Events for January 28, 2025 – Ezhuna | எழுநா

வவுனியாவிலுள்ள OfERR Ceylon நிறுவனத்தில் ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’ திரையிடல்.

Vavuniya, OfERR Vavuniya, Vavuniya

யாழ்ப்பாணத்தின் குடிநீர்ப் பிரச்சினையை பேசுபொருளாகக் கொண்டு எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’  எனும் தலைப்பிலான ஆவணப்படம்  சனிக்கிழமை, 04.01.2025 அன்று முற்பகல் 9.30 மணிக்கு,  வவுனியாவிலுள்ள OfERR Ceylon நிறுவனத்தில் திரையிடப்பட்டது.  ஆவணத்திரையிடலில் பங்குபற்றியிருந்த குறித்த நிறுவனத்தின் பணியாளரான தர்மரத்தினம் தனுஷாந்தன்  “இவ்ஆவணத்திரையிடலானது, எவ்விதம் நீரைச் சிக்கனப்படுத்த வேண்டும் என்பதையும், நீரின் முக்கியத்துவத்தை பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்துவதாகவும் அமைகின்றது. மேலும், நீர் மூலங்களினூடே நீரைச் சேமித்து எதிர்கால […]

கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்களுக்கு “யாழ்ப்பாணத்திற்கு விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்”  ஆவணப்படம் திரையிடல்

K/Shanthapuram kalamahal tamil mahavidyalayam Killinochchi, killinochchi

கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் தமிழ் மகாவித்தியாலயத்தில்  எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட “யாழ்ப்பாணத்திற்கு விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்“  என்ற தலைப்பிலான ஆவணப்படம் 12.11.2024  அன்று திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் குறித்த பாடசாலை மாணவர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆவணப்படத்தை பார்வையிட்ட பாடசாலை மாணவி,  “குடிநீர் வியாபாரமாகியிருப்பது குறித்தும், நீர் மாசடைதலுக்கான காரணங்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது” எனக் கருத்துத் தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், குடிநீரை நிலத்தினுள் புகவிடாது, மக்கள் அதனை மேற்பரப்பில் வீண்விரயம் […]

முல்லைத்தீவில் ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’ திரையிடப்பட்டது.

District Agriculture Training Center) - Mullaitivu Oddusuddan, Mullaitevu, Mullaitevu

வவுனியாவிலுள்ள அரசசார்பற்ற நிறுவனமான றகமாவின் ஒழுங்கமைப்பில், ஒட்டுசுட்டான் முல்லைத்தீவிலுள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில், மனிதக் கடத்தல் தொடர்பில் இடம்பெற்ற இளைஞர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கின்போது, எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட “யாழ்ப்பாணத்திற்கு விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்" என்ற தலைப்பிலான ஆவணப்படம் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் இளைஞர்கள் பலர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. திரையிடலில் பங்குபற்றியிருந்த றகமா நிறுவனத்தினுடைய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு ஒருங்கிணைப்பாளரான கலாநிதி இந்திரமூர்த்தி சுதன் அவர்கள், “சுத்திகரிக்கப்பட்ட நீர் தொடர்பில் இருந்த […]