எழுநா பற்றி - Ezhuna | எழுநா

அறிமுகம்

எழுநா, ஈழமும் ஈழம் சார்ந்த ஆய்வும் இடைவெட்டும் பரப்பை 'ஈழக்கற்கைகள்' (Eelam Studies) என்று வரையறுத்துக் கொண்டு, ஈழம் சார்ந்து வரலாறு, பண்பாடு, சமூகவியல், மானிடவியல், மொழியியல், அரசியல், பொருளாதாரம், சூழலியல், அபிவிருத்தி, சட்டம் போன்ற தளங்களில் ஆய்வுகளை உருவாக்குவதையும் பரவலாக்குவதையும் முதன்மைப் பணியாகக் கொண்டு இயங்குகின்ற இலாப நோக்கற்ற அமைப்பாகும்.

வெளியீடு

எழுநா வெளியீடுகள் ஊடாக மாதாந்தச் சஞ்சிகை, நூல்கள், பிரசுரங்கள் போன்றவை வெளிவருகின்றன. எழுநாவின் மாதாந்தச் சஞ்சிகையில் பிரசுரமாகும் தொடர்களும் திரட்டுகளும் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளியிடப்படும். அதேவேளை, சமகாலப் பிரச்சினைகள் தொடர்பான ஆய்வு அடிப்படையிலான பிரசுரங்களும் வெளியிடப்படும்.

தயாரிப்பு

காணொளிகள், தொகுப்புகள், ஆவணப்படங்கள் ஆகியன எழுநாவின் தயாரிப்புகளாகும். ஆய்வு மற்றும் சமூகச் செயற்பாடு சார்ந்து இயங்குபவர்களுடைய காணொளிகளுடன், சமகால - நீண்ட காலப் பிரச்சினைகள் சார்ந்த ஆவணப்படங்களும் வெளியிடப்படுகின்றன. ஆய்வாளர்களின் ஆய்வுகளை காணொளிகளாக வெளியிடுவதற்கான செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கற்கை வட்டம்

எழுநா கற்கை வட்டம், ஈழம் சார்ந்த ஆய்வுகள் தொடர்பான விரிவான உரையாடல்களை உருவாக்கும் பொருட்டும், ஆய்வுச் சமூகத்தைக் கட்டியெழுப்பும் நோக்கிலும், தமிழ் பேசும் மக்கள் வசித்துவரும் பிரதேசங்கள் தோறும் கற்கை வட்டங்களைச் செயற்படுத்த முயற்சிக்கின்றது; செயற்படுத்தி வருகின்றது. இவ்வாறான கற்கை வட்டங்களில் எழுநா வெளியீடுகளும், ஆவணப்படங்களும் பிரதான பேசு பொருள்களாக அமைகின்றன. சமூக மட்டத்தில், எழுநா வெளியீடுகளைத் தாண்டியும், ஈழத்து ஆய்வுகள் சார்ந்து, தொடர்ச்சியான உரையாடல்களை இது சாத்தியப்படுத்தும்.

புத்தக மன்றம்

எழுநா புத்தக மன்றம், வருடாந்தச் சந்தாவை அடிப்படையாகக் கொண்டது. இதில் இணைவதன் மூலம் எழுநாவின் முயற்சிக்கு ஆதரவளிக்க முடியும் என்பதுடன், சந்தா மூலம் எழுநாவின் புத்தக மன்றத்தில் இணைபவர்களுக்கு, எழுநாவின் சகல வெளியீடுகளும் கிடைக்கப்பெறும். அண்ணளவாக வருடாந்தம் 20 தொடக்கம் 25 வரையான நூல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

எழுநா குழுமம்

பதிப்பாசிரியர்
கணேசானந்தன் சசீவன்
பொறுப்பாசிரியர்கள்
ஸ்ரனிஸ்லஸ் கபில்தேவ் - சஞ்சிகை
ஜனனி பாலசுந்தரம் - வலைத்தளம்
விஜயதர்சினி தினேஸ் - கற்கை வட்டம்
பவித்ரா இரமணீகரசர்மா - குரல் வடிவம்
மதுஹரி சத்தியலோகநாதன் - குரல் வடிவம்
வளவாளர்கள்
இ. பத்மநாப ஐயர் - உசாத்துணை சேவை
கனகலிங்கம் சுகுமார் - உசாத்துணை சேவை
தில்லைநாதன் கோபிநாத் - நூல் தயாரிப்பு
கதிர் சயந்தன் - நூல் தயாரிப்பு
சுவர்ணலதா செந்தில்குமார் - மெய்ப்புத் திருத்தம்
தங்கராஜா பிரபாகரன் - மெய்ப்புத் திருத்தம்
பாலசுப்ரமணியம் சிவகுமார் - ஆவணப்படம்
சிறிதரன் சோமிதரன் - ஆவணப்படம்
மகேந்திரன் திருவரங்கன் - மொழிபெயர்ப்பு
பரமசிவம் பவதாரணி - செயல்பாட்டு மேலாண்மை
நிவேதிகா இராசன் - செயல்பாட்டு மேலாண்மை
சிவகுமார் சிவகஜன் - கற்கை வட்டம்
துறை சார் ஆலோசகர் குழு
ஸ்ரீவரதராஜன் பிரசாந்தன் - மொழியும் இலக்கியமும்
கந்தையா ரமணிதரன் - நீரியலும் நீர்ப்பாசனமும்
குமாரவடிவேல் குருபரன் - சட்டமும் சட்ட முறைமையும்
நடராஜா சிறீஸ்கந்தராஜா - சூழலும் உயிர்ப் பல்வகைமையும்
தர்சன் அம்பலவாணர் - சமயமும் இறையியலும்
பால சிவகடாட்சம் - சுதேசியமும் பாரம்பரிய மருத்துவமும்
நாகமுத்து பிரதீபராஜா - புவியியலும் திட்டமிடலும்
பரமு புஸ்பரட்ணம் - வரலாறும் தொல்லியலும்
சனாதனன் தமோதரம்பிள்ளை - கட்புல அரங்கேற்ற கலைகள்
சேரன் உருத்திரமூர்த்தி - சமூகவியலும் மானிடவியலும்
முத்துக்கிருஸ்ணன் சர்வானந்தன் - பொருளியலும் நிதியியலும்
சபா ஜெயராசா - கல்வியியலும் கற்றலும்
மரியோ அருள்தாஸ் - அரசியலும் மெய்யியலும்
இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் - கட்டடக்கலையும் வடிவமைப்பும்
கந்தையா பகீரதன் - விவசாயமும் மீன்பிடியும்
நிதிப்பங்களிப்பாளர்கள்
கணேசலிங்கம் குகரூபன்
கருணானந்தன் சஞ்யே
சிவா சிவானந்தன்
கனக சுகுமார்
ஆதரவளிப்போர்
தமிழ் ஊடகத் திரட்டு - ஆவணப்பட வரிசை
மானுடம் நிறுவனம் - நூல் வரிசை
வரதராஜன் ஞாபகார்த்த கல்வி அறக்கட்டளை - கற்கை வட்டம்
கற்கை வட்ட ஒருங்கிணைப்பாளர்கள்
நடராஜா முரளிதரன் - கனடா
அச்சுப்பதித்து விநியோகிப்போர்
நடராஜா முரளிதரன் - நாளை வெளியீடு - கனடா

தொடர்பிற்கு

முகவரி:

எழுநா
63, சேர். பொன். இராமநாதன் வீதி
கலட்டி சந்தி, திருநெல்வேலி

நிதியறிக்கை

இலாப நோக்கற்ற முயற்சி என்பதன் அடிப்படையில், எழுநாவின் செயற்பாடுகளுக்குத் தேவையான நிதி, பெரும்பாலும் ஆதரவாளர்களின் அன்பளிப்புகள் ஊடாகவும், எழுநா வெளியீடுகளில் பிரசுரிக்கப்படும் விளம்பர அனுசரணைகளின் மூலமாகவுமே பெற்றுக் கொள்ளப்படுகின்றது. இலாபநோக்கற்ற முயற்சிகளில் 'வெளிப்படைத்தன்மையை' முக்கிய அம்சமாகக் கருதி, எழுநாவின் நிதியறிக்கைகளை பகிரங்கமாகக் காட்சிப்படுத்துகின்றோம்.

அறிவிப்புகள்

பங்களிப்பாளர்களுக்கு அழைப்பு

July 31, 2020 | Ezhuna

எழுநா!ஒரு சுதந்திர ஊடக அமைப்பு.இலாப நோக்கற்ற தன்னார்வக் கூட்டு முயற்சி.ஊடகச்செயற் செயற்பாடுகளுக்கான தளங்களை வலுப்படுத்துவதும் ஊடகம் சார் தளங்களில் மூடியிருக்கும் பாதைகளைத் திறந்துவிடுவதும் ஊடக முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதும் தமிழ்ச்சூழலில் ஊடகம் சாரி பரிசோதனை சார் முயற்சிகளை மேற்கொள்வதும் அதன் கோட்பாடு சார்ந்த நோக்கங்களில் முக்கியமானவை.எழுநாவின் அரசியல் கூட மிகவும் இறுக்கமானதல்ல. ஊடக அறம்சார் தளத்தில் இறுக்கமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள போதிலும், வெவ்வேறு அரசியல் நோக்கு நிலைகளுக்கு களமமைத்துக் கொடுக்கக்கூடியதாகவே திறந்த […]

‘அளிப்புரிமை’ சார் கொள்கை

July 31, 2020 | Ezhuna

எழுநா வெளியீடுகளில், வழமையாக பதிப்பகங்கள் உபயோகிக்கும் ‘காப்புரிமை’ (Copyright) என்ற உரிமத்திற்குப் (Licence) பதிலாக புதிய வகையானதொரு உரிமத்தைப் பார்த்திருப்பீர்கள். அவ்வுரிமம் தொடர்பான கேள்விகள் உங்களில் பலருடைய மனதில் தோன்றியிருக்கும். ஆம். எழுநா காப்புரிமைக்கு எதிரான தனது நிலைப்பாட்டை நடைமுறையில் முன்னெடுக்க விரும்புகின்றது. காப்புரிமைக்கு எதிரான நிலைப்பாட்டை கோட்பாட்டளவில் பலர், பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசி வந்துள்ளார்கள். நடைமுறையில் பரீட்சித்துப் பார்ப்பதற்கு எழுநா முதலடியை எடுத்து வைப்பதோடு, எழுத்தாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் பதிப்பகங்களுக்கும் […]

2014-2015 வெளியீடுகளிற்கான பிரதிகள் கோரல்

July 31, 2020 | Ezhuna

இலங்கைத்தமிழ் பேசும் சமூகங்களுடன் தொடர்புடையவாறான பின்வரும் விடயங்களையொட்டிய பிரதிகள் கோரப்படுகின்றன. மீள்பதிப்பு, 19ஆம் நுற்றாண்டைச் சேர்ந்த எழுத்தாளர்களின் தொகுப்புக்கள், பதிப்பிக்கப்பெறாத அரிதான கையெழுத்துப் பிரதிகள்பல்கலைக்கழக இளமாணி, முதுமாணி, கலாநிதி கற்கை நெறிகளுக்காக அளிக்கபட்ட பதிப்பாக்கம் பெறாத ஆய்வுக் கட்டுரைகள்.ஆங்கிலம் – தமிழ், சிங்களம் – தமிழ், மொழிபெயர்ப்புக்கள் (புனைவுகள், அபுனைவுகள்)அரசியல் நோக்கு நிலைசார்ந்து சமத்துவத்தையும் மக்கள் நலனையும் முன்வைக்கும் பிரதிகள் . (தமிழ்தேசிய அரசியல், மலையக அரசியல், முஸ்லிம் அரசியல், […]

தொடர்பு கொள்வதற்கு

December 3, 2020 | Ezhuna