என்ன செய்ய வேண்டும்? - Ezhuna | எழுநா
என்ன செய்ய வேண்டும்?
மரியநாயகம் நியூட்டன் மரியநாயகம் நியூட்டன்
பிரசுரம் 01
வெளியீடு எழுநா

‘மரியநாயகம் நியூட்டன்’ எழுதிய, ‘எழுநா’ வெளியீடாக வெளிவரவிருக்கும், ‘காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்’ எனும் நூலானது இலங்கையின் வடக்குக் கடற்பகுதி மீன்பிடி சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளின் தோற்றம், வளர்ச்சி மற்றும் பரிமாணம் பற்றி ஆராய்கின்றது. இந்து சமுத்திரப் பிராந்தியக் கடல் அரசியலை விமர்சனப் பார்வையுடன் ஆராய்கின்ற இந்நூல், இலங்கையின் கடல் வளம் எவ்வாறு சர்வதேச சக்திகளால் கூறுபோடப்பட்டுச் சுரண்டப்படுகின்றது என்பதையும் அதன் பின்னணியிலுள்ள உள்ளூர் சக்திகளை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவதாகவும் அமைகிறது. மேலும், இலங்கைத் தமிழ்க் கடல்சார் மக்களின் கடல் தொடர்பான இறைமை, அவர்கள் சுதந்திரமாக மீன்பிடித்து தமது வாழ்வாதாரத்தை தேடும் உரித்து என்பவை தொடர்பிலும் இது பேசுகின்றது. இந்நூலின் இறுதி அத்தியாயமான ‘என்ன செய்ய வேண்டும்?’ எனும் இப்பகுதி, நூலில் விவாதிக்கப்படும் கடல்சார்ந்த சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை சுருக்கமாக முன்வைப்பதாக அமைகிறது. வெகுசனக் கவனத்தையும்,விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் பொருட்டு, இவ் இறுதி அத்தியாயமானது, அதன் மூல வடிவிலான தமிழிலும், சிங்களத்திலும் சிறுபிரசுரமாக வெளியாகின்றது.