யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வரலாற்றுத் தகவல் மூலங்களாக நிலப்படங்கள்

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் யாழ்ப்பாணக் கட்டளையகம் – 3

15 நிமிட வாசிப்பு | 2600 பார்வைகள்

இந்தத் தொடரின் சென்ற இரண்டு கட்டுரைகளில் லெயுசிக்காம் நிலப்படத் தொகுப்பிலுள்ள யாழ்ப்பாணக் கட்டளையகத்தை முழுமையாகக் காட்டும் நிலப்படத்தின் சில அம்சங்கள் குறித்து ஆராய்ந்தோம். அதன் தொடர்ச்சியாக, இந்தக் கட்டுரையிலும் மேற்படி நிலப்படத்தில் உள்ள வேறு சில அம்சங்களைப் பற்றிப் பார்க்கலாம். போக்குவரத்தும் வீதிகளும் ஏற்கெனவே யாழ்ப்பாணக் கட்டளையகத்தைக் காட்டும் தூர்சியின் நிலப்படம் தொடர்பாக எழுதியபோது, அக்காலத்தில் கட்டளையகத்தில் இருந்த வீதிகளைப் பற்றியும் விளக்கினோம். உண்மையில் தூர்சியின் நிலப்படம் வரைந்த காலத்துக்கும் […]

மேலும் பார்க்க

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் யாழ்ப்பாணக் கட்டளையகம் – 2

16 நிமிட வாசிப்பு | 4823 பார்வைகள்

இந்தத் தொடரின் சென்ற கட்டுரையில் லெயுசிக்காம் நிலப்படத் தொகுப்பிலுள்ள யாழ்ப்பாணக் கட்டளையகத்தை முழுமையாகக் காட்டும் நிலப்படத்தின் சில அம்சங்கள் குறித்து ஆராய்ந்தோம். அதன் தொடர்ச்சியாக, இந்தக் கட்டுரையில் மேற்படி நிலப்படத்தில் வேறு சில அம்சங்களைப் பற்றிப் பார்க்கலாம். கோட்டைகளும் நகரங்களும் இந்த நிலப்படத்திலும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் யாழ்ப்பாணக் கோட்டை, ஆனையிறவுக் கோட்டை, பெஸ்ச்சூட்டர் கோட்டை, பைல் கோட்டை என்பவற்றையும்; தீவுப் பகுதியில் ஊர்காவற்றுறைக் கடற் கோட்டையையும்; தலை நிலத்தில் பூநகரிக் […]

மேலும் பார்க்க

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் யாழ்ப்பாணக் கட்டளையகம் – 1

11 நிமிட வாசிப்பு | 4732 பார்வைகள்

இந்தத் தொடரின் சென்ற இரண்டு கட்டுரைகளிலும் 1698 ஆம் ஆண்டில் கிறிஸ்டியானோ தூர்சி என்பவர் வரைந்த, யாழ்ப்பாணக் கட்டளையகத்தைக் காட்டும் நிலப்படத்தில் காணப்படும் பல்வேறு தகவல்களைப்பற்றியும் அவற்றின் வரலாற்றுத் தொடர்புகள் பற்றியும் ஆராய்ந்தோம். அடுத்த சில கட்டுரைகளில் 1719 ஆம் ஆண்டில் மார்ட்டினஸ் லெயுசிக்காம் (Martinus Leusecam) என்பவர் தொகுத்த யாழ்ப்பாணக் கட்டளையகம் தொடர்பான ஒரு தொகுப்பில் அடங்கிய நிலப்படங்கள் தரும் தகவல்கள் பற்றிப் பார்க்கலாம்.     நெதர்லாந்தின் தேசிய ஆவணக் […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணக் கட்டளையகத்தைக் காட்டும் நிலப்படங்கள் – பகுதி 2

14 நிமிட வாசிப்பு | 5005 பார்வைகள்

சென்ற கட்டுரையில் 1598 ஆம் ஆண்டு யான் கிறிஸ்டியான்ஸ் தூர்சி வரைந்த நிலப்படத்தில் உள்ள சில தகவல்கள் குறித்தும், அவை வரலாற்று நிகழ்வுகளோடு கொண்டுள்ள தொடர்புகள் பற்றியும் விளக்கினோம். குறிப்பாக, மேற்படி நிலப்படம் காட்டும் நிர்வாகப் பிரிவு எல்லைகள், வீதிகள், கோட்டைகள் என்பவற்றைப்பற்றிய ஒரு விளக்கமாக அக்கட்டுரை அமைந்தது. அதே நிலப்படத்திலுள்ள ஆறுகள், ஊர்கள், மடங்கள் முதலிய பல்வேறு அம்சங்கள் தொடர்பிலான தகவல்களை இந்தக் கட்டுரையில் ஆராயலாம்.  ஊர்கள் இந்நிலப்படத்தில் […]

மேலும் பார்க்க

யாழ்ப்பாணக் கட்டளையகத்தைக் காட்டும் நிலப்படங்கள் – பகுதி 1

16 நிமிட வாசிப்பு | 5720 பார்வைகள்

17 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலிருந்து யாழ்ப்பாணக் கட்டளையகத்தைத் தனியாகக் காட்டும் நிலப்படங்கள் கிடைக்கின்றன. 1698 ஆம் ஆண்டில் யான் கிறிஸ்டியாஸ் தூர்சி (Jan Christiaensz Toorsee) என்பவர் வரைந்த ‘யாழ்ப்பாணப் பட்டினத்தினதும் வன்னியினதும் நிலப்படம்’ என்று தலைப்பிட்ட நிலப்படம் ஒன்று நெதர்லாந்திலுள்ள மொழியியல், புவியியல், இனவியல் என்பவற்றுக்கான அரச நிறுவனத்தில் (Koninklijk Instituut voor taal-, Land- en Volkenkunde) உள்ளது.1 இந்நிலப்படத்தில் உள்ள தகவலின்படி ஏற்கெனவே 1679 […]

மேலும் பார்க்க

18 ஆம் நூற்றாண்டின் நிலப்படங்களில் யாழ்ப்பாணக் குடாநாடும் அதை அண்டிய பகுதிகளும்

16 நிமிட வாசிப்பு | 4901 பார்வைகள்

17 ஆம் நூற்றாண்டில் ஒல்லாந்தரால் வரையப்பட்ட இலங்கையின் நிலப்படங்களில் யாழ்ப்பாணத்தையும் அதை அண்டிய பகுதிகளையும் பற்றிய தகவல்கள் குறித்து ஏற்கெனவே பார்த்தோம். 18 ஆம் நூற்றாண்டில் இறுதி நான்கு ஆண்டுகள் நீங்கலாக, இலங்கை ஒல்லாந்தரின் ஆட்சியின் கீழேயே இருந்தது. அக்காலத்தில் வரையப்பட்ட இலங்கைப் படங்களில், தீவின் வடிவம் படிப்படியாகத் திருத்தமடைந்து வந்தது. அத்துடன், பல்வேறு தேவைகளுக்காக இலங்கையின் வடபகுதியின் பல்வேறு பகுதிகளைக் காட்டும் விவரமான நிலப்படங்களையும் வரைந்தனர். அதேவேளை, இக்காலப்பகுதியில் […]

மேலும் பார்க்க

17 ஆம் நூற்றாண்டின் நிலப்படங்களில் யாழ்ப்பாணக் குடாநாடும் அதை அண்டிய தலைநிலப் பகுதிகளும்

20 நிமிட வாசிப்பு | 8723 பார்வைகள்

17 ஆம் நூற்றாண்டின் இலங்கைப்படங்களில் யாழ்ப்பாணக் குடாநாட்டை அண்டிய தீவுகள் குறித்த தகவல்களை ஏற்கெனவே பார்த்தோம். அப்படங்களில் யாழ்ப்பாணக் குடாநாடு தொடர்பிலும் அதை அண்டித் தலைநிலத்தில் உள்ள பகுதிகள் தொடர்பிலும் காணப்படும் தகவல்களைத் தொடர்ந்து பார்க்கலாம். அந்நூற்றாண்டில் 1558 வரையான காலப் பகுதியைச் சேர்ந்த இலங்கை நிலப்படங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டைத் தெளிவாகக் காட்டவில்லை என்றும், அப்பகுதி தொடர்பில் குறிப்பிடத்தக்க தகவல்கள் எதுவும் அப்படங்களில் இல்லை என்றும் ஏற்கெனவே அறிந்துகொண்டோம். ஒல்லாந்தர் […]

மேலும் பார்க்க

17 ஆம் நூற்றாண்டின் நிலப்படங்களில் யாழ்ப்பாணத்துத் தீவுகள்

17 நிமிட வாசிப்பு | 6877 பார்வைகள்

17 ஆம் நூற்றாண்டில், போர்த்துக்கேயரின் ஆதிக்கத்தின் கீழிருந்த இலங்கையின் கரையோரப் பகுதிகள் படிப்படியாக ஒல்லாந்தரின் ஆளுகைக்குள் வந்தன. இறுதியாக, 1658 ஆம் ஆண்டு யாழ்ப்பாண இராச்சியப் பகுதிகளை ஒல்லாந்தர் கைப்பற்றினர். ஒல்லாந்தர் ஆட்சிக் காலத் தொடக்கத்தில் வரையப்பட்ட இலங்கைத் தீவின் நிலப்படங்களில் போர்த்துக்கேயர் கால நிலப்படங்களின் தாக்கம் காணப்பட்டபோதும், ஒல்லாந்தர்கால நிலப்படங்கள் தரத்திலும் துல்லியத்திலும் முன்னேற்றமடைந்து வந்தன. 1658 இற்கு முந்திய ஒல்லாந்தரின் இலங்கைப் படங்கள் யாழ்ப்பாண இராச்சியத்தை ஒல்லாந்தர் […]

மேலும் பார்க்க

போர்த்துக்கேயர்கால நிலப்படங்கள்

12 நிமிட வாசிப்பு | 11544 பார்வைகள்

முன்னர் விளக்கப்பட்ட சான்செசின் இலங்கைப் படம், யாழ்ப்பாண இராச்சியம்  போர்த்துக்கேயரின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு முன் வரையப்பட்டது. யாழ்ப்பாணம் போர்த்துக்கேயரின் நேரடி ஆட்சிக்குள் வந்த பின்னரும் இலங்கைப் படங்களும் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளைத் தனியாகக் காட்டும் நிலப்படங்களும் வரையப்பட்டன. அவற்றுட் சிலவற்றைப் பற்றிக் கீழே பார்க்கலாம். கொன்ஸ்டன்டைன் டி சாவின் நிலப்படத் தொகுப்பிலுள்ள இலங்கைப் படம் போர்த்துக்கேயர் காலத்தில் இலங்கையின் ஆளுநராகப் பதவி வகித்த கொன்ஸ்டன்டைன் டி சா, 1628 […]

மேலும் பார்க்க

சிப்பிரியானோ சான்செசின் இலங்கை நிலப்படம்

13 நிமிட வாசிப்பு | 7943 பார்வைகள்

இத்தொடரின் முந்திய பகுதியில்  இலங்கையைக் காட்டும் மிகப் பழைய நிலப்படத்தில் இலங்கையின் வட பகுதி தொடர்பாகக் காணப்படும் தகவல்களைக் குறித்துப் பார்த்தோம். இந்தப் பகுதியிலே சில குடியேற்றவாதக்கால இலங்கைப் படங்களில் பொதுவாக இலங்கையின் வடபகுதி பற்றியும் குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசம் தொடர்பாகவும் காணப்படும் தகவல்களைப் பற்றிப் பார்க்கலாம். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் கால இலங்கை நிலப்படங்கள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தொலமி திரட்டிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட இலங்கையின் நிலப்படத்துக்குப் […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • April 2024 (21)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)
  • March 2023 (25)