மரச்செக்கு நல்லெண்ணெய்க்கே கேள்வி அதிகம் - Ezhuna | எழுநா
Arts

மரச்செக்கு நல்லெண்ணெய்க்கே கேள்வி அதிகம்

August 10, 2022 | Ezhuna

உள்ளூர் உற்பத்தி முயற்சிகளின் 3ஆவது காணொலித் தொடரில் நல்லெண்ணெய் உற்பத்தியாளர் க.தர்மேஸ்வரன் தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். நான்காவது தலைமுறையாக இந்த தொழிலைச் செய்து வருகின்றோம். எங்களுடைய உற்பத்திக்கான எள்ளை வடமத்திய மாகாணத்திலிருந்து தான் கூடுதலாகப் பெற்றுக்கொள்கின்றோம். யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் எள் எங்களுடைய உற்பத்திக்கு போதுமானதாக இல்லை. மரச்செக்கில் ஆட்டி எடுத்த நல்லெண்ணெய்க்கே கேள்வி அதிகமாக உள்ளது. அதனால் மரச் செக்கையே தற்போதும் பயன்படுத்துகின்றோம். மரச்செக்கில் எண்ணெயின் தன்மை மாறாது. எண்ணெய் எவ்வித இரசாயன மாற்றத்துக்கும் உட்படாது. அதேநேரம் எங்களுடைய சவாலும் மரச்செக்குத் தான். அதில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் உற்பத்தி செய்ய இயலாது.


அண்மைய காணொலிகள்
தலைப்புக்கள்
காணொலிகள்