வடபகுதிக் கடலோடும் படகுகள்
Arts
4 நிமிட வாசிப்பு

வடபகுதிக் கடலோடும் படகுகள்

July 24, 2022 | Ezhuna

2021 ஆம் ஆண்டு கணிப்பின்படி வடபகுதியில் மீன்பிடியில் ஈடுபடுத்தப்பட்ட படகுகளின் எண்ணிக்கை 14,674 ஆகும். இது இலங்கையின் மொத்தப்படகுகளின் எண்ணிக்கையில் சுமார் 50 சதவீதமாகும். இப்பிரதேசத்தில் OFRP  எனப்படும் வெளி இணைப்பு இயந்திரம் பூட்டப்பட்ட கண்ணாடி நாரிழையிலான படகுகளே கூடுதலாக மீன்பிடியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

IMUL – Inboard multiday board

ஆழ்கடலில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்ற பலநாட்கலங்களின் எண்ணிக்கை (IMUL) மிக குறைவாகவே உள்ளன, ஆக 150 பலநாட்கலப் படகுகளே பயன்படுத்தப்பட்டு வருவதாக தரவுகள் காட்டுகின்றபோதிலும், அந்தப்படகுகள் கூட தென்பகுதியிலேயே பயன்பாட்டில் உள்ளன. இதில் யாழ் மாவட்டத்தில் 107 படகுகளும் மன்னார் மாவட்டத்தில் 41 படகுகளும் பயன்படுத்தப்பட்டு வருவதாக தரவுகள் காட்டுகின்றபோதிலும் இப்படகுகள் தென்பகுதியில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற பலநாட்கலங்களுடன் ஒப்பிடுகையில் மிகச் சிறியவை என்பது  குறிப்பிடத்தக்கது.

இவை மூலதனச் செறிவு மிக்கவை என்பதாலும், இதற்கு துறைமுகங்கள் மிக அவசியம் என்பதினாலும், வடப்பகுதியில் இதன் பங்களிப்பு மிக குறைவாகவே உள்ளன. முல்லைதீவு, கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் இத்தகைய படகுகளில் இத்தகைய படகுகள் பயன்பாட்டில் இல்லை. இதேபோல் ஒரு நாட்கலங்கள் (உள்இணைப்பு  இயந்திரம் பூட்டப்பட்டவை-IDAY) படகுகளும் ஆக 635 மட்டுமே உள்ளன. இவைகளும் கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் பயன்படுத்தப்படுவது மிக குறைவு. யாழ். மாவட்டத்திலும் மன்னார் மாவட்டத்திலும் இந்த உள் இணைப்பு இயந்திரப்படகுகள் (IDAY)  இழுவை மீன்பிடி தொழிலுக்காகவே பயன்படுத்தப்படுவது  குறிப்பிடத்தக்கது.

 traditional boat

இவை தவிர இயந்திரம் பூட்டிய மரபுவழி வள்ளங்கள் (MTRP) 1185 , இயந்திரம் பூட்டாத மரபுவழி வள்ளங்கள் (NIRP) 5251 படகுகளும், 261 கரைவலை வள்ளங்களும்   இப்பகுதியில் பயன்பாட்டில் உள்ளன. கரைவலை மீன்பிடி கிளிநொச்சி மாவட்டத்தில் முற்றாக மேற்கொள்ளப்படுவதில்லை. அதற்குரிய சமுத்திரச்சூழல் அங்கு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆரம்பகாலங்களில் மரபுவழியிலான கட்டு வள்ளங்கள் மரத்தினாலாக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டன. அத்துடன் கைகளினால், கம்புகள், தண்டுகள் கொண்டும், பாய்களின் உதவியுடனும் அவை இயக்கப்பட்டன. ஆயினும் இப்போது பெரும்பாலும் கண்ணாடி நாரிழையினால் படகுகள் செய்யப்படா படகுகளே பயன்பாட்டில் உள்ளன. இவை வெளி இணைப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்டே பயன்படுத்தப்படுகின்றன. கட்டுமரங்கள், சிறிய தோணிகள் என்பவற்றின் பயன்பாடு மிக அரிதாகவே இன்று  உள்ளன.

படகுகளின் சுருக்க வடிவங்களுக்கான விளக்கம்:

IMUL – Inboard multiday board
IDAY – Inboard single day board
OFRP – Outboard engine fiberglass
MTRP – motorized traditional board
NTRP – Non – motorized traditional board
NBSN – Non – motorized beach scene grafts

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

11414 பார்வைகள்

About the Author

சூசை ஆனந்தன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை பேராசிரியரான சூசை ஆனந்தன் அவர்கள், தனது இளமாணிப் பட்டம், முதுமாணிப் பட்டம் மற்றும் கலாநிதி பட்டத்தையும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலேயே பெற்றுக்கொண்டார்.

'சமுத்திரவியல்', 'கச்சத்தீவு அன்றும் இன்றும்', 'மீன்பிடி உபகரணங்கள்' போன்ற நூல்களை எழுதியுள்ளதுடன் பல ஆய்வுக்கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)