சிவசுப்பிரமணியம் பத்மநாதன்

புராதனகால யாழ்ப்பாணத்தில் பௌத்தமும் தமிழும் – பகுதி 3

17 நிமிட வாசிப்பு | 7631 பார்வைகள்

பௌத்த சிற்பங்கள் இலங்கையில் உன்னதமான வேலைப்பாடுகளான பௌத்த சிற்பங்கள் பெருந்தொகையிலே காணப்படுகின்றன. ஆதியில் தர்மச்சக்கரம், புத்தர்பாதம், போதிமரம் என்பனவே வழிபாட்டுச் சின்னங்களாக விளங்கின. ஆயினும் கிரேக்கரின் செல்வாக்கினால் உருவ வழிபாடு இந்திய சமயங்களிடையில் வழமையாகிவிட்டது. இலங்கையில் இரண்டாம் நூற்றாண்டளவில் புத்தர் படிமங்களை வழிபடுவது வழமையாகிவிட்டது. யாழ்ப்பாணத்திலுள்ள புத்தர் படிமங்கள் கிபி. 300-500 வரையான காலப்பகுதிக்குரியனவாகத் தெரிகின்றன. கந்தரோடை, சுண்ணாகம், வல்லிபுரம், நவக்கீரி ஆகியவிடங்களிற் புத்தர் படிமங்கள் காணப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்துப் பௌத்த சமயந் […]

மேலும் பார்க்க

புராதனகால யாழ்ப்பாணத்தில் பௌத்தமும் தமிழும் – பகுதி 2

16 நிமிட வாசிப்பு | 6292 பார்வைகள்

யாழ்ப்பாணக் குடாநாட்டினை நாகதீப என்று மகாவம்சம் முதலான பாளி நூல்கள் குறிப்பிடுகின்றன. அதனை நாகநாடு என்று மணிமேகலையிற் குறிப்பிட்டுள்ளனர். நாகர் செறிந்து வாழ்ந்தமையின் காரணமாக அப்பெயர் உருவாகியுள்ளது. மட்டக்களப்பு பூர்வசரித்திரம் நாகதீவு என்னும் பெயரால் யாழ்ப்பாணத்தைக் குறிப்பிடுகின்றது. நாகதீபத்தில் ஆதிக்கம் பெற்றிருந்த நாக அரசர்களைப் பற்றிய கதை மகாவம்சத்திற் சொல்லப்படுகின்றது. நாகதீவின் அருகிலே கடலில் அமைந்துள்ள தீவொன்றில் காணப்பட்டதும் அதிசயங்களின் நிலைக்களம் ஆகியதுமான பௌத்த பீடமொன்றினைக் கைவசப்படுத்தும் நோக்கத்துடன் மகோதரன், […]

மேலும் பார்க்க

புராதனகால யாழ்ப்பாணத்தில் பௌத்தமும் தமிழும் – பகுதி 1

19 நிமிட வாசிப்பு | 7280 பார்வைகள்

அறிமுகம் இலங்கையில் கிமு. பத்தாம் நூற்றாண்டு முதலாகப் பரவிய பெருங்கற்காலப் பண்பாடு நாகரோடு தொடர்புடையது. அந்தப் பண்பாட்டினை நாகர் பரப்பினார்கள் என்பதையும் அவர்கள் தமிழ் மொழி பேசியவர்கள் என்பதையும் அப்பண்பாட்டு மக்களின் ஈமத் தலங்கள் சிலவற்றிலுள்ள ஈமக் கல்லறைகளின் கல்வெட்டுகளினால் அறிய முடிகின்றது. எழுத்தின் பயன்பாடு அறிமுகமாகியதும் நாகர் ஈமக் கல்லறைகளிலே சொற்களையும் இரு வசனங்களையும் ஒரு கிரயாபூர்வமான முறையிலே பதிவுசெய்தனர். அவை நாகரைப் பற்றியவை. தமிழ் மொழியில் எழுதப்பட்டவை. தமிழ்ப் […]

மேலும் பார்க்க

ஈழமும் தமிழகமும் : பௌத்த சமயத் தொடர்புகள் – பகுதி 2

13 நிமிட வாசிப்பு | 5460 பார்வைகள்

தமிழகத்துப் பௌத்தப் பள்ளிகளும் உரையாசிரியர்களும் பாளி மொழியில் அமைந்த பௌத்த இலக்கியங்களுக்கு உரை எழுதியவர்களில் புத்ததத்தர், புத்தகோஷர் என்போர் மேதாவிலாசமானவர்கள். அவர்களில் மூத்தவரான புத்ததத்தர் காவிரிப்பூம் பட்டினத்திலிருந்த விகாரங்களில் வாழ்ந்தவர். அவர் இளமைக் காலத்திலே மகாவிகாரையிலே தங்கியிருந்து துறவியாக ஞானஸ்தானம் பெற்றவர். வடஇந்தியாவிலே பிறந்த புத்தகோஷர் காஞ்சிபுரம், காவிப்பூம் பட்டினம், அநுராதபுரம் ஆகியவற்றிலுள்ள விகாரங்களிலே தங்கியிருந்து திரிபிடகத்தின் ஏடுகளை ஆய்வு செய்தவர். அவர்கள் இருவரும் எழுதிய நூல்கள் தேரவாதம் நிலைபெறும் […]

மேலும் பார்க்க

ஈழமும் தமிழகமும் : பௌத்த சமயத் தொடர்புகள் – பகுதி 1

25 நிமிட வாசிப்பு | 6149 பார்வைகள்

பௌத்தசமயத்தின் செல்வாக்கினைப் பொறுத்தவரையில் இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையிலே சில குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உண்டு. இலங்கையில் கிமு. மூன்றாம் நூற்றாண்டில் மோரிய அரசனாகிய அசோகனின் காலத்திலே பௌத்தம் பரவத் தொடங்கியது. அதனைப் பற்றியவொரு வரலாறு இலங்கையில் உற்பத்தியான தீபவம்சம், மகாவம்சம் முதலான நூல்களிற் சொல்லப்படுகின்றது. மோரியரின் தலைநகரான பாடலிபுரத்திலே மொக்கலிபுத்த தீஸரின் தலைமையிற் கூடிய மூன்றாம் பௌத்த மாநாட்டிலே பௌத்த  சமயத்தைப் பரதகண்டத்திலும் அதற்கப்பாலுள்ள தேசங்களிலும் பரப்புவதற்கெனக் குழுக்களை அனுப்புவதற்குத் தீர்மானித்தார்கள். […]

மேலும் பார்க்க