தமிழ் அதிகாரி மகாசாத்தான் பற்றி குறிப்பிடும் தாமரவெவ தூண் கல்வெட்டு

7 நிமிட வாசிப்பு | 9217 பார்வைகள்

அநுராதபுரம் மாவட்டத்தில் தமிழர் பற்றிக் குறிப்பிடும் இன்னுமோர் கல்வெட்டு துடுவ துலான என்னுமிடத்தில் அமைந்துள்ள தாமரவெவ எனும் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டது. தாமரவெவ கல்வெட்டும் இலங்கையை ஆட்சி செய்த 2ஆம் சேனன் காலத்தில் (பொ.ஆ. 853 முதல் 887 வரை) பொறிக்கப்பட்டுள்ளது. மன்னனின் (2ஆம் சேனன்) 31ஆவது ஆட்சி ஆண்டில் இக்கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது.   35 ஆண்டுகள் இலங்கையின் மன்னனாக 2ஆம் சேனன் ஆட்சி செய்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக்கல்வெட்டு 7 […]

மேலும் பார்க்க

இரசவர்க்கம்: தாவரநெய்கள்

10 நிமிட வாசிப்பு | 9776 பார்வைகள்

வேப்பெண்ணெய் வாதம்போம் பித்தமிகும் மாறாக்கிரந்திபோமோதுங்கரப்பன் சிரங்கோடிப்போம்-போதவேவேப்பெண்ணெய் கொண்டால் விசம்மீழும் சன்னிபோம்காப்புடைய கையாளே காண் இதன் பொருள்: காப்பு அணிந்த கைகளை உடையவளே காண்பாயாக. வேப்பெண்ணெயால் வாதம் போகும். பித்தம் கூடும். மாறாத கிரந்தி மாறும். கரப்பனும் சிரங்கும் மாறும். கடிவிஷம் இறங்கும். சன்னிநோய் குணமாகும். மேலதிக விபரம்: வேப்பிலைத்தூளை வேப்பெண்ணெயுடன் கலந்து பெறப்பட்ட தைலத்தை, வலிப்பு, சன்னி  என்பவற்றால் பாதிக்கப்பட்ட பாகங்களுக்குப் பூசிவர நிவாரணம் கிடைக்கும். வெற்றிலையில் வேப்பெண்ணெய் தடவி, […]

மேலும் பார்க்க

தமிழ் கட்சிகளும் சாதி அடையாளமும்

10 நிமிட வாசிப்பு | 12584 பார்வைகள்

தமிழரசுக் கட்சியின் இந்த சமூக சமத்துவமின்மைக்குக் காரணம் அந்தக்கட்சி ஏற்கனவே குறிப்பிட்ட ‘சைவமும் தமிழும்’ என்ற கருத்துநிலையின் அரசியல் வடிவமாக இருந்ததோடு,  அந்தக் கருத்துநிலையைப் பேணிப்பாதுகாக்கின்ற ஒரு அமைப்பாகவும் தொழிற்பட்டது. இந்த சாதி மேலாண்மை சிங்கள அரசின் தமிழ் இன, தமிழ் மொழி ஒடுக்குமுறை காரணமாக மூடிமறைக்கப்பட்டு தமிழ் இனம், தமிழ் மொழி எனும் அடையாளத்துக்குள் தமிழர்களை ஒன்று திரட்ட வாய்ப்பாகவும் அமைந்தது. இந்த வாய்ப்பினை மேலும் பலப்படுத்திக் கொள்ளவும் […]

மேலும் பார்க்க

மீட்பராக மருத்துவர் கிறீனது மீள்வருகை

7 நிமிட வாசிப்பு | 6214 பார்வைகள்

மருத்துவர் கிறீனது 2 ஆவது வருகை மருத்துவர் கிறீன் 1862 ஆம் ஆண்டு சனவரி மாதம் 7 ஆம் திகதி பிறதேசங்களுக்கு மிஷனரிகளை அனுப்பும் அமெரிக்க மிஷன் சங்கத்துக்கு (ABCFM) எழுதிய கடிதத்தில் தான் யாழ்ப்பாணம் புறப்படுவதற்குத் தயாராகி இருந்தமையைத் தெரிவித்திருந்தார். கப்பல் புறப்படுவதற்காக 5 மாதங்கள் வரை கிறீன் காத்திருக்க வேண்டியிருந்தது. நியூயோர்க்கிலிருந்த கிறீன், 82 வயதான தந்தையிடம் இறுதி பிரியாவிடை பெறுவதற்காக கிறீன் கில்லிற்குச் (Green Hill) […]

மேலும் பார்க்க

கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டசைவுகள் : தாய்வழிக் குடிவழிமுறை

7 நிமிட வாசிப்பு | 14677 பார்வைகள்

கிழக்கிலங்கை, இலங்கையில் முஸ்லிம்கள் செறிந்த வாழ்கின்ற பிரதேசமாகும். 2012 ஆண்டு சனத்தொகைக்கணக்கெடுப்பின் பிரகாரம் அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களிலேயே அதிக முஸ்லிம் சனத்தொகை சதவீதம் காணப்படுகின்றது[i].  இங்கு வாழ்கின்ற முஸ்லிம்களின் பண்பாட்டுக்கூறுகள் மட்டக்களப்புத் தமிழர்களின் பண்பாட்டுக்கூறுகளோடு பல விடயங்களில் ஒத்ததாகவும் வேறுபட்டும் காணப்படுவதோடு பிற முஸ்லிம் பிராந்திய கலாசாரக்கூறுகளிலிருந்தும் தனித்துவமானதாக  காணப்படுகின்றது. கிழக்கில் தொன்றுதொட்டு வாழ்ந்துவரும் தமிழர்களோடு இஸ்லாமிய மதநம்பிக்கை கொண்ட மக்கள் ஆரம்பகாலங்களில் கொண்ட திருமணபந்த உறவினாலும், வங்காள […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாண பாரம்பரிய உணவில் கீரை, இலைவகைகள் – பகுதி 2

12 நிமிட வாசிப்பு | 11895 பார்வைகள்

வல்லாரை  (யோசனைவல்லி) உடலைத் தேற்றக்கூடியது, உடலை வன்மையாக வைத்திருக்கக்கூடியது. சிறந்த ஞாபகசக்தியைத் தரக்கூடியதுடன் மனநலத்தைக்காக்கும் குணம் கொண்டது. வல்லாரை துவர்ப்பு, கைப்பு, இனிப்பு சுவைகளைக் கொண்டது. சித்தமருத்துவ தத்துவங்களின் படி பித்த தோசத்தை சமப்படுத்தக் கூடியது. மதுமேக நோயில் சிறந்த பலனைத் தரக்கூடியது. “வல்லாரை யிலையை யுண்ண மடிந்திடும் பயித்தி யங்கள்அல்லாத கறைக்கி ராணி யனலுடன் பெரிப்பு மேகம்பொல்லாத மற்று நோய்கள் போமென நந்திக் கந்நாள்எல்லார்க்கு முதல்வ னாய விறைபர்ந் […]

மேலும் பார்க்க

நவீன விவசாயமும் உணவுப் புரட்சியும்

17 நிமிட வாசிப்பு | 20163 பார்வைகள்

அறிமுகம் கடந்த பல நூற்றாண்டுகளாகப் பாரம்பரிய விவசாய முறைகளைப் பயன்படுத்தி வளர்ந்துவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சுகாதாரமான உணவை, எமது விவசாயப் பெருமக்களால் அனைத்து மக்களுக்கும் வழங்க முடிந்தது. எனினும் நான்காம் அத்தியாயத்தில் குறிப்பிட்டது போல் 18 ஆம் நூற்றாண்டில் மனிதப் பெருக்கத்தின் அசுர வளர்ச்சியானது மிகப் பயங்கரமான உணவுப் பஞ்சம், இடப்பற்றாக்குறை, வளப்பற்றாக்குறை, காலநிலை மாற்றம், நாடுகளுக்கு இடையான போட்டி எனப் பல விளைவுகளை ஏற்படுத்தியது. பாரம்பரிய முறைகள் […]

மேலும் பார்க்க

நிச்சயமற்ற கோப்பியின் வீழ்ச்சியும் நிலையான தேயிலையின் ஆதிக்கமும்

16 நிமிட வாசிப்பு | 8320 பார்வைகள்
February 8, 2023 | பி. ஏ. காதர்

கோப்பியின் பரிதாப வீழ்ச்சியும் மாற்று முயற்சிகளும் கோப்பி நோய் சுனாமி போல் ஓரிரவுக்குள் கோப்பிப் பெருந்தோட்டத்தை அழித்துவிடவில்லை. அதன் பரவல் மெதுவாக ஆனால் நிச்சயமானதாக நடைபெற்றது. கோப்பிப் பெருந்தோட்ட உற்பத்தி முற்றாக அழிவதற்கு சுமார் 20 வருடம் பிடித்தது.  பலரும்அறியாத  ஒரு விடயம் என்னவென்றால் இந்நோய் 1861 ஆம் ஆண்டு கென்யாவில் வளர்ந்த காட்டுக் கோப்பியில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆயினும், ஸ்டூவர்ட் மெக்கூக் மற்றும் ஜான் வாண்டர்மீர் ஆகிய இருவரின் […]

மேலும் பார்க்க

கீழைக்கரைக்கான எழுத்துச் சான்றுகள் : நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டு I

18 நிமிட வாசிப்பு | 12246 பார்வைகள்

அது 1967ஆம் ஆண்டு. பேராசிரியர் சி.பத்மநாதன் யாழ்ப்பாண வைபவமாலை நூலைப் பதிப்பிப்பதற்காக அதன் சுவடிகளைத் தேடிக்கொண்டிருந்தபோது இலண்டனிலுள்ள பிரித்தானிய அருங்காட்சியகத்தில் ஒரு சுவாரசியமான கையெழுத்துப் பிரதியொன்றைக் கண்டடைந்தார். அப்பிரதி “நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டு” என்று பெயரிடப்பட்டிருந்தது. அப்பெயர் கொண்ட நூல் பற்றிய உரையாடல் எதுவும் அவருக்குத் தெரிந்தவரை ஈழத்துப் புலமைத்தளத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கவில்லை. எனவே அந்த மைப்பிரதியைக் கவனமாக ஆராய்ந்த அவர், அந்நூலை சிறு முன்னுரையுடன் 1976ஆம் ஆண்டு வெளியான அனைத்துலகத் […]

மேலும் பார்க்க

மதசார்பில்லாக் கருத்தியல்

18 நிமிட வாசிப்பு | 9035 பார்வைகள்

மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக (கி.மு 7 தொடக்கம் கி.மு 3ஆம் நூற்றாண்டுகள் வரை) குறிஞ்சி, முல்லை, நெய்தல் ஆகிய திணைகளின் இயற்கை விளைபொருட்களது வணிகமும் – வணிக எழுச்சியுடன் கைகோர்த்தவாறு கைத்தொழில் விருத்தியும் ஏற்படுத்தித் தந்த வாழ்வியல் செழிப்பு தமிழகத்தில் வீறுமிக்க பண்பாட்டு எழுச்சி ஏற்பட வழிகோலியது. தமது ஆள்புலத்தை விரிவாக்கும் ஆக்கிரமிப்பு யுத்தங்களை எவராலும் மேற்கொள்ள இயலாத வாழ்நிலை காரணமாக திணைகள் ஒவ்வொன்றுக்கும் இடையே சமத்துவமான பரிமாற்றங்கள் நிலவின; […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (13)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)