.2025 அன்று, சனிக்கிழமை சுன்னாகம் பொது நூலகத்தின் டிஜிட்டல் அறிவு மையத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் வாழ்த்துரையினை சுன்னாகம் பொது நூலகத்தின் பிரதம நூலகர் சுதர்சன் ஜெயலக்ஷமி வழங்கியிருந்தார். நூல் அறிமுக உரையினை அச்சுவேலி, சுதேசிய மருந்து உற்பத்தி பிரிவு, சித்த மருத்துவ […]

மன்னாரில் பாடசாலை மாணவர்களுக்கு “யாழ்ப்பாணத்திற்கு விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்” ஆவணப்படம் திரையிடல்

Adampan Mathiya Maha Vidyalaya ADAMPAN, Mannar

மன்னார் அடம்பன் மத்திய மகாவித்தியாலயத்தில்  எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட “யாழ்ப்பாணத்திற்கு விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்”  என்ற தலைப்பிலான ஆவணப்படம் 31.01.2025  அன்று திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் குறித்த பாடசாலை மாணவர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆவணப்படத்தை பார்வையிட்ட பாடசாலை மாணவி,  “பூமியிலுள்ள நீரில் மிகச் சொற்பளவிலேயே மக்கள் பயன்படுத்த உகந்ததாக உள்ளது. அதனை எதிர்கால சந்ததியினருக்கும் பகிர்ந்தளிக்க முகாமை செய்ய வேண்டும்” எனக் கருத்துத் தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நீரை வீண்விரயம் செய்வது […]

வவுனியாவிலுள்ள OfERR Ceylon நிறுவனத்தில் ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’ திரையிடல்.

Vavuniya, OfERR Vavuniya, Vavuniya

யாழ்ப்பாணத்தின் குடிநீர்ப் பிரச்சினையை பேசுபொருளாகக் கொண்டு எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’  எனும் தலைப்பிலான ஆவணப்படம்  சனிக்கிழமை, 04.01.2025 அன்று முற்பகல் 9.30 மணிக்கு,  வவுனியாவிலுள்ள OfERR Ceylon நிறுவனத்தில் திரையிடப்பட்டது.  ஆவணத்திரையிடலில் பங்குபற்றியிருந்த குறித்த நிறுவனத்தின் பணியாளரான தர்மரத்தினம் தனுஷாந்தன்  “இவ்ஆவணத்திரையிடலானது, எவ்விதம் நீரைச் சிக்கனப்படுத்த வேண்டும் என்பதையும், நீரின் முக்கியத்துவத்தை பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்துவதாகவும் அமைகின்றது. மேலும், நீர் மூலங்களினூடே நீரைச் சேமித்து எதிர்கால […]