நான் ஒரு துறையில் இருப்பதில்லை. ஐந்து வருடத்துக்கு ஒருக்கா நான் தொழிலை மாற்றிக் கொள்வேன். எல்லா கலைகளிலும் நான் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளேன். நான் பழகும் அனைத்து மனிதர்கள், உயிரினங்கள் அவற்றிடம் இருந்துதான் நான் எனக்கு தேவையான படைப்பாக்கத்திற்கான தகவல்களை பெற்றுக் கொள்கிறேன். என்னுடைய மனதில் என்ன தோன்றுகின்றதோ அதை அப்படியே படைப்பாக வெளிப்படுத்த வேண்டும் என்ற காரணத்தினால் நான் உதவியாள்களை கூடுதலாக வைப்பது குறைவு. நாங்கள் செய்கின்ற படைப்பாக்கங்களின் பெறுமதியை அதிகமானோர் உணர்வதில்லை. நான் வேலை தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரைக்கும் எவரும் என்னிடம் வந்து காசை பற்றி பிரச்சினை இல்லை உங்களுடைய திறமையை காட்டுங்கோ என்று சொல்லவில்லை.