பாக்கியநாதன் அகிலன்

ஈழத் தமிழ் உணவு மரபுரிமை

7 நிமிட வாசிப்பு | 9191 பார்வைகள்

கொழும்பிலுள்ள பிரபலமான ‘சைவ உணவகங்கள்’ (???) என அழைக்கப்படும்  மரக்கறி உணவுச்சாலையில் நண்பர்களுடன் உணவருந்திக் கொண்டிருக்கையில் ஈழத்தமிழர்களின் உணவுப் பாணியிற் சமைக்கப்பட்ட அல்லது பாரம்பரிய ஈழத்தமிழ் உணவுகளை இலங்கையில் எங்கு சாப்பிடலாம் என்ற ஒரு உரையாடல் எழுந்தது. அப்படியொரு இடம் இலங்கையின் தலைநகரத்திலோ – தமிழ் மக்களின் பூர்வீகமாக வாழ்ந்து வருமிடங்களிலோ இல்லை என்பது துரதிர்ஷ்டவசமான ஒரு உண்மை. சில வேளைகளில் அவ்வகைப்பட்ட அதிகாரபூர்வமான உள்ளூர் உணவுச்சாலை என சில […]

மேலும் பார்க்க

விரைந்து மறையும் சுதேசிய விளையாட்டுக்கள்

5 நிமிட வாசிப்பு | 7709 பார்வைகள்

ஆலையிலே சோலையிலே ஆலங்காடிச் சந்தையிலே கிட்டிப்புள்ளும் பம்பரமும் கிறுகியடிக்க பாலாறு பாலாறு பாலாறு பாலாறு.. (நாட்டர்பாடல்) காலனிய காலத்தோடு நடந்தேறிய பண்பாட்டு மாற்றங்களில் பிரதானமானவொன்று சுதேசிய விளையாட்டுக்களின் தேய்வும் – அதனிடத்தை மேற்கத்தைய விளையாட்டுக்கள் இட்டு நிரப்பியமையுமாகும். இது விளையாட்டுக்களை மட்டுமின்றி அதன் நினைவுகளைக் கூட எங்கள் எண்ணங்களில் இருந்து பெரிதும் துடைத்தளித்து விட்டன. ஆங்காங்கு பாரம்பரியமாக தொடர்ந்த சிலவும், இன்றைய கல்வி உருவாக்கிய ‘படிப்பு’ எனும் பௌதீக – […]

மேலும் பார்க்க

தேயும் ஈழத் தமிழ்மொழி

10 நிமிட வாசிப்பு | 6513 பார்வைகள்

  சந்தேகம் இல்லாமல் பண்பாட்டின் ஏனைய அலகுகள் யாவையும் போல பேசும் மொழியும் ஒரு மாறும் பொதுமைதான். ஆனால், அண்மைய ஒரு தசாப்த காலமாக ஈழத் தமிழ் மொழி சென்று கொண்டிருக்கும் மாறு திசையும் – அதன் வேகமும் – அந்த மாற்றத்தின் காரணங்களும் அதன் காவிகளும் – அது தொடர்பில் எம்மிடமுள்ள அசட்டையும் பண்பாட்டு நோக்கில் வேதனை தருமொன்றாக இருக்கிறது.  இன்று வரைக்கும் தமிழ் நாட்டில் பலரிடம் ‘ஈழத்தமிழ் […]

மேலும் பார்க்க

ஈழத்துப் பறை: மீட்டெடுத்தலும் கொண்டாடலும் வேண்டி…!

10 நிமிட வாசிப்பு | 8710 பார்வைகள்

2017இல் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்குகின்ற கலையார்வலர் குழுவொன்று தென்னிந்திய ‘பறை’ வாத்தியத்தை யாழ்ப்பாணத்திலும் இலங்கைத் தீவின் வேறு சில பிராந்தியங்களிலும் உள்ள ஆர்வலர்களுக்கு பயிற்றுவித்தது. இதற்காக தமிழகத்திலிருந்து ‘பறை’ வாசிக்கும் ஒரு குழுவினர் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். மேற்படி ‘பறை’ வாத்தியக் கருவி இலங்கையில் வாசிக்கப்படும் பறை மேள வடிவத்திலிருந்து மாறுபட்ட ஒன்று. இந்தக் கருவி இலங்கையில் மலையக மக்களிடம் பாவனையில் உள்ளது. அங்கு அது ‘தப்பு வாத்தியம்’ […]

மேலும் பார்க்க

வீழ்ச்சியின் திசையில் பாரம்பரிய தமிழ் செதுக்குப் பாரம்பரியம்

10 நிமிட வாசிப்பு | 4329 பார்வைகள்

மரம், கல், உலோக வார்ப்பு வேலைகளை உள்ளடக்கிய பாரம்பரியத் தமிழ் செதுக்குப் பாரம்பரியம் பல நூற்றாண்டு கால வரலாற்றை உடையவொன்றாக இலங்கை உள்ளிட்ட தென்னிந்திய பண்பாட்டு வட்டகையின் பல்வேறுபட்ட பிராந்தியங்களிலும் வழங்கி வருகிறது. பொதுவாக விஸ்வகர்ம குலத்தினர் எனச் சிற்ப சாஸ்திர நூல்களால் இனங்காணப்படுகின்ற சமூகக் குழுவினர் இச் செதுக்குத் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளூரில் பஞ்சகம்மாளர் என அழைக்கப்படுகின்ற இவர்கள் வெவ்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த பல்வேறு பட்டறைகளை அல்லது […]

மேலும் பார்க்க

அச்சுறுத்தலுக்குள் ஈழத் தமிழ் அச்சுடல் : அச்சு ஊடக மரபுரிமைகளும் ஆவணக் காப்பும்

10 நிமிட வாசிப்பு | 5603 பார்வைகள்

நவீன காலத்தில் அச்சு முதலாளித்துவம் பெருக்கெடுத்த பெரும் பண்பாட்டுக் களங்களில் ஈழத்தமிழ் பண்பாடும் ஒன்றாகும். காலனியம் உருவாக்கிய சமூக, பண்பாட்டு தொழில்நுட்ப நிலவரங்களின் விளைவாக அது காணப்பட்டது. உலகின் முதலாவது அச்சிடப்பட்ட நூல் வெளிவந்து ஒரு நூற்றாண்டுக்குள்ளாகவே (1465) தமிழின் முதலச்சுப் புத்தகம் ‘தம்பிரான் வணக்கம்’ (1554) இல் கேரளத்திலிருந்து வெளியாகியது. இவற்றைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான அச்சிடப்பட்ட நூல்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், துண்டுப்பிரசுரங்கள் எனப் பல்வேறு வடிவங்களிற் தொடர்ச்சியாக, தீவின் […]

மேலும் பார்க்க

சங்கடப் படலை – அருகிச் செல்லும் பாரம்பரியம்

6 நிமிட வாசிப்பு | 6253 பார்வைகள்

யாழ்ப்பாணப் பாரம்பரிய வீடுகளிற் காணக் கிடைக்கக்கூடிய கட்டுமான அலகுகளில் ஒன்று சங்கடப் படலை எனும் வாயிற் கட்டட அமைப்பாகும். பேராசிரியர் கா.சிவத்தம்பி யாழ்ப்பாணத்தில் வீடு என்பது வளவுடன் கூடிய வேலியால் (மதிலால்) எல்லையிடப்பட்ட முழு மனையமைப்பு பரப்பாகும் என்பார். அதாவது வீட்டுக்கட்டடம், கொட்டில், கிணற்றடி, முற்றம் முதலியவற்றை உள்ளடக்கிய கட்டுமானங்களும், அதனைச் சூழ்ந்த எல்லையிடப்பட்ட பரப்பே யாழ்ப்பாணத்தில் வீடென்பதன் பரந்த பொருள் கொள்ளலாகும். இந்த எல்லையானது பாரம்பரியமாகப் பனையோலை அல்லது […]

மேலும் பார்க்க

பாடசாலைகளின் கட்டட மரபுரிமைகள்: பழைய மாணவர் சங்கங்களும் அபிவிருத்தி நிதிகளும்

10 நிமிட வாசிப்பு | 4511 பார்வைகள்

பெரும்பாலும் ஆசிரியர்களின் வீட்டுத் திண்ணைகள், முற்றம், பெருமரச்சாரல்கள் சார்ந்து மிகச் சுருக்கமான ஒரு இடத்தினுள் சுழன்றுகொண்டிருந்த ஈழத்துக் பள்ளிக் கல்விப்பாரம்பரியத்தை அதன் அனைத்து அர்த்தங்களிலும் வெடித்துப் பரவச் செய்ததில் காலனியத்திற்கு மிக முக்கியமான இடமுண்டு. கிறிஸ்தவ மிஷனரிகளும் – அதற்கு எதிரிடையாக எழுந்த சைவக்கல்வி இயக்கங்களும், ஊர்கள் தோறும் ஒன்றுக்கு மேற்பட்ட கல்விச்சாலைகளைத் திறந்துவிட்டன. அவை தமது பாடத்திட்டத்தில் மட்டுமின்றி தமது பாடசாலைக் கட்டடங்களிலும் தத்தமது மதப் பண்பாட்டுக் கருத்துநிலை […]

மேலும் பார்க்க

பெண்களும் மரபுரிமைகளும்: எழுதப்படாத பக்கங்கள்

7 நிமிட வாசிப்பு | 4654 பார்வைகள்

பால்நிலை அசமந்தம், ஆண்முதன்மை ஆகிய சமூக பண்பாட்டு நிலவரங்கள் பலவேளைகளில் சமூக இயக்கத்தில் பெண்களது செயற்பாடுகள், பங்களிப்புக்கள், தனித்துவங்களை அடையாளப்படுத்தாமல் விட்டுவிடுகிறது. இதனால், பெண்கள் உட்பட்ட சிறுபான்மைக் குழுக்களது தனியடையாளங்கள், வரலாற்று வகிபாகங்கள் என்பன சமூக பண்பாட்டு வரலாறுகளில் தொடர்ச்சியாக விடுபட்ட – எழுதப்படாத பக்கங்களாகவே உள்ளன. இந்த நிலைமையானது மரபுரிமைகள் பற்றிய எழுத்துக்களில் மேலோங்கியுள்ள மேட்டுக்குடிமைத் (elitism)  தன்மையை  ஒத்த இன்னொரு பிரச்சினைக்குரிய அம்சமாகும். அவ்வகையில் பால்நிலைப்பட்ட அசமந்தமானது […]

மேலும் பார்க்க

தவக்காலச் சிந்தனைகள்: உடக்கு பாஸ்க்கும் பஸாமும் உயிர்த்த ஆண்டவர் நிகழ்வும்

10 நிமிட வாசிப்பு | 4394 பார்வைகள்

உடக்கு தமிழ் கிறிஸ்தவத்திற்கு ஒரு ஈழ மரபுண்டு. அது ரோமின் திருச்சபை ஆளுகைக்குட்பட்டதாயினும், தமிழ் கிறிஸ்தவத்தின் உலகளாவிய தன்மைகளைப் பகிர்ந்து கொண்டதாயினும், அதன் அமைவிடம் – சமூக பண்பாட்டு வரலாறு – அதன் வரலாற்று உருவாக்கத்தில் மேலாதிக்கஞ் செலுத்திய காரணிகள் – அதன் உள்ளூர் பண்பாட்டுக் களங்கள் மற்றும் அவற்றின் மோதல்கள் என்பனவற்றினால் அதன் சிறப்புப் பண்புகள் உருவாகின எனச் சுருக்கமாகக் கூறலாம். அதற்கு அதற்கான தனிமுகம் உண்டு. ஆனால், […]

மேலும் பார்க்க
அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)