ஜனநாயக ரீதியில் போராடுவதற்கும் புலனாய்வாளர்கள் தடையாக இருக்கிறார்கள் | சிவில் சமூக அமைப்புகள்: சவால்கள் | அன்னலிங்கம் அன்னராசா, கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் - Ezhuna | எழுநா
Arts

ஜனநாயக ரீதியில் போராடுவதற்கும் புலனாய்வாளர்கள் தடையாக இருக்கிறார்கள் | சிவில் சமூக அமைப்புகள்: சவால்கள் | அன்னலிங்கம் அன்னராசா, கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்

November 27, 2023 | Ezhuna

ஒற்றுமையாக இருந்த வடக்கு கடற்றொழில் சமூகத்தை கடற்றொழில் அமைச்சர் பிளவுபடுத்தி வைத்துள்ளார். சீனாவிலிருந்து மீன் இறக்குமதி செய்வதால் வடமராட்சி கிழக்கில் சூடையின் விலை 30ரூபா, கும்பிளாவின் விலை 150 ரூபா. 250 ரூபாவுக்கு மண்ணெண்ணெய் தந்துவிட்டு 150 ரூபாவுக்கு மீனை எடுத்தால் எப்படி கடற்றொழில் சமூகம் உழைத்து வாழ்வது? கடலட்டை பண்ணை சாதகமானதா பாதகமானதா என்பது தொடர்பில் ஆய்வுசெய்து தருமாறு யாழ்.பல்கலைக்கழக கடற்றொழில் பீடத்திடம் நாம் ஒரு சிவில் சமூகமாக கோரிக்கை விடுத்தும் அவர்கள் அதற்கு செவிசாய்க்கவில்லை. கடற்தொழில் சமூகங்களின் பிரச்சினைகளையும் வடக்கு மக்களின் பிரச்சினையாக கருதி சிவில் சமூகங்கள் குரல்கொடுக்க வேண்டும்.


அண்மைய காணொலிகள்
தலைப்புக்கள்
காணொலிகள்