உள்ளூரில் கிடைக்கும் மூலப் பொருட்களை பெறுமதி சேர்த்து உற்பத்தி செய்வது எங்களுடைய நோக்கம். இடம்பெயர்ந்து சொந்த இடங்களுக்குத் திரும்பிய பின்பு நாங்கள் விவசாயத்தைத் தான் மேற்கொண்டோம். விவசாயம் இலாபகரமாக இல்லாமையால், மலியுற நேரங்களில் கிடைக்கின்ற காய்கறிகளை காயவைத்து சந்தைப்படுத்த தொடங்கினோம். அதனூடாக எங்களுடைய உற்பத்தியை விரிவுபடுத்தினோம். சிறுதொழில் உற்பத்தியாளர்களுக்கு உற்பத்தி செய்வோரோடு தொடர்பின்மையும், சரியான திட்டமிடலின்மையும் பெரும் பிரச்சினையாக உள்ளது. எங்களுக்கும் இதே பிரச்சினை இருந்தது. ஆனாலும் நாங்கள் திரும்பத் திரும்ப முயற்சி செய்தோம். நாங்கள் பெரியளவில் இலாபத்தை சந்திக்காவிட்டாலும் தொழிலைத் தொடர்ந்து செய்யக்கூடிய நிலைக்கு வந்துவிட்டோம்.