மன்னார் அடம்பன் மத்திய மகாவித்தியாலயத்தில் எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட “யாழ்ப்பாணத்திற்கு விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்” என்ற தலைப்பிலான ஆவணப்படம் 31.01.2025 அன்று திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் குறித்த பாடசாலை மாணவர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆவணப்படத்தை பார்வையிட்ட பாடசாலை மாணவி, “பூமியிலுள்ள நீரில் மிகச் சொற்பளவிலேயே மக்கள் பயன்படுத்த உகந்ததாக உள்ளது. அதனை எதிர்கால சந்ததியினருக்கும் பகிர்ந்தளிக்க முகாமை செய்ய வேண்டும்” எனக் கருத்துத் தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நீரை வீண்விரயம் செய்வது தொடர்பிலும், அதன் தாக்கம் குறித்தும் இவ் ஆவணப்படம் தெளிவுபடுத்தியுள்ளதாக தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
உள்ளூர் நீர் மூலங்களின் முக்கியத்துவம், அவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் அவற்றைப் பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள கடப்பாடு முதலியவற்றை குறித்த ஆவணப்படத்தினூடாக சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் இத் திரையிடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.