உணவு உற்பத்தியை எதிர்கொள்வது எப்படி என்பது தொடர்பில் கிளிநொச்சி இரணைமடு விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் மேலதிக பணிப்பாளரான கலாநிதி எஸ்.ஜே அரசகேசரி உணவு நெருக்கடிக்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் உணவு உற்பத்தியின் எல்லையை நாங்கள் இப்போது அடைந்திருக்கின்றோம் என்பதுதான் உண்மை. உள்ளூரில் உள்ள உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்துக்கு காரணம் அறுவடைக்குப் பிந்திய இழப்பு அதிகரித்துள்ளது. அதைவிட உள்ளூர் உற்பத்தியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்ற பொழுது உள்ளூரில் உணவு உற்பத்தி குறைகிறது. எங்களது பகுதிக்கு பொருத்தமில்லாதவற்றை நாங்கள் முயற்சி செய்கின்ற போது உணவு உற்பத்தி குறைகிறது. விவசாயத்தில் ஈடுபடுகின்ற விவசாயிகளை விட இடைத்தரகர்களின் ஈடுபாடு அதிகமாக இருப்பதால் இயற்கையாகவே சந்தையிலே பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. நீரை எப்படியாவது வழங்க வேண்டும் என்பது விவசாயிகளினுடைய கடமை. இதற்கு எரிபொருளிலேயே தங்கியிருக்க வேண்டும் என்ற நியதி இல்லை. மக்கள் பிரச்சினை வருகின்ற போது தான் உற்பத்தி செய்வார்கள், பிரச்சினை முடிந்தவுடன் அந்த உற்பத்தியை விட்டு விடுவார்கள் என்ற நிலைமை மாற வேண்டும். தொடர்ந்து நாம் தன்னிறைவோடு வாழ வேண்டும் என்றால் நாம் வீட்டுத்தோட்டம் அல்லது தன்னிறைவு விவசாயத்தில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.