ரஷ்ய விமானம் தடுக்கப்பட்டதன் சட்டப் பின்னணி - Ezhuna | எழுநா
Arts

ரஷ்ய விமானம் தடுக்கப்பட்டதன் சட்டப் பின்னணி

June 9, 2022 | Ezhuna

ஜூன் 2ஆம் திகதி ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு பயணிகளை ஏற்றி வந்த எரோப்ளொட் (Aeroflot Airbus A330-300) ரஷ்ய விமானம் கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தால் (Colombo Commercial High Court) கட்டாணை (enjoining order) பிறப்பிக்கப்பட்டதுக்கு அமைய நாட்டை விட்டுச் செல்ல தடை பிறப்பிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவை அயர்லாந்தை தலைமையகமாகக் கொண்ட செலஸ்ரியல் அவியேசன் (Celestial Aviation) என்ற நிறுவனம் ரஷ்ய அரச விமான சேவையை வழங்கும் எரோப்ளொட்டுக்கு (Aeroflot airline) எதிராக பெற்றுக்கொண்டார்கள். இந்த நடவடிக்கை இலங்கை – ரஷ்யாவுக்கு இடையில் இராஜதந்திர ரீதியான சிக்கலை உருவாக்குகின்றது. இதைத் தொடர்ந்து ஜூன் 6ஆம் திகதி சட்டமா அதிபர் சார்பில் கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் வழங்கிய கட்டாணை இலங்கையின் பொதுக்கொள்கைக்கு எதிரானது எனத் தெரிவித்து சமர்ப்பணம் ஒன்று மேற்கொள்ளப்படுகின்றது. இதைத் தொடர்ந்து கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் கட்டாணையை மீளப் பெற்றுக்கொள்கின்றது. இந்த சம்பவத்தின் சட்டப் பின்னணி, மற்றும் இராஜதந்திரக் காரணங்கள் நீதித்துறையில் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றது, ரஷ்யா மீதான பொருளாதாரத் தடை ரஷ்யா மீது ஏற்படுத்தும் பாதிப்பு என பல விடயங்கள் தொடர்பில் விளக்குகிறார் சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன்


அண்மைய காணொலிகள்
தலைப்புக்கள்
காணொலிகள்