தமிழ்ப்பாஷை

தி.த.சரவணமுத்துப்பிள்ளை
பதிப்பாசிரியர் சற்குணம் சத்யதேவன்
எழுநா + நூலகம் வெளியீடு
எழுநா வெளியீடு 9
மே 2013

தமிழ்ப்பாஷையின் பிறப்பு, தமிழ் என்ற பெயர் ஏற்பட்டமைக்கான காரணம், தமிழ்ச் சங்கங்கள் இருந்தனவா? தமிழ்ப் பாஷையில் இருக்கும் இலக்கியங்கள், சமகாலத் தமிழ் மொழியின் நிலை, சமகாலத் தமிழ்ப் புலவரின் நிலை, மொழி பெயர்ப்பின் முக்கியத்துவம், தமிழ் மொழிப் பற்றின் அவசியம் போன்ற விடயங்களின் அடிப்படையில் தமிழ்மொழி, தமிழ் இலக்கிய வரலாறு தொடர்பான முக்கியமான விடயங்களை 1892இல் முதன் முதலில் பேச முற்பட்டது

1865ம் ஆண்டு ஈழத்தின் திருகோணமலையில் தி.த சரவணமுத்துப்பிள்ளை பிறந்தார். தனது பதினைந்தாவது வயதிலேயே சென்னை சென்று அங்கு சென்னை பச்சையப்பப்பன் கல்லூரியிலும் பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் கல்வி கற்றிருந்தார். “மோகனாங்கி” என்ற தமிழின் முதலாவது வரலாற்று நாவலை எழுதிய இவர் பாரதிக்கு முன்னோடியான ‘தத்தைவிடு தூது” என்ற பெண்விடுதலை செய்யுளையும் எழுதியவராவர். 1902 இல் தனது 37வது வயதில் இவர் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியத்தின் திருப்புமுனையானது ஈழத்து அறிஞர்களின் தமிழ்த் தொண்டினால் ஏற்பட்டது என்றால் மிகையாகாது. ஈழத்து அறிஞர்களின் தமிழ்த் தொண்டு பற்றிப் பேசப்படும்போதும், எழுதப்படும்போதும் சிறுப்பிட்டி வை.தாமோதரம்பிள்ளை, நல்லைநகர் ஆறுமுகம்பிள்ளை, சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் ஆகியோரின் பணிகள் தமிழுலகில் பெரிதும் அறியப்பட்டவை.

Read More

தமிழின் நிலை தாழ்வுற்ற 17 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும் அதற்குப்பின் வந்த 18 ஆம் நூற்றாண்டிலும் தனித்தமிழ்மொழி பொருட்டான பல்வேறு கருத்தியல்கள் தமிழ்ச் சிந்தனையாளர்களுக்கிடையே ஏற்படலாயிற்று. 15, 16 ஆம் நூற்றாண்டுகளில் அயலவர்களான விஜயநகர நாயக்கர்கள் முதலாய தெலுங்கு மன்னர்களின் ஆதிக்கம் கோலோச்சிய வேளை தமிழ்மொழி காக்க சைவத்தின் பேரால் அரண்செய்யப்பட்ட ஆதீன மடங்களின் தமிழ் வளர்ச்சிக்குப் போக்குகளில் ஏற்பட்ட தோய்வும் போதாமையும் தமிழ்ச்சிந்தனையாளர்களிடையே ஆய்வு நிலையில் உயர்ச்சியுடைய தமிழியல் நிறுவனமயப்படுத்தலைத் தேடியதெனலாம்.

Read More

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயரது ஆட்சி காரணமாக தமிழ் பேசும் நல்லுலகில் உருவான நவீனமயவாக்கச் சூழலில் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் ஈழத்து அறிஞர்கள் பலர் பல்வேறு மட்டங்களிலும் காத்திரமாக பங்களிப்பைச் செய்துள்ளனர். தமிழ் இலக்கிய வரலாற்றிலே பத்தொன்பதாம் நூற்றாண்டு ஈழத்துக்குரிய காலம் என்று கூட, தமிழறிஞர்கள் சில குறிப்பிட்டுள்ளனர்.

Read More