மலையகம் எழுகிறது

வி.ரி தர்மலிங்கம்
எழுநா வெளியீடு 2
ஜனவரி 2013

இந்நூல், மலையகத்தமிழர்கள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு, அவர்தம் சமூகம் இந்நிலத்தில் வேரூன்றியதிலிருந்து தொண்ணூறின் ஆரம்பகட்டத்திலே மலையக மக்கள் முன்னணி அமைந்ததுவரையிலான, காலகட்டத்தின் வரலாற்றினை உள்ளடக்கியிருக்கின்றது. மலையகமக்களிடையே எழுந்துவந்த சமூக, அரசியல் மேம்பாட்டு அமைப்புகளைப் பற்றிய தொகுப்பாவணமாக இதுவரை எந்நூலும் பதிப்பிலே வரவில்லை. இந்நிலையில், இந்நுால் மலையகமக்களின் வருங்காலத்திற்கான சிறந்த பாதையைச் செப்பனிட பெரிதும் பயன்படும்.

வி.ரி தர்மலிங்கம்

1941 இல் இலங்கை தலவாக்கலயில் பிறந்தார். தனது இளைமைக்காலத்திலேயே இளைஞர் தமிழ் சங்கம் என்னும் அமைப்பை நிறுவி, இலக்கிய கலை முயற்சிகளில் ஈடுபட்ட அவர் மலையகப் பாரம்பரியக் கலைகளுக்கு நவீன வடிவம் கொடுக்கும் முயற்சியில் பெரு வெற்றியும் கண்டிருந்தார். மலையக இளைஞர் முன்னணி, மலையக வெகுஜன இயக்கம் போன்றவற்றிலும் தன்னை இணைத்திருந்த வி.ரி தர்மலிங்கம் பின் நாட்களில் மலையக மக்கள் முன்னணியின் உதவித் தலைவராக பதவி வகித்தார்.

இலங்கையில் மலையகத் தமிழ்மக்களின் வாழ்க்கை பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்பகுதியில் ஆரம்பித்தது. அது குறித்த சமூக அரசியற் பார்வையிலான வரலாற்றுப் பதிவுகள் மிகவும் அரிதாகவே வெளிவந்திருக்கின்றன. அதிலுங்கூட, மலையகமக்களிடையே எழுந்துவந்த சமூக, அரசியல் மேம்பாட்டு அமைப்புகளைப் பற்றிய தொகுப்பாவணமாக இதுவரை எந்நூலுமே பதிப்பிலே வரவில்லையென்று அறிந்தவரையிலே சொல்லலாம்.

Read More