பங்களிப்பாளர்களுக்கு அழைப்பு

August 31, 2020 | Ezhuna

எழுநா!
ஒரு சுதந்திர ஊடக அமைப்பு.
இலாப நோக்கற்ற தன்னார்வக் கூட்டு முயற்சி.
ஊடகச்செயற் செயற்பாடுகளுக்கான தளங்களை வலுப்படுத்துவதும் ஊடகம் சார் தளங்களில் மூடியிருக்கும் பாதைகளைத் திறந்துவிடுவதும் ஊடக முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதும் தமிழ்ச்சூழலில் ஊடகம் சாரி பரிசோதனை சார் முயற்சிகளை மேற்கொள்வதும் அதன் கோட்பாடு சார்ந்த நோக்கங்களில் முக்கியமானவை.
எழுநாவின் அரசியல் கூட மிகவும் இறுக்கமானதல்ல. ஊடக அறம்சார் தளத்தில் இறுக்கமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள போதிலும், வெவ்வேறு அரசியல் நோக்கு நிலைகளுக்கு களமமைத்துக் கொடுக்கக்கூடியதாகவே திறந்த வடிவத்தில் அமைந்துள்ளது.

எழுநாவின் பொறுப்புக்களில் யாரும் இணைந்து கொள்ளலாம். எழுநா ஊடக அமைப்பு தொடர்பாக அதன் அறிமுகக்குறிப்பில் உடனபடக் கூடியவர்கள், வெவ்வேறு விதங்களில் தம்முடைய பங்களிப்பைச் செலுத்தலாம். எழுநா வெளியீடுகளுக்கான அறிமுகக் கூட்டங்களை ஏற்பாடு செய்வதில் இருந்து எழுநாவின் நகர்வுகள் சார்ந்து முடிவுகளை எடுக்ககூடிய அறங்காவலர் சபை வரை ஒருவர் பங்களிப்புச் செலுத்த முடியும். ஒருவர் நாளாந்தம் ஒதுக்கக்கூடிய நேரம், பொறுப்பெடுக்கும் தன்மை, பங்களிப்பாளர்களை இணைத்துக் கொள்ளும் தன்மை போன்ற காரணிகளைக் கொண்டு அவர் வெவ்வேறு விதங்களில் பங்களிக்க முடியும்.

அறங்காவலர் சபை (Board of Trustees), இணை அறங்காவலர் சபை (Associate Trustees), நாடு சார்ந்த குழுக்கள், நிகழ்ச்சித்திட்டக் குழு (Program Team), தயாரிப்புக் குழு (Production Team), நுட்பக் குழு (Technology Team), தொடர்பாடல் குழு (Communication Team), நிதிக்குழு (Finance Team) போன்றவற்றில் தம்மை இணைத்துக் கொள்ள முடியும். தம்முடைய திறமை, சிறப்புத் தேர்ச்சி, இயலுமை போன்றவற்றின் அடிப்படையில் அவர் வெவ்வேறு விதங்களில் பங்களிக்க முடியும். அதன் மூலம் எழுநாவின் பங்காளராக இணைந்து கொள்ள முடியும்.

பங்களிப்பாளர்கள் இணைந்து கொள்ளக்கூடிய வெளிகள் சார்ந்த குறிப்புக்கள் கீழே பட்டியலிடப்படுகின்றன.

அறங்காவலர் சபை
* வருடாந்தம் 20 மன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொள்ள வேண்டும்.
* வாராந்தம் 5 மணித்தியாலங்களுக்குக் குறையாமல் பங்களிக்க வேண்டியிருக்கும்.
* தொடர்ச்சியாகப் பங்களிப்பாளர்களை இணைத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
* ஏதாவதொரு விடயத்தைப் பொறுப்பெடுத்துச் செயற்படுத்த வேண்டியிர்ருக்கும்.

இணை – அறங்காவலர் சபை
* வருடாந்தம் 10 உறுப்பினர்களை இணைத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
* மாதாந்தம் 5 மணித்தியாலங்களுக்குக் குறையாமல் பங்களிக்க வேண்டியிருக்கும்
* பங்களிப்பாளர்களை இணைத்துக் கொள்ள வேண்டியிருக்கும்
* சிறிய விடயமாயினும், சிலவிடயங்களைப் பொறுப்பெடுத்துச் செயற்படுத்த வேண்டியிருக்கும்.

நாடு சார்ந்த பங்களிப்பாளர்கள்
எழுநாவின் நாடு சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடக்கூடியவர்களே நாடு சார்ந்த பங்களிப்பாளர்கள் என்ற வகைக்குள் வருவார்கள்.
* நாடு சார்ந்து எழுநா வெளியீடுகளை அறிமுகபப்டுத்த வேண்டியிருக்கும்
* நாடு சார்ந்து தொடர்புகளை ஏற்படுத்திவிட வேண்டியிருக்கும்

நிகழ்ச்சித்திட்டக் குழு
எழுநாவின் நிகழ்ச்சித்திட்டங்கள் சார்ந்த செயற்படக்கூடியவர்கள் நிகழ்ச்சித்திட்டக் குழுவில் இணைந்து கொள்ளலாம். கீழ்வரும் விடயங்களில் ஏதோவொன்றில் ஈடுபாடுள்ளவராக இருந்தாலே போதுமானது. (இது அச்சு ஊடகம் (Print Media) மற்றும் பல்லூடகம் (Multimedia) இரண்டுக்கும் பொதுவானது.)
* ஆசிரியர் குழுவில் (Editorial Board) செயற்படக் கூடியவர்கள்
* படி திருத்தலில் (Copy editing) ஈடுபடக்கூடியவர்கள்.
* உள்ளடக்கத்தைத் தயாரிக்கக் கூடியவர்கள்.
* மெய்ப்புப் பார்த்தலில் (Proofreading) ஈடுபடக் கூடியவர்கள்
* மொழிபெயர்ப்புச் (Translations) செயற்பாடுகளில் ஈடுபடக்கூடியவர்கள்
* ஆசிரியர் குழுவை ஒருங்கிணைக்கக்கூடியவர்கள் (Coordinators)

தயாரிப்புக் குழு
அச்சு மற்றும் பல்லூடக வெளியீடுகளுக்கான தயார்ப்புக்களில் ஈடுபடக்கூடியவர்கள் / விருப்பம் உள்ளவர்கள் இக்குழுவில் இணைந்து கொள்ளலாம். (இது அச்சு ஊடகம் மற்றும் பல்லூடகம் இரண்டுக்கும் பொதுவானது.)
* தட்டெழுதக்கூடியவர்கள் (Typing)
* அட்டைப்பட வடிவமைக்கக் கூடியவர்கள் (Cover design)
* புத்தகம் வடிவமைக்கக்கூடியவர்கள் (Book design)
* பல்லூடக தயாரிப்பில் (Multimedia production) ஈடுபடக் கூடியவர்கள்

நுட்பக் குழு
ஊடகச் செயற்பாடுகள் சார்ந்த நுட்ப ரீதியான பங்களிப்புக்களை வழங்கக்கூடியவர்கள் இக்குழுவில் இணைந்து செயற்படலாம். எழுநாவின் பயணத்திட்டத்தினை பார்வையிடுவதன் மூலம் பங்களிப்பு எல்லைகளைத் தெரிந்து கொள்ள முடியும். (இது அச்சு ஊடகம் மற்றும் பல்லூடகம் இரண்டுக்கும் பொதுவானது.)

தொடர்பாடல் குழு
ஊடகங்களில் அறிமுகத்தை நிகழ்த்தக்கூடியவர்கள். எழுநாவின் செய்ற்பாட்டையும் கருத்துக்களையும் பரந்துபட்ட மக்களுக்குக் கொண்டு சென்று சேர்க்கக்கூடியவர்க இக்குழுவில் இணைந்து கொள்ள முடியும்.

நிதிக்குழு
எழுநாவின் ஆண்டறிக்கை தயாரிப்பு, நிதியறிக்கைகள் தயாரிப்பு, பாதீடு தயாரிப்பு, கணக்கியல் சார் செயற்பாடுகள், கணக்காய்வு போன்ற விடயங்களில் பங்களிக்கக்கூடியவர்கள் இக்குழுவில் இணைந்து செயற்பட முடியும்.

இது, தன்னார்வலர்களாக மேற்படி வெளிகளில் பங்களிப்பதற்கான அழைப்பென்ற போதிலும், தன்னார்வலர்களாக பங்களிக்க முடியாதவர்களும் எழுநாவில் இணைந்து செயற்படுவதற்கான சாத்தியம் உள்ளது. மேற்படி துறைகளில் ஆர்வமும் அனுபவமும் உள்ளவர்கள் பகுநிநேர பணியாளர்களாகவும் இணைந்து செயற்படலாம். ஈழத்தின் ஊடகத்துறையும் பதிப்புத்துறையும் வளம்பெற வேண்டுமென்று உயரிய நோக்கு எமக்குண்டு. எழுநா இலாப நோக்கற்ற அமைப்பென்ற போதிலும், இவ்வமைப்பில் இணைந்து பணியாற்றக் கூடியவர்களுக்கான கொடுப்பனவுகளை (Payments) மேற்கொள்ளவும் எழுநா தயாராக உள்ளது. ஊடகத்துறை தொழிற்துறையாக (Media Industry) மாற்றம் பெறும் போது, அத்துறையின் தரம் (Quality) அதிகரிப்பதோடு வினைத்திறனானவர்களை (efficiency) உருவாக்கக்கூடியதாகவும் இருந்தால் அச்சந்தர்ப்பத்தை மறுக்காமல் இயங்குவதற்கு எழுநா தயாராக உள்ளது. ஆக, ஈழத்து ஊடகத்துறையில் அனுபவம் உள்ளவர்களும் விருப்பம் உள்ளவர்களும் எழுநாவில் பகுதி நேரமாக இணைந்து செயற்படுவதற்கான சந்தர்ப்பத்தையும் எழுநா ஏற்படுத்திக் கொடுக்கக் காத்திருக்கின்றது.

எழுநா, உங்களுடைய ஊடக அமைப்பு.
நீங்களும் இணைந்து கூட்டுச் செயற்பாட்டில் ஈடுபடலாம்.
எமக்கான ஊடக வெளியை நாமே பலப்படுத்துவோம்.
மக்கள் நலன் சார்ந்த ஊடகங்களை உருவாக்குவோம்.

«